For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவளையங்களை போக்கும் சிறப்பான 14 வீட்டு சிகிச்சைகள்!!!

By Super
|

அழகு என்பது நம்மில் ஒரு அங்கமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அழகை மெருகேற்ற ஒவ்வொருவரும் எடுக்கும் சிரத்தை கொஞ்ச நஞ்சம் அல்ல. அழகு என்றதுமே நமக்கு மனதில் வருவது முகம் தான். ஆம், முகத்தை மெருகேற்ற தான் நம்மில் பலரும் மெனெக்கெடுகிறோம். அதையும் மீறி வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுகிறது. கருவளையம் என்பது பலர் சந்திக்கும் ஒரு பொதுவான அழகு பிரச்சனை. இது ஆண், பெண் என்றில்லாமல், இருவரையும் தாக்கும். ஆனால் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களே.

முகத்தில் உள்ள மற்ற பகுதிகளை விட, கண்களை சுற்றியுள்ள சருமம் மென்மையாகவும், மெல்லியதாகவும் இருக்கும். அதனால் அதன் மேல் கூடுதல் கவனம் தேவை. கருவளையம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அது பரம்பரையாக வரும் வியாதியாக இருக்கலாம் அல்லது சோம்பல் காரணமாகவும் வரலாம். அத்தகைய கருவளையத்தை நீக்க உங்களுக்காக சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடவும்

ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடவும்

கருவளையங்கள் சிறு வயதிலேயே ஏற்படலாம். ஆனால் வயதானவர்களை வேகமாக தாக்கும். அதனை போக்க ஊட்டச்சத்துள்ள உணவுகள், நற்பதமான பழங்கள், தயிர், முளைக்கட்டிய பயிர், பதப்படுத்தப்படாத தானியங்கள், கொழுப்பு அகற்றிய பால், பாலாடை கட்டி மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிட வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆழமான மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டால், இரத்த ஓட்டம் சீராகி, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் சமமாக செல்லும். அதனால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்கும்.

நன்றாக தூங்குங்கள்

நன்றாக தூங்குங்கள்

தினமும் இரவு குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். அதே போல் தினமும் 20 நிமிடங்களுக்கு தியானம், நல்ல இசையை கேட்டு ரசிப்பது என மனதை அமைதியாக வைக்க வேண்டும்.

அசைவுகள் வேண்டும்

அசைவுகள் வேண்டும்

மேக் அப்பை களைக்கும் போதோ, முகத்திற்கு க்ரீம் தடவும் போதோ மெதுவான அசைவுகளில் ஈடுபடுங்கள். அதற்காக மசாஜ் செய்யாதீர்கள். இல்லையென்றால் சருமம் விரிவடையும். அப்படியே மசாஜ் செய்ய வேண்டுமானால் ஒரு அழகு வல்லுனரை வைத்து அதனை மேற்கொள்ளவும்.

கண்களுக்கான க்ரீம்கள்

கண்களுக்கான க்ரீம்கள்

கண்களை சுற்றி அதற்கென தயாரிக்கப்பட்ட விசேஷ க்ரீமை பயன்படுத்துங்கள். இந்த க்ரீமை 15 நிமிடத்திற்கு பிறகு, ஈரப்பதமுள்ள பஞ்சு துணியைப் பயன்படுத்தி நீக்கிடுங்கள். இரவு நேரத்தில் க்ரீமை தடவி கொண்டு தூங்கி விடாதீர்கள். கண்களுக்கு கீழ் தடவ பாதாம் கலந்த க்ரீமை பயன்படுத்துங்கள். அது சருமத்திற்கு ஊட்டச்சத்துக்களை அளித்து, நிறத்தையும் மெருகேற்றும். அதே போல் கண்களைச் சுற்றி ஃபேஷியல் க்ரீம்களையும் தவிர்க்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவவும்

வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவவும்

கண்களில் ஏற்படும் சோம்பலை நீக்க வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரில் கண்களை கழுவுங்கள். இது கண்களை சுற்றி இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். கண்களை சுத்தம் செய்வதோடு நின்று விடாமல், இறுக்கத்தையும் நீக்கும்.

வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிச்சாற்றை கண்களை சுற்றி தடவி, 15 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரை கொண்டு கழுவி விடுங்கள்

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாறு மற்றும் வெள்ளரிச் சாற்றை சரிசமமான அளவில் கலந்து, வீங்கிய கண்கள் அல்லது கருவளையம் ஏற்பட்டுள்ள கண்களை சுற்றி தடவவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றையும், வெள்ளரிச் சாற்றையும் சமமான அளவில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை தினமும் கண்களை சுற்றி தடவி, 15 நிமிடங்களுக்கு பின் தண்ணீரில் கழுவி விடுங்கள்.

தக்காளி

தக்காளி

தக்காளி சாறும் கண்களுக்கு நல்லது தான். அதனை கண்களை சுற்றி தடவி கொண்டு, 20 நிமிடங்களுக்கு பிறகு, குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலை மூடிய கண்களின் மேல் ஊற்றி பத்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள்.

டீ பேக்

டீ பேக்

குளிர்ந்த டீ பையை கண்களின் மேல் வைத்தால், கண்களின் வீக்கம் மற்றும் கருவளையம் அகலும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

கருவளையங்களுக்கு பாதாம் எண்ணெயும் மருந்தாக அமையும். அதற்கு படுக்க போகும் முன்பு, பாலில் கலந்த பாதாம் பேஸ்ட்டை கண்களை சுற்றி ஏற்பட்டுள்ள கருவளையங்களின் மீது தடவி, மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கண்களை கழுவவும். இது சருமத்தை மென்மையாக்கும்.

புதினா

புதினா

கசக்கிய புதினா இலைகளும் நன்றாக வேலை செய்யும். அதற்கு கசக்கிய புதினா இலைகளை கண்களுக்கு கீழ் தடவவும். அதனை அப்படியே 10-15 நிமிடங்கள் வரை விட்டு விடவும். பின் கண்களை கழுவுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ் உடன் கிளிசரின் கலந்து அதனை வாரத்திற்கு 3 முறை தடவுங்கள். தடவிய பின் 20 நிமிடம் வரை ஊற வைத்தால், நல்ல பலனை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Best Home Remedies For Dark Circles

The skin around the eyes is far delicate and thinner than the skin on other areas of the face, so it needs extra care.
Desktop Bottom Promotion