For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரும வறட்சியைத் தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

By Maha
|

தற்போது பெரும்பாலானோரது சருமமானது மிகவும் வறட்சியுடன், முதுமை தோற்றத்தில் காணப்படுகிறது. மேலும் கடுமையான வானிலையால், சருமமானது எளிதில் வறட்சி அடைந்துவிடுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை வெளிப்படுகிறது. ஆகவே பலர் இத்தகைய வறட்சியைத் தடுப்பதற்கு பல அழகு சாதனப்பொருட்களைப் பயன்படுத்துவார்கள். அதற்கேற்றாற்போல், கடைகளிலும் கெமிக்கல் கலந்த பல மாய்ஸ்சுரைசர்கள் வந்துள்ளன.

இருப்பினும் அத்தகைய பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சருமத்தின் வறட்சியைப் போக்கலாம். ஏனெனில் அவை சரும செல்களை விரைவில் பாதித்து, சருமத்தின் அழகையே முற்றிலும் கெடுத்துவிடும். பொதுவாக சருமத்தில் ஈரத்தன்மையைத் தக்க வைத்தால், சருமமானது மென்மையாகவும், இளமைத் தோற்றத்துடனும், பொலிவோடும் காணப்படும். அதிலும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால், இவை அனைத்துமே எளிதில் கிடைக்கும்.

இப்போது சருமத்தின் வறட்சியைப் போக்குவதற்கு எந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் மற்றும் பால்

தேன் மற்றும் பால்

தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர். இது சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் பால் சரும செல்களை புதுப்பித்து, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். எனவே இவை இரண்டையும் கலந்து, சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சரும வறட்சியைத் தடுப்பதோடு, சருமத்தின் நிறமும் கூடும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் க்ரீம்

ஸ்ட்ராபெர்ரி மற்றும் க்ரீம்

சிறிது ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைத்து, பின்பு அதனை வெளியே எடுத்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின்பு ஸ்கரப் செய்து, கழுவினால், சருமத்தின் வறட்சியுடன், முகம் பொலிவோடும் காணப்படும்.

கற்றாழை

கற்றாழை

3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் திராட்சை விதை எண்ணெய் சேர்த்து கலந்து, நன்கு கிளறி, சருமத்தில் தடவி வந்தால் சரும வறட்சியைத் தடுக்கலாம். அதிலும் அதிகப்படியான எண்ணெய் பசை உள்ளவர்கள், இதனைப் பயன்படுத்தினால், அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

வறட்சியான சருமம் உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து தடவி வந்தால், சருமம் புதுப்பொலிவுடன் வறட்சியின்றி இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு நன்கு மசித்து, அதில் 1/2 கப் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாகவும், ஈரப்பசையுடனும், அழகாகவும் இருக்கும்.

வால்நட்

வால்நட்

வால்நட்ஸை அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடனே முகம் பொலிவாக காணப்படுவதோடு, சரும செல்களும் புத்துணர்ச்சியடையும்.

அழகான மற்றும் பொலிவான சருமம்

அழகான மற்றும் பொலிவான சருமம்

மேற்கூறியவற்றை பயன்படுத்தி வந்தால், சருமத்துளைகள் நன்கு சுவாசித்து, முகம் பிரகாசமாகவும், மென்மையாகவும், வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Homemade Moisturizers For Your Skin

Moisturizing helps keep you skin supple, young and glowing. But instead of buying moisturisers which contain a lot of harsh chemicals, why not opt for some Indian homemade moisturizers? They will have the desired effect and be soothing to your skin. Here are some natural, Indian homemade moisturizes.
Story first published: Monday, July 8, 2013, 14:03 [IST]
Desktop Bottom Promotion