For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தின் அழகிற்கு கேடு விளைவிக்கும் 15 உணவுகள்!!!

By Ashok CR
|

நாம் எல்லாரும் விரும்புவது அழகான பொலிவான சருமத்தை தான். அவ்வாறு இருப்பதற்கு நாம் நமது சரும பராமரிப்புகளில் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் கிரீம்கள் அல்லது லோஷன்கள் மட்டுமே நமது சருமத்தை பொலிவடையச் செய்யும் என்பது கிடையாது. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நமது சருமத்தை எளியமுறையில் பராமரிக்கலாம்.

பெண்கள் அனைவருமே விரும்புவது அழகான மற்றும் பிரச்சனையில்லா முகத்தை மட்டுமே. அதனை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து பராமரித்து வருவீர்கள். உங்கள் சருமம் சிறந்ததாக காட்சியளிக்க எதனையும் செய்வீர்கள். ஊட்டச்சத்து நிரம்பிய உணவை உட்கொள்ளுதல், அதிகமாக தண்ணீர் குடித்தல், கடைகளில் கிடைக்கும் சிறந்த கிரீம்களை உபயோகித்தல், படுக்கச் செல்வதற்கு முன் முகத்தை சுத்தம் செய்தல் போன்ற எல்லாவற்றையும் செய்வீர்கள். இவை அனைத்தும் செய்துவந்த பிறகும் உங்கள் சருமம் சிறப்பாக காட்சியளிக்க வில்லையா? ஏன்? இதற்கு விடைதான் என்ன?

நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது சருமத்தில் பிரதிபலிக்கும். நமது சருமத்தின் நலம் நாம் பின்பற்றி வரும் டயட்டில் தான் நிறைந்துள்ளது. நீங்கள் சிறந்த டயட்டை பின்பற்றினால் சிறந்த சருமத்தை பெறுவீர்கள். அது உங்கள் சருமத்தை மேலும் அழகாக்கி பாராட்டுகளைப் பெற்றுத்தரும். இந்த வகை உணவு வகைகள் உங்கள் சருமத்தை பராமரிக்க உதவும் என்று எதிலோ படித்திருப்பீர்கள். அவ்வகை உணவுகள் உங்கள் சருமத்திற்கு நன்மை அளிக்குமா எனக் கருதாமல் உங்கள் டயட்டில் சேர்த்து உட்கொள்ளுவீர்கள். இதுதான் நம்மில் பலர்க்கு ஏற்படும் சரும நோய்களுக்கான முதன்மை காரணமாகும்.

உங்கள் எடையை குறைப்பதற்கான பல வகை உணவுகள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் உங்கள் சருமத்திற்கு ஏற்றதா எனத் தெரிந்துகொள்ளுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அடுத்த முறை உங்கள் டயட்டில் உணவு வகைகளை சேர்ப்பதற்கு முன் அவை உங்கள் சருமத்திற்கு நல்லதா கேட்டதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும். இதோ உங்கள் சருமத்தை கெடுக்கும் 15 வகை உணவுகள். இவற்றை உங்கள் டயட்டில் சேர்த்து பிரச்சனையில்லா அழகான ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை பிரட்

வெள்ளை பிரட்

ஆரோக்கியமான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தவிர்க்க வேண்டிய முதல் பொருள் தான் இந்த வெள்ளை பிரட். பருக்கள் வரக்கூடிய முகம் உங்களுடையது என்றால், இதில் நிறைந்துள்ள கிளுடேன் உங்கள் பருக்களை இன்னும் மோசமாக்கும்.

சோயா பால்

சோயா பால்

நோய்எதிர்ப்பு சக்தியை குறைத்து வீக்கங்களை அதிகப்படுத்தும் இந்த சோயா பால் தான் உங்கள் சரும பிரச்சனைகளுக்கு முதன்மை காரணமாக இருப்பது. அதனால், சோயா பாலை தவிர்த்து நீங்கள் சாப்பிடும் உணவில் அளவை மேம்படுத்துங்கள்.

சாக்லெட்

சாக்லெட்

நீங்கள் சாக்லெட் பிரியராக இருந்தால், உங்கள் டயட்டில் என்றாவது ஒரு நாளாவது சாக்லெட் சாப்பிட விரும்புவீர்கள். ஆனால், இவை பருக்களை எதிர்த்து செயல்படும் தன்மையை குறைக்கக் செய்கின்றது.

இனிப்பு

இனிப்பு

அழகான இளமையான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால், இனிப்புகள் உட்கொள்ளுவதை நிறுத்த வேண்டும். இந்த சுவை மிகுந்த இனிப்புகள் உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்து முகத்தில் சுருக்கங்களை வரவழைக்கச் செய்யும்.

