For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹோலி கலரை போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...

By Maha
|

ஹோலி பண்டிகையின் போது வண்ணப் பொடிகளை தூவி நன்கு சந்தோஷமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விளையாடிருப்போம். ஆனால் அவ்வாறு தூவி விளையாடிய போது சருமத்தில் படும் வண்ணப் பொடிகளில் உள்ள வண்ணங்களைப் போக்குவது என்பது மிகவும் கடினமானது. மேலும் இந்த பொடிகளினால் நிறைய சருமப் பிரச்சனைகள் ஏற்படும். அவற்றில் சரும எரிச்சல், அரிப்பு, வறட்சி மற்றும் சரும நிற மாற்றம் போன்றவை.

ஆகவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கும், சருமத்தில் உள்ள வண்ணங்களைப் போக்குவதற்கும் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும். இவ்வாறு ஃபேஸ் பேக்குகள் போடுவதால், சருமத்தில் உள்ள நிறங்களை எளிதில் போக்கி, மீண்டும் பழைய அழகைப் பெறலாம்.

முதலில் வண்ணங்களைப் போக்குவதற்கு எந்த ஒரு ஃபேஸ் பேக் போடும் முன்னும், சருமத்தில் படிந்த வண்ணங்களை முடிந்த அளவில் போக்குவது மிகவும் அவசியம். அதற்கு தண்ணீரில் தேங்காய் எண்ணெய் சேர்த்தோ அல்லது எலுமிச்சை சாறுடன் கற்றாழை சேர்த்து தேய்த்தோ வந்தால், சருமத்தில் இருக்கும் வண்ணங்களை ஓரளவு போக்கலாம்.

Face Packs To Remove Holi Colours

* பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, காய வைத்து, 1/2 மணிநேரம் கழித்து, கழுவினால், சருமத்தில் உள்ள வண்ணங்களை எளிதில் போக்கிவிடும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் ஊற வைத்த துவரம் பருப்பை அரைத்து, அத்துடன் ஆரஞ்சு தோலின் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு, நன்கு ஊற வைத்து, பின் அதனை கழுவிட வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து, அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 1/2 மணி நேரம் ஊற வைத்து, அரை மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், வண்ணங்கள் எளிதில் நீங்குவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும், மிருதுவோடும் இருக்கும்.

* வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, ஊற வைத்த, பின் அதனை சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவினால், நிறங்கள் உடலில் இருந்து போய்விடும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை கலந்து, முகம் மற்றும் உடலில் தடவி, மசாஜ் செய்து வர, சருமத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் வண்ணங்கள் நீங்குவதோடு, சருமம் வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.

இவையே ஹோலி கலரைப் போக்கப் பயன்படுத்தும் சிறப்பான ஃபேஸ் பேக்குகள்.

English summary

Face Packs To Remove Holi Colours | ஹோலி கலரை போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...

Playing with colours is always a fun of Holi, but getting rid of these colours is always difficult. It needs more care because, there are chances of skin problems like skin irritation, dryness, and blemishes. There will be a lot of options to select a face pack and remove Holi colours. Here are some simple natural face packs to remove those colours from your body.
Desktop Bottom Promotion