For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

By Super
|

கொசுக் கடித்த இடத்தை சொறிவது கண்டிப்பாக கூடாது. அப்படிச் செய்தால், சருமம் சேதமடைய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக விரல்களிலோ அல்லது நகங்களிலோ அழுக்குகள் படிந்திருந்தால் தொற்று நோய்கள் கூட வரலாம். கொசு கடித்த இடத்தை சொறிவதால் வீக்கம் கூடுமே தவிர குறையாது. மேலும் அது இன்னும் அதிகமாகவே சொறிய தூண்டும். அதனால் அதிகமாவது வலியே.

கொசுக்கடிகள், கடித்த இடத்தில் அரிப்பு ஏற்படுத்துவதை மட்டுமல்லாது, அதனை சுற்றி வீங்கவும் செய்யும். சில நேரங்களில் கடித்த இடம் ஆறா தழும்புகளாகவும் மாறிவிடும். உடலில் கை, கால் அல்லது தலை போன்ற தெரிந்த பாகங்களில், இந்த தடம் ஏற்பட்டால் அழகு பாதிக்கப்படும். ஆனால் இதை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை. ஏனெனில் இதனை எதிர்கொள்ள சில இயற்கை குறிப்புகள் உள்ளன. அவைகளை பார்க்கலாமா?

இயற்கையான முறையில் கொசுக் கடியை எதிர்கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் கட்டி

ஐஸ் கட்டி

எதிர்பாராத விதமாக, அரிப்பினை போக்க, மற்றும் வீக்கத்தை தடுக்க, குளிர்நிலை சிகிச்சை கை கொடுக்கின்றது. ஒரு துண்டு ஐஸ்கட்டியை எடுத்து ஒரு காகிதத்தில் மடித்து, கொசு கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் வீக்கமும் வற்றி, எரிச்சலும் குறையும்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெயும் இதற்கு பயன்படுத்தலாம். மற்ற ஆவியாகும் எண்ணெய்களை விட லாவெண்டர் எண்ணெய்க்கு தகுதிகள் அதிகமாக இருக்கிறது. அதை எப்படியும் பயன்படுத்த ஒத்துழைக்கும். இதை கடிப்பட்ட இடத்தில் தடவினால் எரிச்சலும் வலியும் குறைந்து தொற்று எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.

வினிகர்

வினிகர்

எரிச்சலை நிறுத்த வினிகரும் பெரிதும் உதவுகின்றது. ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில், 2-3 குவளை வினிகரை ஊற்றினால், அந்த நீரை எந்த கடியையும் குணப்படுத்த உபயோகப்படுத்தலாம். இல்லையென்றால் வினிகர் துளிகளை பஞ்சில் ஊற்றி, கடிப்பட்ட இடத்தில் தடவலாம்.

தேன்

தேன்

இயற்கை இனிப்பான தேனிலிருக்கும் மருத்துவ நலன்களை நாம் அறிவோம். எரிச்சலை போக்கும் தன்மையும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையும் தேனின் மருத்துவ நலன்களில் அடங்கும். எனவே தேனை கொசுக்கடிக்கு பயன்படுத்துவதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை.

தேநீர் பை

தேநீர் பை

கண்களை சுற்றி வீக்கம் ஏற்பட்டால், அதனை குறைக்க தேநீர் பைகளை உபயோகிக்கலாம். அதிலுள்ள டானின் என்ற மூல பொருள், துவர்ப்பியாக செயல்பட்டு வீங்கிய இடத்தில் இருக்கும் நீரை உரிந்து விடும்.

சமையல் சோடா

சமையல் சோடா

சமையல் சோடாவை வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து, பின் 30 நிமிடங்கள் ஊற விட வேண்டும் அல்லது சமையல் சோடாவை சிறு அளவு தண்ணீரில் கலந்து கடிப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

துளசி

துளசி

இயற்கையிலேயே வாசனைமிக்க இலைகளான இதனுள் கற்பூரம் மற்றும் தைமோல் அடங்கியுள்ளது. இந்த இரண்டும் அரிப்பைக் குறைக்க உதவும். இந்த இலைகளை மசித்து, கடிப்பட்ட இடத்தில் தடவலாம் அல்லது இதன் எண்ணெயை வாங்கியும் உபயோகிக்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

வல்லுனர்களின் ஆராய்ச்சியின் படி, இப்பழம் எரிச்சலை போக்கும். ஏனெனில் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர்க்கொல்லி தன்மைகள் இருப்பதால், இதனை அனைத்து விதமான பாக்டீரியாக்களை அழிக்கவும் பயன்படுத்தலாம்.

புதினா

புதினா

பல் வலியை போக்கும் பற்பசையை பற்றி நாம் தெரிந்திருப்போம். அவ்வாறு வலி நிவாரணி கிடைக்க காரணம், அந்த பற்பசையில் கலந்துள்ள புதினாவின் நறுமணமே. பற்பசையை உபயோகிக்க வேண்டாமென்று எண்ணினால், ஆவியாகும் எண்ணெய்கள் அல்லது அரைத்த புதினா இலைகள் கலந்த பசைகளை பயன்படுத்தலாம்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை வேனிற்கட்டியை குணப்படுத்த மட்டுமல்ல, கொசுக் கடியினால் ஏற்படும் அரிப்பு, வலி, வீக்கம் ஆகியவற்றை தணிக்கவும் உதவுகிறது.

கற்பூரம்

கற்பூரம்

கற்பூரம் கொசுக்களின் பெரிய விரோதி. கற்பூரம் இருப்பதோ நாம் அன்றாடம் உபயோகிக்கும் கற்பூரத்தில் தான். எனவே கற்பூரத்தை அறையில் ஏறிய விட்டால், ஒரு கொசு கூட அறையில் தென்படாது.

தேங்காய் நார்

தேங்காய் நார்

ஆரம்பம் முதலே தேங்காயிலிருந்து வரும் உமியை கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். எப்படி? காய்ந்த தேங்காய் உமியை எரித்தால் உண்டாகும் புகையை 5-6 நிமிடங்கள் அறை முழுவதும் பரவ விட்டால், கொசுக்கள் அண்டவே அண்டாது. இது புகையை கிளப்பினாலும், தேங்காய் உமி இயற்கை வளம் கொண்டவை மற்றும் உடம்புக்கும் எந்த தீங்கையும் விளைவிக்காது.

மண்ணெண்ணெயும் கற்பூரமும்

மண்ணெண்ணெயும் கற்பூரமும்

மண்ணெண்ணெய் அல்லது கற்பூரம் நல்ல வாசனையை தராது. எனவே கற்பூரத்தை மண்ணெண்ணெயில் போட்டு, பின் அதை வீடு முழுக்க தெளித்து விடவும். கண்டிப்பாக கொசு தங்கவே தங்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Mosquito Bites Naturally | கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Mosquito bites can make our skin becomes itchy and turn into bumps on the skin surface. In some cases, bites can turn into a lasting scar. But do not worry there are some tips to overcome mosquito bites naturally.
Desktop Bottom Promotion