For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்குளை வெண்மையாக்க பேக்கிங் சோடாவை ட்ரை பண்ணுங்க!!

By Super
|

ஒவ்வொரு பெண்ணுக்கும் உடற்பகுதியில் உள்ள முடி தேவைப்படாத விஷயமாகவே உள்ளது. அவற்றை ரேஸர்கள், கிரீம்கள் அல்லது மெழுகு கொண்டு நீக்குவதும் அவசியமான விஷயமாகவே உள்ளது. முடி தொடர்பான இந்த பிரச்னைகள் மட்டுமல்லாமல், பல பெண்களின் கைகளின் உள்பகுதியிலும் இந்த பிரச்னைகள் இருக்கின்றன. இந்த கருப்பு பகுதிகளை நீக்குவது பலருக்கும் பிரச்னையான விஷயமாகவே உள்ளது. அவை பார்ப்பதற்கு மோசமாக இருப்பதுடன், இப்பெண்கள் கையில்லாத அல்லது அது போன்ற உடைகளை அணியும் போது அவர்களுக்கு சங்கோஜத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.

Lighten Dark Underarms using baking soda

கருப்பான அக்குள் இருப்பதற்கு சில பொதுவான காரணங்கள்:

• உங்களுடைய அக்குள்களை தொடர்ந்து நீங்கள் Nஷவிங் செய்யும் போது அவ்விடம் கருப்பாக மாறிவிடும்.

• வாணிப நோக்கில் விற்கப்படும் சில டியோடரண்டுகள், பர்ஃப்யூம்கள் இந்த வகையான நிறமிகளுக்கு காரணமாக அவைவதுண்டு.

• அகான்தோஸிஸ் நிக்ரிகான்ஸ் என்ற மருத்துவ ரீதியான காரணமும் இந்த பிரச்னைக்கு உண்டு. இந்த பிரச்னையின் காரணமாக உடலில் கருப்பு புள்ளிகள் உருவாகின்றன. • மிகவும் அதிகமாக வியர்வை வெளியேறி அதன் பாக்டீரியாக்கள் அக்குள்களில் சேர்ந்தால், அதன் விளைவாக கருப்பு நிறமிகள் உருவாகின்றன.

அக்குள்களை வெண்மையாக மாற்றும் சில வழிமுறைகள்

இந்நாட்களில் அக்குள்களின் கருப்பு நிறத்தை குறைக்கவும், வெண்மையாக்கவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. சில வழிமுறைகளை வீட்டில் செய்யக் கூடியவையாகவும், வேறு சில தோல் மருத்துவரின் ஆலோசனையுடனும் பின்பற்றலாம்.

வெளுக்க பயன்படுத்தும் பொருட்களான எலுமிச்சை, உருளைக்கிழங்கு, உரித்தெடுக்கும் பொருட்கள் மற்றும் வெண்மைப் படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே அக்குள்களை வெண்மைப் படுத்த முடியும். அது போன்று ஒரு வீட்டிலேயே பயன்படுத்தும் பொருளாகவே சமையல் சோடா உள்ளது. அக்குளை வெண்மையாக்கவும் மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்கவும் மிகவும் பயனுள்ள பொருளாக வீட்டிலுள்ள சமையல் சோடா உள்ளது. எளிதில் பாதிக்கப்படக் கூடிய தோல் அல்லது அரிப்பு ஏற்படும் தோல் கொண்டவர்கள் கூட எந்தவித பயமும் இல்லாமல் சமையல் சோடாவை பயன்படுத்தலாம். சமையல் சோடாவை எந்தவிதமான தோலை கொண்டவர்களும் பயன்படுத்தலாம்.

அக்குளை வெண்மையாக்குவதற்காக சமையல் சோடாவை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய சில அடிப்படை வழிமுறைகள்:

01. சமையல் சோடாவில் தேய்த்து கழுவுதல் - உங்களுடைய அக்குளை வெண்மையாக்க விரும்பினால் அந்த பகுதியை தொடர்ந்து நீங்கள் தேய்த்து கழுவ வேண்டும். இயற்கையான முறையில் இதனை செய்ய, சமையல் சோடாவையும், தண்ணீரையும் ஒன்றாக கலந்து கெட்டியான களிம்பு போல உருவாக்கி, அதனை உங்களுடைய அக்குளில் தடவவும். இதன் மூலம் உங்களுடைய அக்குளில் உள்ள இறந்த தோல் செல்கள் நீக்கப்படும். இறந்து போன தோல் செல்கள் உங்களின் அக்குள் கருப்பாக இருக்க முக்கிய காரணமாக விளங்குகின்றன.

02. சமையல் சோடா பேக் - கொள்ளு பவுடரை, எலுமிச்சை சாறு, மஞ்சள், ப்ளீச்சிங் பவுடர் தூள் மற்றும் தயிருடன் சேர்த்து பசை போல தயார் செய்யவும். முதலில் நீங்கள் இந்த பசையை தடவி விட்டு, அடுத்த 20 நிமிடங்களுக்கு காய வைக்க வேண்டும். அதன் பின்னர், குளுமையான தண்ணீரை விட்டு அக்குளில் தடவியுள்ள பசையை கழுவவும். அதற்குப் பின்னர், உங்களுடைய அக்குளில் டியோரண்டுக்குப் பதிலாக சமையல் சோடாவை போடுங்கள். இப்பொழுது கவனியுங்கள் அதிசயத்தை!

03. சமையல் சோடா டியோ - டியோரண்டுகள் அல்லது வியர்வை-எதிர் பொருட்களுக்குப் பதிலாக சமையல் சோடா அல்லது படிகாரத்தை அக்குளில் தடிவிப் பாருங்கள். இவை அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்வதுடன், துர்நாற்றம் வராமலும் தடுக்கின்றன.

04. சமையல் சோடா கிளீன்ஸர் - சமையல் சோடாவையும், வினிகரையும் கலந்து நீங்களாகவே உங்களுக்குத் தேவையான வெண்மைப்படுத்தும் முகமூடியை (Whitening Mask) செய்யலாம். இந்த பசைக்காக நீங்கள் வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி, நாளொன்றுக்கு இருமுறை போட்டுக் கொள்ளலாம். நீங்கள் வினிகர் மற்றும் சமையல் சோடாவை போடும் போது வரும் குமிழிகளைக் கண்டு குழப்பமடைய வேண்டாம். அந்த குமிழிகள் உடனடியாக வருவது குறைந்து விடும். மாறாக, நீங்கள் எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடாவை கலக்கலாம். அதனை சாதாரணமாக போட்டு விட்டு, அது காயும் வரை பொறுத்திருந்து, பின்னர் கழுவி விடவும்.

அக்குள்களை வெண்மையாக்கும் இந்த வழிமுறைகளை நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். ஒரே இரவில் அற்புதங்களை இது நிகழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மேலும், ரேஸர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்ப்பது நலம். ஏனெனில், கருப்பான அக்குள் உருவாக இவைதான் முக்கிய காரணங்களாக உள்ளன. முடிகளை நீக்குவதற்கு மெழுகை பயன்படுத்த தொடங்குங்கள். நீங்கள் வெண்மையான அக்குளைப் பெற வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் சொல்லும் வகையில் பொறுமையும் அவசியம்.

English summary

Lighten Dark Underarms using baking soda

Lighten Dark Underarms using baking soda
Desktop Bottom Promotion