For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொன்னா நம்பமாட்டீங்க.... ஏன்னா இந்த உணவுகள் முகப்பருக்களை உண்டாக்கும்!!!

By Super
|

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குவது பருக்கள். அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. பருக்கள் வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பருக்களை நீக்க இன்றைய சந்தையில் கிடைக்கும் பல பொருட்களை வாங்கி, அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி செய்வதால் பருக்களை நீக்கலாம். ஆனால் ஏன் பருக்கள் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் முளையிலேயே அதனை கிள்ளி எறியலாம் அல்லவா?

சாக்லெட், பர்கர், பொரித்த உணவுகள் மற்றும் இன்னும் பல சுவையான உணவுகளால் பருக்கள் ஏற்படும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அதே சமயம் அவையெல்லாம் வெறும் கட்டுக்கதை என்றும் கேள்விப்பட்டிருப்போம். உணவுக்கும், பருக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சில தோல் மருத்துவர்கள் கூட சொல்வார்கள். பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டும், இதற்கு ஒரு விடை கிடைக்காததால் அவர்கள் இதனை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

பல வருடங்களாக உணவுக்கும், பருக்களுக்கும் இருக்கும் உறவை பற்றி வாக்குவாதம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நாம் உண்ணும் உணவிற்கும், நம் சருமத்திற்கும் தொடர்பு இருப்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ஆனால் நிரூபிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

இதனைப் பற்றி நடந்த முந்தைய ஆய்வுகள் எல்லாம் போதுமான பொருட்களையும், ஆட்சி குழுவையும் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மேலும் தனிப்பட்ட காரணிகளை வைத்துக் கொண்டு, அதற்கான காரணத்தை கண்டு பிடிப்பதும் கடினமாக இருந்தது. ஆனால் பருக்களுக்கும், உணவுகளுக்கும் உள்ள உறவுமுறை கட்டுக்கதை அல்ல என்று கடைசியாக நடந்த ஆராய்ச்சிகள் ஆணித்தனமாக கூறியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட்டும் பருக்களும்

டயட்டும் பருக்களும்

உண்ணும் உணவுக்கும், பருக்களும் உள்ள தொடர்பை பற்றிய சர்ச்சை ஏதாவது இருந்து கொண்டு தான் இருக்கிறது. உங்கள் சரும வகையை தீர்மானிக்கவும், பருக்கள் உண்டாகவும் பல காரணிகள் உள்ளது. அதற்காக ஒரு துண்டு பிட்சா உண்ணுவதால் எல்லாம் பருக்கள் வந்துவிடாது. அவை உருவாவதற்கு ஏதாவது சில முறைகள் உள்ளது.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்கள் அதிகமாக வரும் என்று பலரும் நம்புகின்றனர். பருக்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செனை பசுக்களில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பதால், பருக்களுடன் பால் பொருட்களுக்கு தொடர்பு இருப்பது நம்பப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய கார்ப் உள்ளது. அதற்கு உதாரணமாக மிட்டாய், பிஸ்கட் அல்லது வெள்ளை பிரட்டை எடுத்துக் கொள்ளலாம். இவ்வகை பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஊக்குவிக்கும் வகையை சேர்ந்தவை என்பதால், அது ஹார்மோனில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும். அதனால் பருக்கள் வருவதோடு மட்டுமல்லாமல், இருக்கும் பருக்களையும் மோசமடையச் செய்யும்.

காப்ஃபைன்

காப்ஃபைன்

சிறுநீரகச் சுரப்பியிலிருந்து மன அழுத்த ஹார்மோன்களை விடுவிக்கச் செய்வது தான் காஃப்பைன். இது சருமத்திற்கு தீங்கை விளைவிக்கும். அதன் விளைவாக பருக்களும் வரத் தொடங்கிவிடும். மேலும் நிம்மதியான தூக்கத்தையும் இது கெடுத்து விடுவதால் பாதிப்படைந்த திசுக்களை சரிசெய்ய உடலுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆகவே பருக்கள் வரத் தொடங்கினால், நன்றாக தூங்கத் தொடங்குங்கள். இது பருக்களின் வளர்ச்சியை இன்னும் மோசமாக்காமல் தடுக்கும்.

சாக்லெட்

சாக்லெட்

பருக்கள் வருவதற்கு சாக்லெட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்பப்படுகிறது. இதில் சிறிதளவு உண்மையும் கூட இருக்கிறது. சாக்லெட்டில் பால் பொருட்கள், சுத்தரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் காப்ஃபைன் உள்ளது. இவை மூன்றுமே பருக்கள் உருவாக காரணமாக இருக்கும் பொருட்கள். அப்படியானால் கேட்க வேண்டுமா என்ன? அதனால் இதனை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளாமல், எப்போதாவது சாப்பிடுங்கள்.

