For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகை கெடுக்கும் பிம்பிளை மறைய வைக்கும் ஜூஸ்கள்!!!

By Maha
|

முகத்தில் பிம்பிள் வந்தால், அதனால் ஏற்படும் வலி அதிகமாக இருப்பதோடு, அந்த பிம்பிள் உடைந்தால், அதிலிருந்து வெளிவரும் நீர்மம் சருமத்தின் மற்ற இடங்களில் படும் போது, பிம்பிளானது பரவிவிடும். இவ்வாறு பிம்பிள் முகத்தில் பரவும் போது, அது அழகையே பாழாக்கிவிடும். ஆகவே பலர் இந்த பிம்பிள் பிரச்சனையில் இருந்து விடுபட, கடைகளில் விற்கப்படும் பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பிம்பிள் தற்காலிகமாக போகுமே தவிர, அதனால் ஏற்படும் கருமையான தழும்புகள் போகாமல் அப்படியே இருக்கும்.

ஆனால் இந்த பிம்பிள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளைப் போக்க, ஒருசில அருமையான இயற்கை வைத்தியங்கள் உள்ளன. இவை பிம்பிளை போக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும், அந்த பொருட்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவும். அவை வேறொன்றும் இல்லை, சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான். அந்த பொருட்களை ஜூஸ் எடுத்து, அவற்றை முகத்தில் தடவி வந்தால், முகம் அழகாக பிம்பிள் இல்லாமல் இருக்கும்.

சரி, இப்போது பிம்பிளைப் போக்க உதவும் அந்த இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

தக்காளியை அரைத்து, அந்த சாற்றினை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள பிம்பிள் மற்றும் கருமையான தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். குறிப்பாக இந்த செயலை தினமும் செய்து வந்தால், அத்துடன் முகமும் தக்காளி போன்று அழகாக இருக்கும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரஸ் ஜூஸ் குடித்தால், கண்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அதே கேரட் ஜூஸை முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் போய்விடும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் இயற்கையாகலே ப்ளீச்சிங் தன்மை நிறைந்திருப்பதால், இதன் சாற்றினை முகத்தில் தடவினால், அவை பிம்பிளை விரைவில் மறையச் செய்யும். அதுமட்டுமின்றி, எலுமிச்சை முகத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்கி, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ்

பிம்பிளைப் போக்க உதவும் பொருட்களிலேயே கற்றாழை தான் மிகவும் சிறந்த பொருள். அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தடவி, உலர விட்டு, கழுவ வேண்டும். இதனால் பிம்பிள் நீங்குவதோடு, முகமும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.

பரங்கிக்காய் சாறு

பரங்கிக்காய் சாறு

பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், இதனை அரைத்து சாறு எடுத்து, முகத்தில் தடவி வந்தால், முகப்பரு மற்றும் பிம்பிள் மறைந்துவிடும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு பழத்தில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த ஜூஸை தினமும் குடிப்பதுடன், அதனை முகத்திலும் தடவி வர வேண்டும். இதனால் சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Juices To Clear Pimples

There are many home remedies that can work wonders however, they take their time. Applying creams is also one of the solutions to get rid of pimples. However, you can try some juices to clear pimples. These are some natural juices to clear pimples and also lighten the scar.
Desktop Bottom Promotion