காபி

காபி

கடினமான வேலை நேரங்களில் இந்த காபி உங்களுக்கு சக்தியை அளித்தாலும், இது உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்யும். வறண்ட சருமத்தால் உங்கள் முகத்தில் சுருக்கங்களும் கோடுகளும் கண்டிப்பாக ஏற்படும்.

உப்பு

உப்பு

தினமும் நீங்கள் உட்கொள்ளும் உணவில் உப்பானது சுவை கொடுத்தாலும், இதனை அதிகமாக உட்கொண்டால் அது உங்கள் கண்களை வீக்கமடையச் செய்யும். அதனால், சினிமா பார்க்கும்போது சுவை மிகுந்த சால்டட் பாப்கார்ன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கடல் சிப்பி

கடல் சிப்பி

அதிக அயோடின் உங்கள் சருமத்திற்கு நல்லது அல்ல. அதனால், பருக்களை அதிகரிக்கும் அதிக அயோடின் பொருட்கள் நிறைந்துள்ள கடல் சிப்பி, நண்டு மற்றும் இறால் உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்.

பால்

பால்

பருக்கள் வருவதற்கு காரணமான பால் நமது சருமத்தை மெதுவாக தன்மையை கொண்டது. அதிக வளர்ச்சியை தரும் பால் மற்றும் பால் பொருட்கள் பருக்கள் தோன்றுவதற்கு காரணமான செபும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

மதுபானம்

மதுபானம்

தொடர்ந்து மதுபானம் அருந்தினால் அது உங்கள் சருமத்தில் நீர் நீக்கம் செய்து வறண்டு காட்சியளிக்கச் செய்யும். உங்கள் சருமத்தை வயதாகக் காட்டும். நீர் நீக்கத்தை எதிர்ப்பதற்கு மதுபானங்களை தவிர்த்து நீர் உள்ளடங்கிய உணவை உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையானது உங்கள் சருமத்தில் உள்ள கலொகெனை அழித்து உங்கள் சுருக்கமில்லா சருமத்தை கெடுத்துவிடும். இது உங்கள் சருமத்தை வறண்டு போகச்செய்து உங்கள் சருமத்தின் பொலிவை இழக்கச்செய்யும். அதனால், அதிக சர்க்கரை உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.

சல்சா (சாஸ்)

சல்சா (சாஸ்)

கலோரிகள் இல்லாத இந்த சல்சா உணவு அதிக சுவையை உடையது. ஆனால், அதற்கு மாறாக இதில் உள்ள அதிக வினிகர் மற்றும் தக்காளி, சரும பாதிப்புகளுக்கு மூலக்காரணமாக இருக்கின்றது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

உங்கள் சருமம் சென்சிட்டிவ் சருமமாக இருந்தால், ஸ்ட்ராபெர்ரிக்களை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. இதில் நிறைந்துள்ள அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இயற்கையான அமிலங்கள், முகத்திலும் மூக்கிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய்

சரும துவரங்களுக்கும் பருக்களுக்கும் காரணமாக இருக்கும் இந்த வேர்க்கடலை வெண்ணெயை உணவில் சேர்த்தால், ஆரோக்கியமான சருமத்தை நீங்கள் பெற முடியாது. மேலும் இது வீக்கத்தை ஏற்படுத்தி பருக்களை வரவழைக்கும்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி சுவையாக இருந்தாலும், இதில் நிறைந்துள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு, முகத்தில் பருக்கள் உருவாக்குவதற்கு காரணமாக இருக்கும். மேலும், இது வீக்கங்களாக மாறி உங்கள் அழகான முகத்தை கெடுத்துவிடும்.

குடைமிளகாய்

குடைமிளகாய்

வண்ணம் மிகுந்த குடைமிளகாய்கள் எளிமையாக சமைத்து உங்கள் உணவை சுவை மிகுந்ததாக மாற்றக் கூடியது. ஆனால், இவற்றில் உள்ள அதிக வைட்டமின் சி அதிக வீக்கத்தை உண்டாக்கும் தன்மையை கொண்டது. பருக்கள் இல்லா சருமத்தை பெறுவதற்கு இந்த குடைமிளகாயை அமிலத்தன்மை நிறைந்த உணவோடு சாப்பிடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Foods That Can Ruin Your Skin

Here is a list of 15 foods that can ruin your skin. So, edit your list today to have beautiful, healthy and glowing problem-free skin!
Desktop Bottom Promotion