For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

By Maha
|

சரும பராமரிப்பு என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் தான். தற்போது ஆண்களும் பெண்களைப் போன்றே உடலையும், சருமத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எப்படி இருப்பினும், பலர் அழகு நிலையங்களை தான் நாடுவர். ஏனெனில் அத்தகையவர்களுக்கு செய்வதற்கு நேரமில்லை என்பதை விட தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பெண்களை விட ஆண்களே அதிக நேரம் வெயிலில் சுற்றுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு கெமிக்கல் கலந்த பொருட்களை விட, இயற்கை பொருட்களின் மூலமே நல்ல பலன் கிடைக்கக்கூடும்.

ஏனென்றால் கெமிக்கல் கலந்த பொருட்கள் அனைவருக்குமே நல்ல பலனைத் தருவதில்லை. ஆனால் எந்த பக்கவிளைவுமின்றி, நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடும் வகையில் இருப்பது இயற்கை பொருட்களே. மேலும் இயற்கை பொருட்களை சருமத்தை குளிர்ச்சியுடன் வைப்பதோடு, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்வதில் சிறப்பானது. ஆகவே ஆண்கள் ஏன் இயற்கை முறையில் செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க்குகளை முயற்சி செய்யக்கூடாது.

அத்தகையவர்களுக்காக சில ஈஸியான ஃபேஸ் மாஸ்க்குகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதினா

புதினா

உடலை புத்துணர்ச்சியுடன் வைப்பதில் புதினா முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் அதனை கொண்டு மாஸ்க் போட்டால், புத்துணர்ச்சியுடன், பொலிவும் கிடைக்கும். அதற்கு சிறிது புதினா இலைகளுடன், மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பால்

பால்

ஒரு இயற்கையான ஃபேஸ் பேக் என்று சொன்னால் அது பால் தான். இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் அழகாக காணப்படும். எனவே பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் ரோஸ் வாட்டர், ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது கொக்கோ வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவினால், சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பிம்பிள்கள் நீங்குவதோடு, மறைந்திருக்கும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தேய்த்து ஊற வைத்து நீரில் அலசினால், சருமத்தில் வெயிலின் தாக்கத்தினால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பளிச்சென்று காணப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

நீர்ச்சத்து அதிகம் நிரம்பிய வெள்ளரிக்காயை வைத்தும் மாஸ்க் போடலாம். அதிலும் இந்த மாஸ்க்கை கோடையில் போட்டால், சருமம் குளிர்ச்சியுடன், சோர்வின்றி காணப்படும். அதற்கு வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

களிமண் மாஸ்க்

களிமண் மாஸ்க்

களிமண் மாஸ்க் ஒரு வித்தியாசமான, ஆனால் நல்ல பலனைத் தரும் ஃபேஸ் மாஸ்க்குகளில் ஒன்று. இந்த மாஸ்க்கிற்கு தேவையான களிமண் மூலிகை கடைகளில் கிடைக்கும். ஆகவே அதனை வாங்கி, அதோடு ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், களிமண் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை உறிஞ்சி வெளியேற்றி, முகத்திற்கு பொலிவைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Face Packs For Men | ஆண்களுக்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!

Personal grooming these days is not limited to women only. Men are as much conscious about how they appear and are trying several beauty treatments these days for grooming themselves. However, it is important know what your skin can take. So why not try out one of these prepare-at-home face packs and help curb the damage.
Desktop Bottom Promotion