For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீனேஜ் பெண்களுக்கான சில ஆயுர்வேத அழகு குறிப்புகள்!!!

By Super
|

அழகாக, கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் திருவிழாக்கள் போன்ற எல்லா இடங்களிலும், எல்லோரும் நமது அழகை ரசிக்க வேண்டும், நமது அழகு எல்லோர் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் நாம் எண்ணுவது உண்மையே.

இதன் காரணமாக, குறிப்பாக இளம் பெண்கள் தம்மை அழகுப்படுத்தி கொள்ள, பல அழகுசாதனப் பொருட்களை வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்வது வாடிக்கையாகிவிட்டது. இருந்த போதிலும், இவற்றைப் பயன்படுத்துவதால், அவர்கள் தங்களை முழுமையாக அழகுப்படுத்திக் கொள்கிறார்களா? என்பது சந்தேகத்திற்குரியது. ஆகவே, பெண்களுக்கான சில இயற்கையான ஆயுர்வேத அழகுக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதை முயற்சித்து, இன்னும் அழகை கூட்டுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் மற்றும் இஞ்சி பேஸ்ட்

தேன் மற்றும் இஞ்சி பேஸ்ட்

தேனையும், இஞ்சியையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன், முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுப்பதற்கு மிகவும் சிறந்தது.

ஆலிவ் ஆயில் மசாஜ்

ஆலிவ் ஆயில் மசாஜ்

இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்தை இறுகச் செய்வதற்கு ஆலிவ் ஆயில் மசாஜ் மிகவும் பயனுள்ளதாகும். அதற்கு தினமும் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். ஆன்டி-க்ளாக் முறையில் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவற்றை சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, 10 நிமிடத்திற்குப் பின்னர் வெந்நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும்.

கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

மஞ்சள், சிறிதளவு பச்சை பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிற தடயங்கள் நீங்கிவிடும்.

இனிப்பான தேன்

இனிப்பான தேன்

தேன், எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் ஆகியவற்றை சேர்த்து கலவை செய்யுங்கள். இந்த பேஸ்டை உலர்ந்த சருமத்தில் தடவி, 10-15 நிமிடத்திற்குகுப் பின்னர் கழுவவும். இது உலர்ந்த சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள மிகவும் சிறந்தது.

உணவில் அதிகளவு பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்

உணவில் அதிகளவு பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்

உணவின் ஒரு பகுதியாக அதிகளவு பழங்களை சாப்பிடுங்கள். குறிப்பாக சக்கரை அல்லது உப்பு சேர்க்காமல் பழங்கள் சாப்பிட வேண்டும். அதிலும் கரும்பச்சை காய்கறிகள் உட்பட பல்வேறு வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

தேவையான அளவு நீர் குடித்தல்

தேவையான அளவு நீர் குடித்தல்

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கபடுத்திக் கொள்ளுங்கள். தினமும் விடியற்காலையில் தண்ணீர் குடிப்பதால், சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மோர்

மோர்

வெயிலினால் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறத்தை அகற்றுவதற்கு மோர் ஒரு சிறந்த மருந்தாகும். அதற்கு சிறிது நாட்கள் முகத்தை மோரால் கழுவிப் பாருங்கள், மாற்றத்தை உணர்வீர்கள். இது ஒரு இயற்கை சரும மருந்தாக இருப்பதால், எண்ணெய் பசையான சரும பொலிவுக்கு சிறந்தது.

காலை உணவு

காலை உணவு

காலையிலும், மதிய வேளையிலும் அதிகளவு கலோரி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். மாலையில் குறைவாக சாப்பிட வேண்டும். இதனால் காலையிலும், நண்பகலிலும் அதிகளவு கலோரி உடையும் வாய்ப்பைக் கொடுக்கும்.

மாய்ஸ்சுரைசிங்

மாய்ஸ்சுரைசிங்

வெந்நீரில் முகம் கழுவிய பின்னர் அல்லது குளித்த பின்னர், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமத்திற்கு சிறந்தது. இதனால் சருமத்திலுள்ள எண்ணெய் பசைத் தன்மையை தக்க வைத்துக் கொள்வதற்கும், சருமத்தை ஈரத்தன்மையாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

திராட்சை

திராட்சை

3-4 தேக்கரண்டி ஓட்ஸை, திராட்சை சாறுடன் கலந்து பேஸ்ட் செய்யவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால், ஆரோக்கியமான, மிருதுவான சருமத்தை விரைவில் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Beauty Tips For Teens

Young girls, specially, spend lots of money and energy on choosing their beauty products – all with the hope to look beautiful. Here are some natural beauty tips for girls.
Desktop Bottom Promotion