For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலியை ஏற்படுத்தும் பிம்பிளை போக்குவதற்கான சில டிப்ஸ்...

By Maha
|

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முதன்மையானது தான் பிம்பிள். இத்தகைய பிம்பிள் முகத்தின் அழகை கெடுப்பதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். அதிலும் வலியின் போது பிம்பிளை அடிக்கடி தொடுவதால், அப்போது பிம்பிளானது வெடித்து பரவ ஆரம்பிக்கிறது. ஆகவே அத்தகைய பிம்பிளை போக்குவதற்கும், அதனால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்துவதற்கும் பல இயற்கை பொருட்கள் வீட்டின் சமையலறையிலேயே உள்ளது.

அத்தகைய பொருட்களைக் கொண்டு பராமரித்தால், நிச்சயம் பிம்பிள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி, ஒருசில பழங்களும் பிம்பிளால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தி, குணப்படுத்தும். எனவே பிம்பிள் வந்தால், உடனே அதிக பணம் செலவழித்து அதனைப் போக்குவதற்கு பதிலாக, எளிய பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே குணப்படுத்தலாம்.

சரி, இப்போது பிம்பிளினால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தி, அதனை முற்றிலும் போக்குவதற்கு பயன்படும் சில பொருட்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

பிம்பிளைப் போக்குவதற்கு எலுமிச்சை மிகச் சிறந்த பொருள். அதிலும் இந்த எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு பிம்பிள் உள்ள சருமத்தில் தேய்த்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். குறிப்பாக இந்த முறையை தினமும் மேற்கொண்டால், பிம்பிளால் ஏற்படும் வலியை குணப்படுத்துவதோடு, பிம்பிளையும் போக்கலாம்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வலியை ஏற்படுத்தும் பிம்பிள் மீது தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இல்லையெனில் வெந்தயக் கீரையை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

வேப்பிலை

வேப்பிலை

அக்காலத்தில் எல்லாம் பெண்கள் குளிக்கும் போது நீரில் சிறிது வேப்பிலையை போட்டு குளிப்பார்கள். அதனால் தான் அவர்களுக்கு சரும பிரச்சனைகள் எதுவும் வராமல் இருந்தது. ஆகவே அத்தகைய வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நிச்சயம் முகப்பரு மற்றும் பிம்பிள் விரைவில் குணமாகும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழையும் பல சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம், தினமும் இரண்டு முறை கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், நாளடைவில் பிம்பிள் நீங்கிவிடும்.

டீ ட்ரீ ஆயில் (Tea Tree Oil)

டீ ட்ரீ ஆயில் (Tea Tree Oil)

தினமும் மூன்று முறை டீ ட்ரீ ஆயிலைக் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்தால், அதில் உள்ள ஆன்டி-செப்டிக் பொருளால், பாக்டீரியாவானது அழிக்கப்பட்டு, விரைவில் பிம்பிளானது போய்விடும்.

தேன்

தேன்

ஒரு வாரத்திற்கு தொடர்ந்து தினமும் தேனை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முதலில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்துளைகள் நன்கு மூடி, பிம்பிள் உண்டாவதைத் தடுக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது தயிர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் செய்து, முகம் மற்றும் பிம்பிள் உள்ள இடங்களில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அசிட்டிக் தன்மை அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், பல சரும பிரச்சனைகளைப் போக்கலாம். அதிலும் ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து அரைத்து பொடி செய்து, தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த பேஸ்ட்டை பிம்பிள் உள்ள இடத்தில் தடவினால், வலி நீங்குவதோடு, பிம்பிளும் மறையும்.

திராட்சை

திராட்சை

ஆரஞ்சு பழத்தைப் போன்றே, திராட்சையிலும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. எனவே அந்த திராட்சையை இரண்டாக நறுக்கி, அதனை சருமத்தில் தேய்த்து, 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் பிம்பிள் மறைந்துவிடும்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

தினமும் இரவில் படுக்கும் முன், சிறிது டூத் பேஸ்ட்டை பிம்பிள் உள்ள இடத்தில் தடவி தூங்கி, காலையில் எழுந்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 3-4 நாட்கள் செய்தால், விரைவில் பிம்பிள் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ingredients To Soothe Painful Pimples

We have many things available at home which may help you to get rid of pimple problem. There are many ingredients available in your kitchen that will take away all your skin problems including acne and pimples. Let's have a look at the ingredients which you can use to treat pinful pimples and get a flawless and glowing skin.
Story first published: Tuesday, August 20, 2013, 12:15 [IST]
Desktop Bottom Promotion