For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர் காலத்தில் ஆயுர்வேத முறைப்படி சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ்...

By Ashok CR
|

பண்டைய இந்திய விஞ்ஞானத்தின் மருத்துவம் தான் ஆயுர்வேதம். பல வகையான செடிகள், மூலிகைகள் மற்றும் மசாலாக்களை கலந்து ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகள் எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி சிறப்பாக செயல்படும். இதில் எண்ணிலடங்கா பயன்கள் இருப்பதால் மேற்கத்திய நாடுகளிலும் கூட இந்த மருந்துகள் புகழ் பெற்றுக் கொண்டு வருகிறது.

நம் உடம்பில் உள்ள உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் ஆயுர்வேதம் பார்த்துக் கொள்கிறது. அதே போல் சரும வியாதிகளை குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தில் சில மருந்து வகைகள் மற்றும் குணப்படுத்தும் முறைகள் உள்ளது. சருமம் என்பது நம் உடலில் உள்ள மென்மையான பகுதியாகும். வானிலை மாற்றங்கள், மாசு மற்றும் தொற்றுக்கள் போன்றவற்றால் உங்கள் சரும திசுக்கள் சுலபமாக பாதிப்படையும். குளிர் காலத்தின் போது உங்கள் சருமத்தை பாதுகாத்திட சில பயனுள்ள ஆயுர்வேத டிப்ஸ் உள்ளது. வறண்டு போய் இருக்கும் குளிர் காலத்தில் உங்கள் சருமம் வறண்டு சொரசொரப்பாக மாறி விடும்.குளிர் காலத்தில் உங்கள் சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பாக விளங்குகிறது ஆயுர்வேத மருந்துகள்.

ஏற்கனவே குளிர் காலம் தொடங்கி விட்ட நிலையில், நம்மில் பல் பேருக்கு வறண்ட பாதம், வெடிப்பு விழுந்த உதடுகள் மற்றும் சொரசொரப்பான சருமம் உண்டாகி இருக்கும். குளிர் காலத்திலும் உங்கள் சருமம் பொலிவடைந்து ஜொலித்திட பல ஆயுர்வேத டிப்ஸ்கள் உள்ளது. மேலும் உங்கள் சருமம் நற்பதத்துடன் மென்மையாக இருக்க ஆயுர்வேதம் எப்படி உதவுகிறது என்பதை பற்றியும் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மசாஜ்

மசாஜ்

வறண்ட சொரசொரப்புள்ள சருமத்திற்கு தீர்வாக சூடான எண்ணெய் மசாஜ் கொடுக்க சொல்லி வலியுறுத்துகிறது ஆயுர்வேதம். பிராமி மற்றும் வேம்பு போன்ற ஆயுர்வேத பொருட்களை கலந்த சூடான எண்ணெய்யை பயன்படுத்துங்கள். எண்ணெய் மசாஜ் உங்கள் சருமத்திற்கு பொலிவூட்டும். மேலும் அது உங்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கும். சீரான முறையில் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வது குளிர் காலத்தில் சருமத்திற்கு மிகவும் நல்லது. மசாஜ் செய்து கொள்ள சந்தையில் பல ஆயுர்வேத எண்ணெய்கள் கிடைக்கின்றன.

ஃபேஸ் பேக்

ஃபேஸ் பேக்

குளிர் காலத்தில் ஃபேஸ் பேக் எனப்படும் மூலிகளை கலந்த முகப்பூச்சுக்களை பயன்படுத்தினால் உங்கள் சருமம் மீண்டும் ஈரப்பதத்தை பெறும். பன்னீர், நெல்லிக்காய், கற்றாழை, மஞ்சள் மற்றும் இதர இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். இவைகளை பால் அல்லது க்ரீமுடன் கலந்து பயன்படுத்தலாம். கற்றாழையை பயன்படுத்தி செய்யப்படும் ஜெல்லை ஒரு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இந்த ஜெல்லை உங்கள் முகத்தில் தடவி அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். பாலில் பன்னீரை கலந்து தினமும் பயன்படுத்துவது மற்றொரு வழியாகும். இவைகளை சீரான முறையில் பயன்படுத்தினால் உங்கள் சருமம் புத்துணர்வு பெற்று ஈரப்பதத்துடன் இருக்கும்.

ஆரோக்கியமாக உண்ணுங்கள்

ஆரோக்கியமாக உண்ணுங்கள்

குளிர் காலத்தின் போது நன்றாக சாப்பிட வேண்டியது அவசியம். உங்கள் உணவுகளில் நெல்லிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, ட்ரைஃபாலா என பல வகையான மூலிகை மற்றும் மசாலாக்களை சேர்த்துக் கொள்ளுங்கள். மேற்கூறிய அனைத்து மூலிகைகளும் நச்சுக்களை உள்ளிழுத்து வெளியேற்றி விடும். பல ஆயுர்வேத ச்வபன்பிரஷ் (chwapanprash) சந்தையில் கிடைக்கிறது. அவைகளை குளிர் காலத்தில் உண்ணுவது உடல்நலத்துக்கு இன்னமும் நல்லது. ஆயுர்வேத மூலிகைகள் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். ச்வபன்பிரஷ்ஷை சீரான முறையில் ஒரு கரண்டி அளவு உட்கொண்டால் போதும். அது சருமத்திற்கும் உடலுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது போக பல பழங்களையும் உங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையிலேயே நீர்ச்சத்துடன் விளங்கும் பழங்கள் உங்கள் சருமத்தை நற்பதத்துடன் பளபளப்பாக வைக்கும்.

தண்ணீர் குடியுங்கள்

தண்ணீர் குடியுங்கள்

சரும பராமரிப்புக்கான இந்த டிப்ஸ் அனைத்துக் காலங்களுக்கும் ஒத்துப்போகும். உங்கள் அணுக்களை சீர் செய்யவும் புத்துணர்வு அளிக்கவும் தண்ணீர் உதவும். சீரான முறையில் தண்ணீர் பருகினால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்கும். இதனை குளிர் காலத்தில் கடைப்பிடிக்கவும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. அனைத்து வகையான நோய்களுக்கும் தண்ணீர் மருந்தாக விளங்குகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. குளிர் காலத்தில் வெப்பநிலை வறண்டு போயிருப்பதால் இக்காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம். தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீராவது குடித்தாக வேண்டும்.

குளிக்கும் பொருட்கள்

குளிக்கும் பொருட்கள்

குளிர்காலத்தின் போது கடுமையான சோப்புகளை பயன்படுத்த கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ரசாயனம் கலந்த சோப்புகள் உங்கள் சருமத்தில் உள்ள நீரச்சத்தை நீக்கி அதனை சொரசொரப்பாக மாற்றும். சோப்பிற்கு பதிலாக பால், க்ரீம், மஞ்சள் பொடி மற்றும் கடலை மாவின் கலவையை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தின் அமைப்பு நயத்தை மேம்படுத்தி அதனை மென்மையாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Skin Care Tips For The Winter

As the cold season has already started, many of us would be suffering from dry heels, chapped lips and rough skin. There are many ayurveda tips to keep the skin glowing and smooth in winters as well. Further, we will discuss some tips from Ayurveda that would help you keep your skin soft and fresh.
Story first published: Monday, December 30, 2013, 12:09 [IST]
Desktop Bottom Promotion