For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் செய்யக்கூடிய மாய்ஸ்சுரைசர்கள்!!!

By Boopathi Lakshmanan
|

மாய்ஸ்சுரைசர்கள் இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ என எதுவாகவும் இருக்கலாம். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தும் போது, எந்தவிதமான வேதியியல் பின் விளைவுகளும் வருமோ என்ற பயம் இருக்காது. வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாய்ஸ்சுரைசர்கள் விலை குறைவாகவும், உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்காத வகையிலும் இருக்கும். பொதுவாகவே, வியாபார ரீதியில் விற்கப்பட்டு வரும் மாய்ஸ்சுரைசர்கள் மிகவும் விலை உயர்வாகவும், பல்வேறு வேதி விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த விளைவு தான்.

பிராண்டட் மாய்ஸ்சுரைசர்கள் மட்டுமே நமது தோல்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பல்லாண்டு காலங்களாகவே விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. உண்மையில், வீடுகளில் தயாரிக்கப்பட்ட மாய்ஸ்சுரைசர்கள் எந்தவித பக்க விளைவுகள் இல்லாமலும் இந்த பணியை சிறப்பாக செய்து விடும். உணர்வுமிக்க சருமங்களில் வீடுகளில் தயாரிக்கப்பட்ட மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்துவது பாதுகாப்பான செயல்பாடாகும். இயற்கையான பொருட்கள் உங்கள் சருமத்தை பராமரித்து வரும் வேளைகளில், செயற்கையான வேதிப்பொருட்கள் அதனை பாழ்படுத்தி விடும்.

உணர்ச்சிமிக்க சருமங்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் வீடுகளில் செய்யப்பட்ட மாய்ஸ்சுரைசர்களின் பங்கு மிகவும் அதிகமானது மற்றும் வேகமானது. இயற்கையான முறையில் வீடுகளில் செய்யப்பட்ட மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்துவதால், தோல் பிரச்னைகள் தீர்க்கப்படுவதுடன் பக்க விளைவுகளும் வராமல் தவிர்க்கப்படும். விலை குறைவானதாகவும், நாமே சொந்தமாக தயாரித்தது என்ற திருப்தியும் அளிக்கும் இந்த தயாரிப்பு. அனைவரும் திறன் வாய்ந்த மாய்ஸ்சுரைசர்களை எதிர்பார்க்கும் இந்த குளிர்காலத்தில், அவற்றை வீட்டிலேய உருவாக்க சில யோசனைகளை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுக்கான மாய்ஸ்சுரைசர்

உடலுக்கான மாய்ஸ்சுரைசர்

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன், 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்து, 1:3 அளவில் பாலுடன் சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் வைத்தால், தினமும் பயன்படுத்த உங்களுக்கு ஒரு மாய்ஸ்சுரைசர் தயார். இது உணர்வு மிக்க சருமத்திற்கு உதவும் அற்புதமான வீட்டுத் தயாரிப்பாகும்.

முகத்திற்கான மாய்ஸ்சுரைசர்

முகத்திற்கான மாய்ஸ்சுரைசர்

முகத்திற்கான மாய்ஸ்சுரைசர்

குளியலுக்குப் பிறகு பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசர்

குளியலுக்குப் பிறகு பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசர்

பாதாம், எள் மற்றும் தேங்காய் போன்ற முக்கியமான எண்ணெய்களில் 10 தேக்கரடிண்டிகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றை ஒன்றாக கலக்கி ஒரு பாட்டிலில் வைக்கவும். குளித்து முடித்த பின்னர் இந்த கலவையை உடலில் தடவினால் உங்களுடைய சருமம் மென்மையாகவும், பட்டுப் போல் பளபளப்பாகவும மாறிவிடும். இந்த தயாரிப்பை பயன்படுத்தி மாற்றத்தை உணருங்கள்.

புத்துணர்விற்கான மாய்ஸ்சுரைசர்

புத்துணர்விற்கான மாய்ஸ்சுரைசர்

வெள்ளரிக்காயுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்துங்கள். இது புத்துணர்வை அளிக்கும் வீட்டுத் தயாரிப்பாகும்.

வறண்ட சருமத்திற்கான கற்றாழை மாய்ஸ்சுரைசர்

வறண்ட சருமத்திற்கான கற்றாழை மாய்ஸ்சுரைசர்

கற்றாழை சாற்றை இரண்டு தேக்கரண்டிகள் எடுத்துக் கொண்டு, பாதாம் எண்ணெய் ஒரு தேக்கரண்டி மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி அளவிற்கு உள்ள கரைசலில் கரைக்கவும். இந்த கரைசல் உங்களுடைய வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மிகவும் உதவும்.

சாதாரண தோலுக்கான கற்றாழை மாய்ஸ்சுரைசர்

சாதாரண தோலுக்கான கற்றாழை மாய்ஸ்சுரைசர்

4 தேக்கரண்டிகள் கற்றாழை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவற்றை கலக்கி, அறையின் வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கவும். இந்த கரைசலை சாதாரண தோலை ஈரப்பதமாக வைக்கும் மாய்ஸ்சுரைசர் ஆக பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

ரோஜா இதழ் மாய்ஸ்சுரைசர்

ரோஜா இதழ் மாய்ஸ்சுரைசர்

ரோஜா இதழ்களை சில துளிகள் ரோஸ் வாட்டரில் வைத்து கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி, 2 தேக்கரண்டிகள் கற்றாழை சாறை சேர்க்கவும். இதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மென்மையான ஈரப்பதம் மிக்க சருமத்தை பெற தடவி விடலாம். இந்த மாய்ஸ்சுரைசரையும் சென்சிடிவ் சருமங்களில் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் மாய்ஸ்சுரைசர்

தேங்காய் எண்ணெய் மாய்ஸ்சுரைசர்

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தேங்காய் எண்ணெயை, வைட்டமின் ஈ மற்றும் லாவண்டருடன் ஒரு கிண்ணத்தில் வைத்து கலக்கவும். சிறந்த பலன்களை அடைய விரும்பினால், இந்த மாய்ஸ்சுரைசரை தொடர்ந்து பயன்படுத்தவும்.

பால் மாய்ஸ்சுரைசர்

பால் மாய்ஸ்சுரைசர்

2 தேக்கரண்டி சுத்தமான ஆலிவ் எண்ணெயை எடுத்து, பாலுடன் கலக்கவும். இரண்டு தேக்கரண்டிகள் எலுமிச்சையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். உணர்வு மிக்க சருமங்களிலும் பயன்படுத்த ஏற்ற ஆற்றல் மிக்க வீட்டு தயாரிப்பு இப்பொழுது உங்கள் கையில்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Homemade Moisturiser For Winter

Homemade moisturisers for sensitive skin types are natural remedies for most of your skin problems and it acts pretty fast too. By using homemade moisturisers you are gaining in many aspects, primarily in getting rid of your problems without any side-effects to your health.
Story first published: Saturday, December 14, 2013, 18:28 [IST]
Desktop Bottom Promotion