For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதடு அதிக வறட்சியா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க...

By Maha
|

பெண்களுக்கு அழகே கண்கள் மற்றும் உதடுகள் தான். அவற்றில் ஒன்று சற்று வித்தியாசமான தென்பட்டாலும், அது முகத்தின் அழகை கெடுத்துவிடும். முக்கியமாக உதடுகளில் தான் பெரும் பிரச்சனை ஏற்படும். அதிலும் பருவக்காலம் மாறும் போது, உதடுகளில் பிரச்சனை ஆரம்பிக்கும். இத்தகைய பிரச்சனையை தடுக்க நாம் சரியாகவும், முறையாகவும் உதடுகளை பராமரித்து வர வேண்டும். மேலும் சிலர் உதடுகளுக்கு அதிகமான அளவில் லிப்ஸ்டிக்கை போடுவார்கள். அவ்வாறு அதிகப்படியான லிப்ஸ்டிக் உதடுகளில் இருந்தால், அதில் உள்ள கெமிக்கல் உதடுகளில் இயற்கையான மென்மைத்தன்மையை இழக்கச் செய்து, பொலிலிழக்கச் செய்யும்.

எனவே என்ன தான் முகத்திற்கு மேக்-கப் போடும் போதும், உதடுகளுக்கு அதிகமான லிப்ஸ்டிக் போடாமல், இயற்கை முறையை பின்பற்றி வருவது நல்லது. அதுமட்டுமின்றி, உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், அது முதலில் உதடுகளைத் தான் பாதிக்கும். எனவே சரியான அளவில் தண்ணீரைப் பருகுவது மிகவும் அவசியமானது.

ஆகவே உதடுகள் வறட்சியடையாமல், மென்மையோடும், பொலிவோடும் காணப்படுவதற்கு, ஒருசில இயற்கை முறைகளைப் பின்பற்றி வந்தால், சரிசெய்துவிடலாம். சரி, இப்போது உதடுகளை வறட்சியடையாமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போமா!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

உதடு வறட்சியடையும் போது உதட்டில் தேங்காய் எண்ணெயை வைத்தால், உடனே வறட்சியானது போய்விடும். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி ஆசிட் வறட்சியை நீக்கி, உதட்டை எண்ணெய் பசையுடன் வைக்கும். அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெய் உதட்டை கருமையடையாமல் தடுக்கும்.

தக்காளி

தக்காளி

தக்காளியை நறுக்கி, அதனை வறட்சியடைந்த உதட்டில் தடவினால், வறட்சி நீங்கிவிடும். வேண்டுமெனில் தக்காளியில் தேனை தடவியும் உதட்டில் மசாஜ் செய்யலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

வறட்சியான மற்றும் பொலிவிழந்த உதட்டிற்கு எலுமிச்சை சிறந்ததாக இருக்கும். ஏனெனில் பொதுவாக எலுமிச்சை இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்றுவதில் சிறந்தது. எனவே இதனை உதட்டில் தடவினால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாகும். மேலும் இந்த முறையில் சிறிது தேனையும் சேர்த்து செய்து, உதடு வறட்சியடையாமல் இருக்கும். இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நிறைய தண்ணீர் இருக்கும். இது வறட்சியான உதடு மற்றும் சரும பிரச்சனைகளைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு வெள்ளரிக்காய் துண்டுகளை, உதட்டில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள தண்ணீர் மற்றும் வைட்டமின் சி, உதட்டை எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை வறட்சியான சருமத்தை மட்டும் பொலிவாக்குவதோடு, வறட்சியாக இருக்கும் உதட்டையும் ஈரப்பசையுடன் வைக்கும். ஏனென்றால் இதில் உள்ள ஹைக்ரோஸ்கோபிக் என்னும் பொருள் தான், சருமத்தை மென்மையாகவும், ஈரப்பசையுடனும் வைக்க உதவுகிறது.

தேன்

தேன்

உதட்டை எண்ணெய் பசையுடன் வைப்பதற்கு, தேன் சிறிது துளிகளை எடுத்துக் கொண்டு, அதனை வறட்சியாக இருக்கும் உதட்டில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உதட்டில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, எந்த ஒரு வெடிப்பும் வராமலும் இருக்கும்.

லிப்ஸ்டிக்கை தவிர்க்கவும்

லிப்ஸ்டிக்கை தவிர்க்கவும்

உதட்டை வறட்சியாக்குவதில் லிப்ஸ்டிக்கும் ஒன்று. எனவே உதடு வறட்சியாக இருக்கும், அதனை மறைக்க லிப்ஸ்டிக் போடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக இயற்கையாக இருக்கும் லிப் கிளாஸ்களான தேங்காய் எண்ணெய், தேன் போன்றவற்றை பயன்படுத்தலாம். கெமிக்கல் கலந்த லிப் கிளாஸ், லிப் பாம் அல்லது லிப்ஸ்டிக் போன்றவை சருமத்திற்கு ஒருவித எரிச்சலை உண்டாக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

உடலில் நீர் வறட்சி இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். எனவே அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதனால் வறட்சி நீங்குவதோடு, உடலும் நன்கு பொலிவோடு இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Cure Dry Lips | உதடு அதிக வறட்சியா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க...

Lip care is very important especially when there is a change in season. Chapped lips are characterised as dry and cracked skin. Even after applying lip balm regularly, the dry lips hardly cure. So, you can opt for some home remedies to cure dry lips and keep them soft.
Desktop Bottom Promotion