For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயிலினால் ஏற்படும் பழுப்பு நிற சருமத்தைப் போக்கும் சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

By Maha
|

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது என்று எந்த ஒரு கவலையுமின்றி, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ளாமல் இருந்தால், வேறு சில சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிலும் கோடை காலத்தில் மட்டும் தான் சருமத்தின் நிறம் பழுப்பாக மாறும் என்று நினைக்க வேண்டாம். என்ன தான் சூரியனானது மழைக்காலத்தில் மேகங்களுக்குப் பின்னால் இருந்தாலும், சருமம் பழுப்பாக மாறுவது உறுதி. இதற்காக வெளியே செல்லும் முன் சருமத்திற்கு எவ்வளவு தான் சன் ஸ்க்ரீன் லோசனை தடவினாலும், தினத்தின் இறுதியில் முகத்தின் பொலிவானது மங்கி தான் காணப்படும்.

எனவே எந்த காலமானாலும், சருமத்திற்கு கொடுக்கும் பராமரிப்புக்களை அவ்வப்போது கொடுத்து வர வேண்டும். இல்லாவிட்டால், பல சரும பிரச்சனைகளைத் தான் பரிசாக பெறுவோம். அதிலும் கோடையில் சருமத்தின் நிறமானது முற்றிலும் மாறியிருப்பதால், அத்தகைய பழுப்பு நிறத்தைப் போக்குவதற்கும், வராமல் தடுப்பதற்கும் ஒருசில ஃபேஸ் மாஸ்க்குகளை அவ்வப்போது போட வேண்டும். அத்தகைய சில எளிய ஃபேஸ் மாஸ்க்குகளை கொடுத்துள்ளோம். அவற்றை முகத்திற்கு மட்டுமின்றி, கைகள், கால்கள் மற்றும் சூரிய வெளிச்சம் படும் அனைத்து பாகங்களுக்கு தடவலாம்.

இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான கருமையைப் போக்கி, சருமத்தை அழகாகவும் பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம். சரி, அந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோர்

மோர்

சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தைப் போக்குவதற்கு ஒரு எளிய வழியென்றால், மோரை பயன்படுத்துவது தான். அதுவும் தினமும் இரவில் மோரை சருமத்திற்கு தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள பழுப்பு நிறம் மறைந்து, சருமமும் பளிச்சென்று மின்னும்.

தக்காளி

தக்காளி

தக்காளியின் சாற்றைக் கொண்டு, பழுப்பு நிறமாக காணப்படும் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்து கழுவினால், சருமத்தின் நிறம் கூடும். அதிலும் தக்காளி சாற்றுடன், சிறிது தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், இரண்டு மடங்கு பலனைப் பெறலாம்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியும் ஒரு சூப்பரான அழகுப் பராமரிப்பு பொருள். எனவே சருமத்தின் அழகைக் கூட்டுவதற்கு, பப்பாளிப் பழத்தை மசித்து, சிறிது தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் உடலில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது உருளைக்கிழங்கு சாறு தான். அதற்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அதனை முகத்தில் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி பொலிவாகும். இல்லையெனில் உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி ஊற வைத்தும் கழுவலாம்.

குங்குமப்பூ மற்றும் மில்க் க்ரீம்

குங்குமப்பூ மற்றும் மில்க் க்ரீம்

இரவில் படுக்கும் முன், குங்குமப்பூவை, மில்க் க்ரீமுடன் சேர்த்து ஊற வைத்து, காலையில் அதனை நன்கு மசித்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் பொலிவோடு இருக்கும்.

தயிர் மற்றும் எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை

சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தைப் போக்குவதற்கு மற்றொரு சிறந்த ஃபேஸ் மாஸ்க் என்றால், தயிரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

நேச்சுரல் ஆயில்

நேச்சுரல் ஆயில்

4:1:1 என்ற அளவில் நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து, முகம் மற்றும் கை கால்களில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து, கடலை மாவு கொண்டு, முகத்தை தேய்த்து கழுவினால், எண்ணெய் பசை மற்றும் பழுப்பு நிறச் சருமமானது நீங்கிவிடுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

சந்தனப் பொடி

சந்தனப் பொடி

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

கற்றாழை

கற்றாழை

தினமும் முகத்தை கற்றாழையில் ஜெல் கொண்டு மசாஜ் செய்து கழுவினால், பழுப்பு நிற சருமத்தில் இருந்து விடுபடலாம்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் லேசாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், இறந்த செல்கள், பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கி, முகம் பொலிபோடு காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Packs To Get Rid Of Sun Tan

There are natural packs which you can apply to your face, arms, feet and any other body part that is exposed to the harsh rays of the sun. These packs are very effective in removing the dark pigmentation of your skin. Here are some homemade face packs to get rid of sun tan.
Story first published: Wednesday, June 26, 2013, 13:33 [IST]
Desktop Bottom Promotion