For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமையான தோற்றத்திற்கு 'சாக்லெட் ஃபேஷியல்' பண்ணுங்க...

By Maha
|

சாக்லெட் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். ஏனெனில் அதன் சுவை அவ்வளவு ருசியாக இருப்பதே ஆகும். அத்தகைய சாக்லேட்டை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதேப் போல் அந்த சாக்லெட் சருமத்திற்கும் அழகான பொலிவைத் தரும் சக்தியுடையது. பொதுவாக சாக்லெட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. அந்த சாக்லெட்டையே பயன்படுத்தி, சருமத்திற்கு ஃபேஷியல், ஸ்கரப் என்று செய்தால் நிச்சயம் முகம் இனிமையான தோற்றத்தில் காணப்படும்.

வேண்டுமெனில் நிறைய அழகுப் பொருட்களில் சாக்லெட் ஃப்ளேவர் வந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதிலும் அவை மிகவும் விலை மதிப்புடையது. அவ்வாறு அதிகமாக பணத்தை செலவழித்து, வாங்கி முகத்திற்கு போடுவதை விட, வீட்டிலேயே சாக்லெட்டை வைத்து பல வகையான ஃபேஷியல் செய்யலாம். சாக்லெட் தயாரிக்கப் பயன்படுத்தும் கொக்கோ பவுடர் சற்று விலை அதிகமானது தான். ஆனால் முகத்தை பொலிவாக்க வெளியே சென்று கண்ட கண்ட பொருட்களை வாங்கி, முகத்திற்கு போடுவதை விட, வீட்டிலேயே இயற்கைப் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டதை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இப்போது அந்த சாக்லெட்டை வைத்து எப்படியெல்லாம் முகத்தை பொலிவாக்கலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லெட் மற்றும் ஷியா வெண்ணெய்

சாக்லெட் மற்றும் ஷியா வெண்ணெய்

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதனுள் மற்றொரு சிறிய பாத்திரத்தை வைத்து, அந்த சிறு பாத்திரத்தில் சிறிது டார்க் சாக்லெட் துண்டுகளைப் போட்டு, அதனை உருக வைக்க வேண்டும். பின் அதில் ஷியா வெண்ணெய் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, அந்த கலவையை முகத்திற்கு தடவி 3 நிமிடம் ஊற வைத்து, பின் ஒரு காட்டன் வைத்து துடைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பட்டுப் போட்டு பொலிவோடு மின்னும்.

சாக்லெட் மற்றும் தயிர்

சாக்லெட் மற்றும் தயிர்

இந்த முறைக்கு சாக்லெட்டை பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து உருக வைத்து, சிறிது தயிரை ஊற்றி, கலவை நன்கு மென்மையாகும் வரை கிளர வேண்டும். பின்னர் குளிர வைத்து, அதனை முகம் மற்றும் கழுத்திற்கு மாஸ்க் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சாக்லெட், ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன்

சாக்லெட், ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன்

இது ஒரு டூ-இன்-ஒன் ஃபேஷியல். இந்த ஃபேஷியலுக்கு டார்க் சாக்லெட் மற்றும் ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்த வேண்டும். அதற்கு சாக்லெட்டை உருக வைத்து, அதில் ஸ்ட்ராபெர்ரியை மசித்து, சிறிது தேன் மற்றும் கொக்கோ பவுடர் போட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் நன்கு பளிச்சென்று இருக்கும்.

சாக்லெட் மற்றும் தேன்

சாக்லெட் மற்றும் தேன்

இந்த ஃபேஷியல் மிகவும் சிறந்த ஒன்று. ஏனெனில் இதில் தேன் சேர்த்திருப்பதால், முகம் நன்கு மென்மையாக இருக்கும். இந்த ஃபேஷியல் செய்வதற்கு சாக்லெட்டை உருக வைத்து, அதில் சிறிது தேனை ஊற்றி நன்கு மென்மையாக கலந்து, முகத்திற்கு தடவி, 45 நிமிடம் ஊற வைத்து, பாலால் கழுவி, பின் நீரால் கழுவ வேண்டும்.

கொக்கோ பவுடர், தேங்காய் மற்றும் ப்ரௌன் சர்க்கரை

கொக்கோ பவுடர், தேங்காய் மற்றும் ப்ரௌன் சர்க்கரை

இது வீட்டில் செய்யக்கூடிய ஒரு சிறந்த ஸ்கரப். இந்த ஸ்கரப்பிற்கு கொக்கோ பவுடரை தேங்காய் எண்ணெயில் கலந்து, பின் ப்ரௌன் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கலக்க வேண்டும். பின்னர் அதனை முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, மைல்டு ஃபேஸ் வாஷ் போட்டு கழுவ வேண்டும்.

சாக்லெட் மற்றும் ஓட்ஸ்

சாக்லெட் மற்றும் ஓட்ஸ்

சாக்லெட்டை ஒரு பேனில் போட்டு உருக வைத்து, அதில் ஒட்ஸ் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதனுடன் சிறிது ஷியா வெண்ணெய் சேர்த்து கலந்து, இறக்கி குளிர வைத்து, பின்னர் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, ஊற வைத்து பின் கழுவினால், சருமத்துளைகள் விரிவடைந்து, அதிலுள்ள அழுக்குகள் வெளியேறி, சருமம் நன்கு பொலிவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Chocolate Facials | இனிமையான தோற்றத்திற்கு 'சாக்லெட் ஃபேஷியல்' பண்ணுங்க...

There are many chocolate beauty recipes that can be made at home using simple ingredients. Lets take a look at some simple and effective homemade chocolate facials.
Story first published: Friday, January 18, 2013, 13:40 [IST]
Desktop Bottom Promotion