For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முக அழகை கரும்புள்ளிகள் கெடுக்குதா? இத ட்ரை பண்ணுங்க...

By Maha
|

அனைவருக்குமே அழகான முகம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு ஆசைப்படும் போது தான் முகத்தில் பருக்கள், பிம்பிள், கரும்புள்ளிகள் போன்றவை வந்து, முகத்தின் அழகைக் கெடுக்கும். இதுவரை பருக்கள் மற்றும் பிம்பிள்களை போக்குவதற்கான பல இயற்கை வைத்தியங்களை பார்த்திருப்போம். ஆனால் முகத்தின் அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகளை போக்குவதற்கான இயற்கை முறைகளை அவ்வளவாக பார்த்ததில்லை. அதற்காக கரும்புள்ளிகளைப் போக்குவதற்கான இயற்கை பொருட்கள் இல்லை என்று நினைக்க வேண்டாம்.

அதனைப் போக்குவதற்கும் பல இயற்கைப் பொருட்கள் உள்ளன. இருப்பினும் சிலர் இயற்கை பொருட்கள் அவ்வளவாக நல்ல பலனைத் தருவதில்லை என்று நினைத்து, மார்கெட்டில் கிடைக்கும் கரும்புள்ளிகளை மறைய வைக்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் கரும்புள்ளிகள் மறைகிறதோ இல்லையோ, சருமத்தில் வேறு பிரச்சனைகள் மட்டும் விரைவில் வந்துவிடுகின்றன. எனவே எப்போதும் இயற்கைப் பொருட்கள் தான் சிறந்தது என்று நினைப்பதோடு, அதனை பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் மறையும் என்ற நம்பிக்கையோடு பயன்படுத்தினால், நிச்சயம் கரும்புள்ளிகளை மறையச் செய்யலாம்.

இப்போது கரும்புள்ளிகள் மறையச் செய்யும் இயற்கைப் பொருட்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

கற்றாழை கரும்புள்ளியை மறைய வைக்கப் பயன்படும் பொருட்களில் ஒன்று. இவை கரும்புள்ளியை மட்டுமின்றி, முகத்தை பொலிவோடும், பருக்களின்றியும் வைக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டின் நறுமணத்தால், பலர் இதனை வெறுப்பார்கள். இருப்பினும், பூண்டில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான், கரும்புள்ளிகளை மறையச் செய்வது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீ போட்டு குடித்ததும், அதில் உள்ள இலைகளை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தை அழகோடு கரும்புள்ளிகளின்றி வைத்துக் கொள்ளலாம்.

தேன்

தேன்

தேன் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதிலும் கரும்புள்ளிகளைப் போக்க வேண்டுமெனில், தினமும் தேனை சந்தனப் பவுரிலோ அல்லது எலுமிச்சை சாற்றிலோ விட்டு கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைப்பதோடு, சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். மேலும் முகத்தில் பருக்கள் மற்றும் பிம்பிள் இருந்தாலும், அவற்றை போக்கிவிடும்.

பால்

பால்

பாலைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய ஆரம்பித்து, முகமும் பளபளப்புடன் இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து, அதன் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் அறவே மறைந்துவிடும்.

சந்தனப் பவுடர்

சந்தனப் பவுடர்

சந்தனப் பவுடரில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனாலும் கரும்புள்ளிகள் மறையும்.

தயிர்

தயிர்

தயிரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து, முகம் அழகாக மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Reduce Dark Spots

There are few home remedies that can be used to lighten dark spots and blemishes naturally. Kitchen ingredients like honey, lemon juice, milk, sandalwood powder and potatoes ar easily available in every household. Take a look at the ways in which these home remedies can help lighten dark spots from the face.
Desktop Bottom Promotion