For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷேவிங் செய்யும் போது காயம் ஏற்பட்டுவிட்டதா? இதோ சில டிப்ஸ்....

By Maha
|

உடலில் உள்ள தேவையற்ற முடிகளை எளிதில் நீக்க உதவும் ஒரு முறை தான் ஷேவிங். மேலும் பெரும்பாலான மக்களும், ஷேவிங் முறையைத் தான் தேர்ந்தெடுத்து, முடியை நீக்குகின்றனர். ஆனால் அவ்வாறு ஷேவிங் செய்த பின்னர் சில பிரச்சனைகளான அரிப்பு, எரிச்சல், சிவப்பு நிறத்தில் வீக்கம், காயம் போன்றவைகளை சந்திக்க நேரிடும்.

குறிப்பாக ஆண்களுக்குத் தான் இந்த பிரச்சனை அதிகம் இருக்கும். ஏனெனில் அவர்கள் தினமும் முகத்தில் ஷேவிங் செய்வதால், கவனமின்மையால் சில நேரங்களில் காயங்களை சந்திக்கின்றனர். இவ்வாறு ஏற்பட்ட காயங்களுக்கு எவ்வளவு தான் ஆன்டி-செப்டிக் லோசன் தடவினாலும், காயங்கள் குணமாவதில்லை.

ஆகவே அவ்வாறு ஷேவிங் செய்யும் போது ஏற்படும் காயங்களை குணமாக்க சில எளிய வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை மேற்கொண்டு காயங்களை குணமாக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ந்த

குளிர்ந்த

ஷேவிங் செய்த பின்னர், முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். இதனால் ஷேவிங் செய்த பின்னர் ஏற்படும் எரிச்சல் மற்றும் காயங்களினால் ஏற்படும் வலி போன்றவற்றை உடனே தடுக்கலாம். குறிப்பாக எக்காரணம் கொண்டும் சூடான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டாம். இல்லாவிட்டால், காயம் இன்னும் பெரிதாகிவிடும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

ஷேவிங் செய்த பின்னர் கற்றாழை ஜெல் கொண்டு, மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் எரிச்சல், அரிப்பு, காயம் போன்றவை சரியாகும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

முகத்தை ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்தாலும், ரேசர் மூலம் ஏற்பட்ட காயத்தினால் ஏற்படும் வலியில் இருந்து உடனே நிவாரணம் கிடைக்கும்.

விட்ச் ஹாசில்

விட்ச் ஹாசில்

விட்ச் ஹாசில் என்னும் மூலிகையை, நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, அதனை வெட்டுக்காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்தால், காயம் சீக்கிரம் குணமாகும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அந்த கலவையை ஷேவிங் செய்த பின்னர் தடவினால், காயத்தினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

ஷேவிங் செய்த பின்னர் சருமம் வறட்சி அடைவதால், ஷேவிங் செய்யும் போது ஏற்பட்ட காயத்தை இன்னும் மோசமானதாக்கும். எனவே ஷேவிங் செய்த பின்னர் ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவி வேண்டும். அதிலும் பெட்ரோலியம் ஜெல்லியை தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஷேவிங் லோசன்

ஷேவிங் லோசன்

ஷேவிங் செய்த பின்னர் தடவக்கூடிய ஷேவிங் லோசனை தடவினால், அதில் உள்ள ஆல்கஹால், இரத்தக்கசிவை தடுத்து, அந்த காயத்தை எளிதில் குணமாக்கும்.

ரேசரை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

ரேசரை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

இதுவரை சொல்லப்பட்டவற்றை மேற்கொள்வது மட்டுமின்றி, ஷேவிங் செய்த பின்னர் ரேசரை சுத்தப்படுத்த வேண்டும். மேலும் ஷேவிங் செய்யும் போது தலைகீழாக ஷேவிங் செய்யக்கூடாது. இதனால் காயங்கள், சரும தடிப்புக்கள் போன்றவை மட்டும் தான் ஏற்படும். எனவே கவனமாக ஷேவிங் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Treat Razor Cuts

Here are some of the best home remedies that can help you heal the razor burns naturally. Instead of applying lotions and creams, you can opt for these simple ingredients. Check out the simple home remedies to treat razor burns naturally.
Story first published: Wednesday, September 18, 2013, 12:41 [IST]
Desktop Bottom Promotion