For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முக எழிலைச் சிதைக்கும் பருக்களைப் போக்க சில சூப்பர் டிப்ஸ்...

By Super
|

பருக்கள் உண்டாவதற்கான பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதற்கான உண்மையான காரணம் மிக எளிமையானது. சருமத்தினுள் இருக்கும் ரோமக்கால்களினுள் வியர்வைச் சுரப்பியானது வீக்கமடைந்து, அதனுள் வியர்வைக் கோளங்கள் (sebum) மற்றும் இறந்த சருமச் செல்கள் அடைக்கப்படும் நிலையில் அங்கு பரு உண்டாகிறது.

இந்த சூழ்நிலையானது, மிகச் சாதாரணமாகக் காணப்படும் பாக்டீரியாவான புரோப்பியானி பாக்டீரியம் (Propionibacterium) பருக்கள் வளர்வதற்கு உகந்ததாகும். இந்த பாக்டீரியா தொற்றினால், சருமத்தில் ஒரு வீக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே பருக்கள் உள்ள பகுதியில், ஒரு சிவந்த மற்றும் வீங்கிய தோற்றமும் ஏற்படுகிறது.

பருவ வயதில் பருக்கள் ஏற்படுவது சகஜமான ஒன்று. ஆண்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன், டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) மற்றும் டிஹைட்ரோஎபிஆண்ட்ரோஸ்டிரோன் சல்பேட் ஆகிய ஹார்மோன்களால், ஆண் பெண் என இருபாலருக்கும் பருக்கள் உண்டாகின்றன. இந்த ஹார்மோன்கள் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வைக்கோளங்களை அமைத்து. ஒரு புடைத்த தோற்றத்தை உண்டாக்குகின்றன.

எனவே முக எழிலைச் சிதைக்கும் இத்தகைய பருக்களைக் கட்டுப்படுத்தவும், முகத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், 20 சிறப்பான குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்தைக் கவனமுடன் பேணுங்கள்

சருமத்தைக் கவனமுடன் பேணுங்கள்

சருமத்தை சுத்தப்படுத்துங்கள். எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள். ஈரப்படுத்துங்கள். ஆமாம், முகத்தினை தினமும் வேம்பு கலந்த குளிர்ந்த நீரால், கழுவி சுத்தப்படுத்துங்கள். முகத்தைக் கழுவியவுடன், நல்லதொரு மாய்ஸ்சுரைசர் கொண்டு ஈரப்படுத்துங்கள். பின் தேவைக்கேற்ப, வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து கலக்குங்கள். ஒரு தெர்மோ மீட்டரை எடுத்து இக்கலவையினுள் விட்டு, அந்த பசையை எடுத்து பருக்களால் பாதிக்கப்பட்ட பகுதியில் மென்மையாகத் தடவுங்கள். பத்து நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்து வாருங்கள். ஆனால் சருமத்தில் அதிக அளவு எண்ணெய்ப் பசை இருந்தாலோ, எரிச்சல் இருந்தாலோ, இதனை செய்ய வேண்டாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டவும். ஒரு பகுதியை எடுத்து, முகத்தில் பருக்கள் உள்ள பகுதியில் அழுத்தித் தேய்க்கவும். அரிப்பது போல உணர்ந்தால், கவலைப்படாதீர்கள். எலுமிச்சைச் சாறு வேலை செய்கிறது என்று பொருள். மேலும் எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. அது பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. சிறிது நேரம் கழித்து முகத்தை நன்றாகக் கழுவி விடவும். வெளியில் செல்வதானால், ஏதாவது சன் ஸ்க்ரீன் லோசனைப் பூசிக்கொண்டு செல்லவும். ஏனெனில், சிட்ரிக் அமிலமானது சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மெல்லிய வட்ட வடிவ சீவல்களாகச் சீவவும். இச்சீவல்களை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது வைக்கவும். உருளைக்கிழங்கிற்கு வீக்கத்தை வடிய வைக்கும் குணம் உண்டு. ஆகவே 5-10 நிமிடங்கள் கழித்து முகத்தினை சாதாரண நீரினால் கழுவுங்கள்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயிலானது சிறந்த கிருமிநாசினியாகும். பருக்கள் உண்டான இடங்களை பக்க விளைவுகள் ஏதுமின்றி, குணப்படுத்த வல்லது. எனவே இந்த எண்ணெய் உள்ள பாட்டிலின் மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிள் அல்லது அறிவுரைகளைப் படித்து அதன்படி நடக்கவும்.

ஆஸ்பிரின்

ஆஸ்பிரின்

இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்து கொள்ளுங்கள். அதனை பொடி செய்து தண்ணீரில் கரையுங்கள். இதனை பருக்கள் உள்ள இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். ஆஸ்பிரினில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. அது பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து அழிக்கிறது. மேலும் பருக்களையும் காயச் செய்கிறது.

படிகாரம்

படிகாரம்

படிகாரமானது இயற்கையான துவர்ப்பி மற்றும் கிருமிநாசினியாகும். இது சருமத்திலுள்ள பருக்களின் மீது சிறப்பாக வேலை செய்யும். அதிலும் சருமத்திலுள்ள பருக்களின் மீது படிகாரத்தைத் தடவி வந்தால், சிறப்பான குணம் தரும். ஆனால் படிகாரத்தை அதிகமாகத் தடவுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது பருக்களின் தீவிரத்தை அதிகரிக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரானது இறந்து போன சரும செல்களை அழிக்கிறது. பருக்களையும் குணப்படுத்துகிறது. ஆனால் இதனை மிகக்குறைவாக உபயோகிப்பதே நல்லது. அதிகமாக இதனை பயன்படுத்துவது சருமத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். ஆப்பிள் சீடர் வினிகரை முகத்தில் பயன்படுத்தும் முன்பாக அதனை தண்ணீரில் கலந்து நீர்த்துப் போகச் செய்யுங்கள். பின் அதனை தடவி 10 நிமிடத்திற்குக் காத்திருங்கள். அதன் பிறகு, சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தினைக் கழுவுங்கள்.

