For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்..

By Maha
|

உடலை பாதுகாப்பது சருமம் தான். உடல் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை வெளிப்படுத்துவதும் சருமம். மேலும் ஒருவர் எவ்வளவு தான் அழகாக அகத்தில் காணப்பட்டாலும், இந்த உலகம் சரியான மதிப்பை அளிக்காது. ஏனெனில் வெளித்தோற்றம் சரியாக இல்லாததால், ஒருவருக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிப்படுத்துவதற்கு போதிய வாய்ப்பு கிடைக்காமல் தடைப்படுகிறது. ஆகவே வெளித்தோற்றத்தையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் உணர வேண்டும். ஆனால் சிலர், மனம் மட்டும் அழகாக காணப்பட்டால் போதாதா என்று நினைத்து, புற அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பர்.

தற்போதைய உலகில் மனதை விட அழகிற்கு தான் பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எனவே அத்தகைய அழகை வெளிப்படுத்தும் சருமத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகிறது. ஆகவே அத்தகைய அழகை வெளிப்படுத்தும் சருமத்தை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்குமே நிச்சயம் தெரிய வேண்டும்.

சரி, இப்போது அந்த சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைப்பதற்கு எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கிய உணவுகள்

ஆரோக்கிய உணவுகள்

சருமம் நன்கு பொலிவோடு இருப்பதற்கு வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உண்டு, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளான மீன், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

உடலில் வறட்சி ஏற்படாமல் இருக்க தண்ணீர், இளநீர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, சருமம் நன்கு அழகாக காணப்படுவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

முகம் அழகாக காணப்பட உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருக்க வேண்டும். அதற்கு தினமும் குறைந்தது 30-45 நிமிடம் உடற்பயிற்சியானது மிகவும் அவசியம். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலும் நன்கு பிட்டாக அழகாக இருக்கும்.

தூக்கம்

தூக்கம்

தினமும் 7-8 மணிநேரம் தூக்கமானது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் தூக்கம் குறைவாக இருந்தால், உடல் சோர்வுடன் இருப்பதோடு, கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும். மேலும் தூங்கும் போது முகத்தை அழுத்தியவாறு, குப்புறப் படுக்க கூடாது. இதனால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

ஸ்ட்ரெச் மார்க்

ஸ்ட்ரெச் மார்க்

90% பெண்களுக்கு உடலில் ஸ்ட்ரெச் மார்க் உள்ளது. அதிலும் உடல் எடை திடீரென அதிகரித்து குறைவது, பிரசவத்திற்கு பின்னர் சருமம் சுருங்குவதால், உடலில் ஆங்காங்கு ஸ்ட்ரெச் மார்க்குகள் காணப்படும். இத்தகைய ஸ்ட்ரெச் மார்க்குகள் மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தினால், நன்கு வெளிப்படும். ஆகவே அவற்றை போக்குவதற்கு வைட்டமின் ஏ உள்ள க்ரீம்கள் பயன்படுத்துவது அல்லது லேசர் சிகிச்சை போன்றவை குணமாக்கும்.

முகத்தை கழுவுவது

முகத்தை கழுவுவது

அதிகப்படியான எண்ணெய் மற்றும் ஹார்மோன்களின் மாற்றம் மற்றும் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால், சருமத்தில் அழுக்குகள் தங்கியிருப்பதால், முகம் பொலிவிழந்து, பருக்கள், பிம்பிள் போன்றவை வந்துவிடும். ஆகவே அவற்றை தவிர்ப்பதற்கு, ஒருநாளைக்கு இரண்டு முறை அல்லது வெளியே வெயிலில் சென்று வீட்டிற்கு வந்ததும், முகத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும்.

சரும நிற மாற்றம்

சரும நிற மாற்றம்

சருமத்தின் நிறம் அதிகமாக வெயிலில் செல்வதால் ஏற்படுகிறது. சில சமயங்களில் அதிகப்படியான சூரியக்கதிர்கள் சருமத்தில் நேரடியாகப் படுவதால், தோல் புற்றுநோய் ஏற்படுகிறது. குறிப்பாக, காலையில் 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. அவ்வாறு வெளியே வெயிலில் செல்லும் போது, சன் ஸ்கிரீன் லோசன் தடவி, கண்களுக்கு குளிர்ச்சியை தரும் கண்ணாடியை அணிந்து, தலைக்கு தொப்பியை போட்டு, கைகளுக்கு உறை அணிந்து செல்ல வேண்டும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், உடலுக்கு கேடு விளைவதோடு, சருமத்திற்கும் கெடுதலை விளைவிக்கும். பொதுவாக ஆல்கஹால் உடலில் வறட்சியை உண்டாக்கும். மேலும் சருமத்தை சிவப்பாக மாற்றும். ஏனெனில் ஆல்கஹால் குடித்தால், இரத்த குழாய்கள் நிரந்தரமாக பாதிப்படைந்திருப்பதோடு, சருமமும் சிவப்பாக மாறிவிடும். அதனால் தான் ஆல்கஹால் குடிப்பவர்கள், நன்கு சிவப்பு நிறம் கலந்த வெள்ளையாக காணப்படுகின்றனர். ஆகவே ஆல்கஹால் பருகுவதை நிறுத்த வேண்டும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பதால் உடலில் வறட்சி ஏற்படுவதோடு, சருமத்தில் சுருக்கங்களும் வந்துவிடும். மேலும் உடலில் இரத்த ஓட்டமானது தடைபட்டு, உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே அழகாக காட்சியளிக்க புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Keep Your Skin Beautiful | சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்..

Your skin protects your body, but that's not all. It's the face you present to the world. When healthy, it's a source of beauty. The choices you make every day -- what you eat, where you go, how you feel -- affect how your skin looks. Use this visual guide to keep your skin youthful, healthy, and wrinkle-free.
Desktop Bottom Promotion