For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொலிவான சருமத்தை எளிதில் பெறுவதற்கான சில சூப்பர் டிப்ஸ்...

By Maha
|

பொலிவிழந்த சருமம், சரும வறட்சி மற்றும் சரும சுருக்கத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா? முகப்பரு முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? இதனால் இதனைப் போக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா? அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சிக்காமல், கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்களா? இப்படி கெமிக்கல் பொருட்களை முயற்சித்து சரும பிரச்சனைகள் நீங்கவில்லை என்று கலவைப்பட்டால் எப்படி?

ஆம், எவ்வளவு தான் கெமிக்கல் கலந்து அழகுப் பொருட்கள் சரும பிரச்சனைகளை உடனே போக்கினாலும், அவை தற்காலிகமாகத் தான் இருக்கும். எப்படியெனில், சரும பிரச்சனைகளைப் போக்குவதற்கு தினமும் பயன்படுத்தும் அழகு பொருட்களை ஒருநாள் பயன்படுத்த தவறினாலும், சரும பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நீக்குவதற்கு போராடினால், நிச்சயம் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் அதிகரித்து, சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

அதற்கு எந்த பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தெரியாமல் முழிக்கிறீர்களா? அத்தகையவர்களுக்குத் தான் தமிழ் போல்டு ஸ்கை, ஒருசில பொருட்களை கொடுத்து, அதனைப் பயன்படுத்தும் முறையை தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்து அழகாக மின்னுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதினா

புதினா

புதினாவை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும், அவை அனைத்தும் குணமாகிவிடும்.

தண்ணீர்

தண்ணீர்

சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், முதலில் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், சரும வறட்சி ஏற்படும்.

பப்பாளி

பப்பாளி

வைட்டமின் சி அதிகம் நிறைந்த பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். ஏனெனில் அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

இந்திய பெண்களின் பாரம்பரிய அழகுப் பொருளான மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

வால்நட்

வால்நட்

மூக்கு மற்றும் தாடையை சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும்.

அரிசி மாவு

அரிசி மாவு

சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, முகத்திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பிலை

வேப்பிலை

பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது மிகவும் நல்லது.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர்

தேங்காய் நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். அதிலும் அம்மையால் ஏற்படும் தழும்புகள் அல்லது பிம்பிள் தழும்புகள் போன்ற எவையானாலும், தேங்காய் தண்ணீர் கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, பிம்பிள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால், வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, மாஸ்க் போடலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது எலுமிச்சையை பயன்படுத்துவது தான். மேலும் எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கவல்லது. எனவே இரவில் படுக்கும் முன், எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவி, பின் ஏதேனும் ஒரு எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் கூந்தல் பிரச்சனைகளை மட்டுமின்றி, சரும பிரச்சனைகளையும் போக்க வல்லது. அதிலும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மாஸ்க் போட்டால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

ஷாம்பெயின்

ஷாம்பெயின்

ஆம், ஷாம்பெயின் பானத்தைக் கொண்டும், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் சீக்கிரம் அழகான சருமத்தைப் பெற வேண்டுமெனில், இந்த முறையைப் பயன்படுத்தலாம். அதற்கு ஷாம்பெயின் பானத்தை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

கடலை மாவு

கடலை மாவு

எப்படி அரிசி மாவு சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக உள்ளதோ, அதை விட மிகவும் சிறந்த அழகு பராமரிப்பு பொருள் தான் அரிசி மாவு. அதற்கு கடலை மாவை, ரோஸ் வாட்டரில் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை கழுத்து மற்றும் முகத்திற்கு தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை எளிதில் நீங்கிவிடும்.

பாதாம்

பாதாம்

பாதாமை அரைத்து பொடி செய்து, அதில் சிறிது பாதாம் எண்ணெய் ஊற்றி, சருமத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து சாதாரணமாக குளிர்ந்த நீரில் மட்டும் கழுவி, பின் காட்டன் கொண்டு முகத்தை துடைத்தால், முகம் பொலிவோடு காணப்படும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அதனை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேன்

தேன்

சருமத்தில் உள்ள பிம்பிளை எளிதில் போக்க வேண்டுமெனில், தேனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையின் ஜெல்லை சருமத்திறிகு தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமம் மென்மையாவதோடு, சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.

தக்காளி சாறு

தக்காளி சாறு

காய்கறிகளில் ஒன்றான தக்காளியும் சரும பிரச்சனைகளைப் போக்கக்கூடியது. அதற்கு முதலில் செய்ய வேண்டியதெல்லாம், தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

தயிர்

தயிர்

சரும வறட்சியை நீக்க ஒரு சிறந்த முறையென்றால், தயிரை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்ம். இந்த முறையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், அதன் பலன் நன்கு புலப்படும்.

ஆஸ்பிரின்

ஆஸ்பிரின்

ஆஸ்பிரின் மாத்திரையும் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதிலும் அந்த மாத்திரையை பொடி செய்து, தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்தால், வெள்ளை புள்ளிகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Ingredients For A Clear Skin

Take a look at these 20 best natural ways to help you get clear and better looking skin for your face and body care. If you know of anyone who is looking for natural ways to get supple skin, this is the perfect read.
Story first published: Monday, August 5, 2013, 13:32 [IST]
Desktop Bottom Promotion