பேஸ்ட்

பேஸ்ட்

முகத்தில் பேஸ்ட் தடவுவதா? ஆச்சரியமாக உள்ளதா? நாங்கள் விளையாடவில்லை. பேஸ்ட்டில் சிலிகா உள்ளது. இதற்கு முகத்திலுள்ள ஈரப்பசையை அகற்றும் தன்மை உள்ளது. இதன் விளைவாக பருக்களை அகற்றுகிறது. ஆனால் சோடியம் லாரைல் சல்பேட் (SLS) கொண்ட பேஸ்ட் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். இது சருமத்திற்கு பாதிப்பை உண்டாக்கலாம்.

ஐஸ்

ஐஸ்

பருக்களினால் உண்டாகும் வீக்கத்தினை ஐஸ் கட்டுப்படுத்தும். இரத்தக்குழாய்களைச் சுருங்கச் செய்து, சருமம் மற்றும் பருக்களின் வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

தேன்

தேன்

தேன் ஒரு இயற்கையான கிருமிநாசினியாகும். இது பருக்களிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது. ஆகவே தேனை முகத்தில் தடவி ஒரு இரவு முழுவதும் விட்டுவிடுங்கள். காலையில் சாதாரண நீரினால் முகத்தைக் கழுவுங்கள். வேண்டுமெனில் தேனை ஃபேஷியல் மாஸ்க் ஆகவும் பயன்படுத்தலாம்.

நாட்டுச் சர்க்கரை

நாட்டுச் சர்க்கரை

சிறிது நாட்டுச்சர்க்கரையை எடுத்துக் கொண்டு, அதனை பருக்கள் உள்ள முகத்தில் தேய்க்கவும். இது முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தடுக்கும். அதிலும் மாதத்திற்கு மூன்று முறை இப்படி செய்து வரலாம்.

முட்டை

முட்டை

முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தின் மீது தடவுங்கள். இது முகத்தில் பருக்களை உண்டாக்கும் எண்ணெய் பசையை நீக்குகிறது. முட்டையின் மஞ்சள் கருவையும் பயன்படுத்தலாம். இது சருமத்துவாரங்களில் ஏற்படும் அடைப்புகளையும், பாக்டீரியா உற்பத்தியாவதையும் தடுத்து, பருக்கள் உண்டாவதை நிறுத்துகிறது. மஞ்சள் கருவினை முகத்தில் தடவிக் கொண்டு, 15-20 நிமிடங்கள் காத்திருங்கள். நல்ல தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். இது போல வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வாருங்கள்.

பூண்டு

பூண்டு

பூண்டு பற்கள் இரண்டினை எடுத்துக் கொண்டு நன்றாக நசுக்கி சாறு எடுக்கவும். இதனை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின் நன்றாகக் கழுவிவிடுங்கள். பூண்டுச்சாற்றினை முகத்தில் 15-20 நிமிடங்களுக்கு மேல் இருக்க விட வேண்டாம். இது முகத்தில் எரிச்சலை உண்டாக்கக்கூடும்.

புதினா

புதினா

புதினா இலைச் சாற்றினை அல்லது புதினா எண்ணெயை முகத்தில் தடவிக் கொண்டு, 10 நிமிடங்கள் காத்திருக்கவும். அதன் பிறகு சாதாரண தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும்.

தேன், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய்

தேன், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய்

தேன், இலவங்கப்பட்டை மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கெட்டியான பசையை உண்டாக்கவும். இதனை உங்கள் முகத்தில் தடவிக்கொண்டு 1-2 மணிநேரம் காத்திருக்கவும். பருக்கள் சுருங்குவதைக் காணலாம். இதனை ஃபேஷியல் மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம். 10 நிமிடங்கள் கழித்து நல்ல தண்ணீரில் அலசிவிடுங்கள்.

உணவுகள்

உணவுகள்

சலித்த உணவுப் பொருள்களைத் தவிருங்கள். சலித்த மாவினையும் தவிருங்கள். சர்க்கரையைக் குறைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளையும், பழங்களையும் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சருமம் மாசு மருவின்றி பொலிவுடன் திகழும். மேலும் உடலில் எப்போதும் நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை தண்ணீர் சுத்தம் செய்துவிடும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இது பருக்களுக்குக் காரணமான வீக்கத்தையும் குறைக்கும்.

வைட்டமின்கள்

வைட்டமின்கள்

உணவில் போதுமான மல்டி வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதா என்றும் பாருங்கள். சருமம் எப்போதும் புத்துணர்வுடன் இளமையாகத் திகழவும், சருமத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கவும், சருமத்தில் கரும்புள்ளிகள் நீங்கவும், பருக்கள் நீங்கவும், இது மிகவும் முக்கியம். மேலும் உணவு ஆலோசகரிடம், மல்டி வைட்டமின்களை அளிக்கவல்ல உணவு வகைகளைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஹோமியோபதி

ஹோமியோபதி

பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவ நிபுணர் ஒருவரது பரிந்துரை பருப்பிரச்சினையைத் தீர்க்க உதவலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Best Ways To Treat Pimples

Pimples are common in teenagers, due to the high production of androgen hormones, testosterone, dihydrotestosterone (DHT) and dehydroepiandrosterone sulfate in both sexes. These hormones cause a raised output of sebum by the Sebaceous Glands. Here are 20 best ways to protect these beauty 'killers'.
Desktop Bottom Promotion