எண்ணெய் பசையுள்ள உணவுகள்

எண்ணெய் பசையுள்ள உணவுகள்

எண்ணெய் பசையுள்ள உணவுகளும், பூரிதக் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளும் நல்லதல்ல. அதற்கு காரணம் அவைகள் பருக்கள் உருவாக ஒரு காரணியாக விளங்குகிறது. அதற்கு பல காரணங்களும் உள்ளது. முதலாவதாக அதிக அளவில் கொழுப்பை உட்கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். இதனால் ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இது பருக்களை உண்டாக்கும். இரண்டாவதாக, அதிக அளவில் கொழுப்பு நிறைந்த பொருட்களை உட்கொண்டால், இரத்த ஓட்டம் தடைப்படும். அதனால் உடலில் உள்ள பாகங்களுக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜனும், ஊட்டச்சத்துக்களும் குறையத் தொடங்கும். இதில் சருமமும் அடங்கும்.

பிரெஞ்சு ப்ரைஸ்

பிரெஞ்சு ப்ரைஸ்

எண்ணெய் பசையுடன், ஸ்டார்ச் அதிகமாக உள்ள பிரெஞ்சு ப்ரைஸில் சுத்தரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இவை பருக்களை உருவாக்கும் என்று ஏற்கனவே நாம் கூறியுள்ளோம்.

கடல் உணவுகள்

கடல் உணவுகள்

பருக்கள் உருவாகவும், அவைகள் வெடிக்கவும் அயோடின் முக்கிய பங்கு வகிக்கிறது. இறால், நண்டு, கடல் சிப்பி, கிளிஞ்சல் மற்றும் மீன்களில் அயோடின் அளவு வளமையாக உள்ளதால், பருக்கள் வருவதற்கு இவைகள் கூட ஒரு காரணமாக விளங்குகிறது.

கீரை வகைகள்

கீரை வகைகள்

ஆரோக்கியமான உணவு வகைகளில் கீரையை சேர்த்தால் பிரச்சனை ஏற்படும் என்று சொன்னால், உங்களுக்கு அதனை நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை. கீரையிலும் அயோடின் வளமையாக உள்ளதால், அவை பருக்களை உண்டாக்கலாம். வேண்மெனில் உங்களுக்கு திடீரென்று பருக்கள் வருகிறது என்றால் உணவில் கீரை சேர்த்துள்ளீர்களா என்பதை கவனியுங்கள்.

காரசாரமான உணவுகள்

காரசாரமான உணவுகள்

காரசாரமான உணவுகள் பருக்களை உருவாக்குவதில்லை. மாறாக ஏற்கனவே பருக்கள் இருக்குமாயின், அதனை உடைத்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். அதற்கு காரணம் காரசாரமான உணவுகள் உடல் வெப்ப நிலையை அதிகரிக்க செய்து, சருமத்தில் அழற்சியை ஏற்படுத்தும். இவை இரண்டுமே பருக்களை உடையச் செய்யும்.

இறைச்சி

இறைச்சி

நாம் இன்று உண்ணும் இறைச்சிகள் பெரும்பாலும் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் டி.எச்.டி. போன்ற ஹார்மோன்கள் செலுத்தி வளர்க்கப்படும் மிருகங்களில் இருந்து எடுக்கப்படுபவை தான். அதனால் அதிக அளவில் இறைச்சியை உண்ணும் போது, அவை பருக்கள் உருவாக காரணமாக அமையும். மேலும் இறைச்சி சாப்பிடுவதால், உடலில் உள்ள அமிலக்காரக் குறியீடு இருக்க வேண்டிய அளவை விட, அதிகமாக உயர்த்திவிடும். இதனால் அழற்சிகளும் அதிகரிக்கும்.

உப்புக்கண்டம்

உப்புக்கண்டம்

பருக்கள் ஏற்பட மற்றொரு முக்கிய காரணியாக விளங்குகிறது பன்றி மற்றும் மாட்டிறைச்சியில் இருந்து செய்யப்படும் உப்புக்கண்டம். அதனால் பலருக்கு சுவையுள்ள உணவாக விளங்கும். ஆனால் சிலருக்கு பருக்களை உண்டாக்கும்.

சோடா மற்றும் எனர்ஜி பானங்கள்

சோடா மற்றும் எனர்ஜி பானங்கள்

ஏற்கனவே கூறியதை போல மன அழுத்த ஹார்மோன்களை இவைகளும் சுரக்கச் செய்யும். இது சருமத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் சர்க்கரை கலந்த சோடா மற்றும் எனர்ஜி பானங்களில் காஃப்பைன் கலந்துள்ளது. அதனால் இதனை அதிகமாக பருகினால், பருக்கள் வரத் தொடங்கினால் ஆச்சரியப்படாதீர்கள்.

மதுபானம்

மதுபானம்

மதுபானம் குடிக்கும் போது உடல் இயற்கையாகவே வறட்சி அடையும். உடல் வறட்சி அடையும் போது, சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் வற்றி போகும். அதனால் பலருக்கு பருக்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do These Foods Cause Acne?

For years, the relationship between diet and acne has been controversial. But there is no doubt that there is a connection between what we eat and the condition of our skin.
Desktop Bottom Promotion