For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!!

By Maha
|

சருமப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டை சிறந்த பொருளாக உள்ளது. ஏனெனில் முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை பழுதடைந்த செல்களை சரிசெய்து, சருமப் பிரச்சனைகளான பருக்கள், சரும சுருக்கம், அதிகப்படியான எண்ணெய், வறட்சி போன்றவற்றை தடுக்கும். எனவே முட்டையை சாப்பிட மட்டும் தான் சிறந்தது என்று நினைக்காமல், அதனை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

அதிலும் முட்டை மேற்கூறிய பிரச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு, பழுப்பு நிற சருமத்தை நீக்கி, வெள்ளையாக்க பொரிதும் உதவுகிறது. எனவே ஏதாவது சரும பிரச்சனை வந்தால், உடனே கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களை நாடுவது நல்லது. ஏனெனில் செயற்கைப் பொருட்கள் சில வகையான சருமத்திற்கு பக்கவிளைவவுகளை ஏற்படுத்தும். ஆனால் இயற்கைப் பொருட்கள் அப்படியில்லை. இப்போது சருமத்தைப் பராமரிக்க, வீட்டில் இருக்கும் பொருட்களில் ஒன்றான முட்டையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போமா!!!

Egg

* முட்டை: முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, காய வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் இறுக்கமடைந்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும். முக்கியமாக முகத்தில் பருக்கள் இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தடவ வேண்டும்.

* முட்டை மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்: இந்த பேக் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். அதற்கு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கலாம்.

* முட்டை, தேன் மற்றும் ஆலிவ் ஆயில்: சருமம் வறட்சியாக இருப்பவர்கள், ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமம் இறுக்கமடைந்து, வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.

* முட்டை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்: இந்த ஃபேஸ் பேக்கில் சருமத்திற்கு தேவையான நன்மைகள் பல உள்ளன. முக்கியமாக இந்த முறை சருமத்தை வெள்ளையாக்க உதவும். அதற்கு ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தயிர் சேர்த்து நன்கு கலந்து, வேண்டுமெனில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.

* முட்டை மற்றும் தேன் ஃபேஸ் பேக்: சருமம் பழுப்பு நிறத்தில் உள்ளவர்கள், முட்டையுடன் தேனை சேர்த்து, பழுப்பு நிறம் உள்ள இடங்களில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், பழுப்பு நிற சருமம் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் வெள்ளரிக்காய்: எண்ணெய் பசை சருமத்திற்கு இது மற்றொரு சிறந்த ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில், வெள்ளரிக்காய் சாறு அல்லது அரைத்ததுடன், பால் பவுடர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும். முகத்திற்கு தடவும் போது, கண்களைச் சுற்றி தடவ வேண்டாம்.

வேறு ஏதாவது முட்டையைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

English summary

Egg Face Packs For All Skin Types | அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!!

One of the biggest benefits of egg is that it has proteins that repairs the damaged tissues and also tightens the skin. So, if you want to keep your skin wrinkle-free, try egg face packs. Check out the egg recipes that are homemade and have skin benefits too.
Desktop Bottom Promotion