For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதட்டைச் சுற்றி கருப்பா இருக்கா? கவலைய விடுங்க...

By Maha
|

அழகு என்பது முகத்தில் இல்லை அகத்தில் தான் உள்ளது என்று சொல்வார்கள். ஆனால் எப்படி அகம் மிகவும் அழகாக உள்ளதோ, அதேப் போல் வெளித்தோற்றம் அழகாக இல்லாவிட்டாலும், ஓரளவு பார்த்தால் ரசிக்கும் அளவானது இருக்க வேண்டும். இல்லையெனில் யாரும் மதிக்கக்கூட மாட்டார்கள். எனவே அத்தகைய வெளித்தோற்றத்தை சிலர் சரியாக பராமரிப்பார்கள். சிலர் ஒருசில இடங்களை பராமரிக்காமல் இருப்பார்கள். அவ்வாறு பராமரிக்காமல் இருப்பதால், ஒருசில இடங்கள் கருப்பாக இருக்கும்.

குறிப்பாக முகத்தில் கருப்பாக இருக்கும் இடங்களில் ஒன்று தான் உதட்டின் மேல்பகுதி. பெரும்பாலானோருக்கு இந்த பிரச்சனை இருக்கும். இதற்கு காரணம் அந்த இடங்களில் மெலனின் அளவுக்கு அதிகமாக இருப்பதே ஆகும். எனவே அத்தகைய மெலனின் அளவைக் கட்டுப்படுத்தவும், சூரியக் கதிர்களால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்கவும், ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றி வந்ததால், உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையான சருமத்தை நீக்குவதோடு, எந்த ஒரு பக்கவிளையும் வராமல் தடுக்கலாம். சரி, இப்போது உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையை நீக்க என்ன இயற்கை முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் எண்ணிலடங்கா நன்மைகள் அடங்கியுள்ளன. அத்தகைய நன்மைகளில் ஒன்று தான் கருமையான சருமத்தை நீக்குவது. அதற்கு எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் தயிர் கலந்து, கருப்பான இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சரும நோய்கள் போவதோடு, சருமமும் எண்ணெய் பசையுடன் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

கடலை மாவு

கடலை மாவு

அன்றைய காலத்தில் இருந்த பெண்களின் அழகின் ரகசியம் என்னவென்று பார்த்தால், அது கடலை மாவு தான். அத்தகைய கடலை மாவு கருமையான இடத்தை வெள்ளையாக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. அதற்கு கடலை மாவுடன், மஞ்சள் தூள் மற்றும் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழையை உதட்டிற்கு மேலே தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து வந்தால், உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை எளிதில் போக்கலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் சாற்றில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, சருமத்தில் இருக்கும் கருமையான இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சில நாட்களிலேயே அதனை போக்கலாம்.

ஓட்ஸ் ஸ்கரப்

ஓட்ஸ் ஸ்கரப்

கருமையை போக்க ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். அதற்கு ஓட்ஸ், தக்காளி சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் துண்டுகளை முகத்தில் உதட்டிற்கு மேலே காணப்படும் கருமையான இடத்தில் தடவி வந்தால், கருப்பான இடத்தையும் வெள்ளையாக்கலாம்.

தக்காளி

தக்காளி

காய்கறிகளில் தக்காளியும் அழகுப் பொருட்களில் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு தக்காளியை அப்படியே முகத்தில் தேய்த்தோ அல்லது அதன் சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூளுடன் சேர்த்து முகத்தில் தடவி வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Have Dark Skin Around Lips? Try These...| உதட்டைச் சுற்றி கருப்பா இருக்கா? கவலைய விடுங்க...

The most annoying thing about winter season is not just skin dryness but also getting dark pigmentation around lips. Here are some home remedies that can cure dark skin around the lips:
Story first published: Tuesday, February 5, 2013, 15:17 [IST]
Desktop Bottom Promotion