For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் ஏற்படக்கூடிய 10 சரும பிரச்சனைகள்!!!

By Maha
|

கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. இந்த காலத்தில் எப்படியாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, எங்கேனும் குளிர்பிரதேசத்திற்கு செல்லலாம் என்று திட்டம் தீட்டுவோம். இத்தகைய கோடைகாலம் நமக்கு வெளியூருக்கு செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கி இருப்பதோடு, அதே சமயம் சருமத்தில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன. பொதுவாக அத்தகைய சரும பிரச்சனைகள் அனைத்தும் குளிர்காலத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று நினைக்கிறோம்.

ஆனால் அத்தகைய சரும பிரச்சனைகள் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் மூலமாகவும், சரும சுருக்கங்கள், வித்தியாசமான சரும நிறம், சருமம் தடிமனாக இருப்பது, சருமத்தில் எரிச்சல், அரிப்பு என்று பல உருவாக்குகின்றன. எனவே இத்தகைய பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படாமலிருக்க, ஒருசில சரும பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு முதலில் அனைவருக்கும் தெரிய வேண்டியது ஒன்று. அது எந்த மாதிரியான பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படும் என்பது தான்.

ஆகவே வெயிலில் சுற்றினால், சருமத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் வெயிலில் சுற்றலாமா வேண்டாமா என்று யோசித்து முடிவெடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும எரிச்சல்

சரும எரிச்சல்

சூரியனின் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் தொடர்ந்து படுவதால், அவை சரும செல்களை பாதித்து, சருமத்தில் எரிச்சலை உண்டாக்கிவிடும். ஆகவே முடிந்த அளவு காலையில் 10 முதல் மாலையில் 4 மணி வரை வெளியே வரும் போது, சருமத்திற்கு மறக்காமல் சன் ஸ்கிரீன் லோசனை பயன்படுத்த வேண்டும்.

அரிப்புக்கள்

அரிப்புக்கள்

அதிகப்படியான வெப்பம் மற்றும் வியர்வையின் காரணமாக சருமத்தில் அரிப்புக்கள் ஆங்காங்கு அரிப்புக்கள் ஏற்படும். அதிலும் இத்தகைய சரும அரிப்புக்களானது சிறு கொப்புளம் போன்று, பிங்க் நிறத்தில் உடலில் ஆங்காங்கு காணப்படும். எனவே சருமத்தில் ஏற்படும் எரிப்புக்களை தவிர்க்க, குளிர்ச்சியைத் தரும் பவுடரை பயன்படுத்த வேண்டும்.

பருக்கள்

பருக்கள்

அதிகமாக வியர்ப்பதால், சருமத்தில் எண்ணெயானது அதிகப்படியாக இருந்து, சருமத்தில் பருக்களை உண்டாக்கிவிடுகின்றன. சில சமயங்களில் அந்த பருக்கள் கடுமையான வலியையும் உண்டாக்கும். எனவே சன் ஸ்கிரீன் அல்லது வேறு ஏதேனும் லோசனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, எண்ணெய் பசை அதிகம் இல்லாத க்ரீம்களை பயன்படுத்த வேண்டும்.

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம்

அதிகமாக வியர்ப்பதால், சருமத்தில் அதிகமான வறட்சி ஏற்படும். மேலும் அதிகமான காற்று சருமத்தில் படுவதாலும், வறட்சி ஏற்படும். எனவே அத்தகைய வறட்சியைப் போக்க, அடிக்கடி தண்ணீரைப் பருக வேண்டும். இதனால் உடல் மற்றும் சரும வறட்சியைத் தவிர்க்கலாம்.

பாத பிரச்சனை

பாத பிரச்சனை

பாதங்களுக்கு ஷூ போடுவதால், பாதஙங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு, அந்த வியர்வை பாதங்களில் ஒருவித தீமையை உண்டாக்குவதோடு, கால் விரல் நகங்களில் அழுக்குகள் படிவதால், வியர்வையின் காரணமாக கடுமையான வலி ஏற்படும். எனவே எப்போதும் கால்களை சரியாக பராமரித்து வர வேண்டும்.

உதடு வெடிப்பு

உதடு வெடிப்பு

கோடையில் சரும வறட்சியினால் சிலருக்கு உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்படும். எனவே இதனை தவிர்க்க அதிகப்படியான தண்ணீர் குடிப்பதோடு, நல்ல லிப் பாமையும் பயன்படுத்த வேண்டும்.

சரும நிறம்

சரும நிறம்

உடலின் அனைத்து இடமும் ஒரே மாதிரியான நிறத்தில் இருப்பதில்லை. அதிலும் வெயில் படும் இடங்கள் சற்று வித்தியாசமான நிறத்தில் காணப்படும். எனவே வெயிலில் செல்லும் போது, சருமத்திற்கு சரியான உடையணிந்து செல்ல வேண்டும்.

உள்ளாடை அணியும் இடங்களில் அரிப்பு

உள்ளாடை அணியும் இடங்களில் அரிப்பு

பொதுவாக கோடையில் மடிப்புக்கள் மற்றும் இறுக்கமான உடை அணியும் இடங்களில் அரிப்புக்கள் ஏற்படும். அதிலும் உள்ளாடை அணியும் இடங்களில் கடுமையான அரிப்புக்கள் சிலருக்கு ஏற்படும். எனவே கோடையில் அத்தகைய அரிப்புக்களை தவிர்க்க, நல்ல லூசான ஆடைகளை அணிவதோடு, காட்டன் ஆடைகளை அணிவது சிறந்தது.

சீரற்ற தோல்

சீரற்ற தோல்

வறட்சியின் காரணமாக சருமத்தில் ஆங்காங்கு செதில் செதிலாக தோலானது வெளிவரும். எனவே இதனை தவிர்க்க நீர் போன்ற மாய்ச்சுரைசரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மேலும் தண்ணீர் நன்கு குடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி வாரத்திற்கு இரண்டு முறை ஸ்கரப் செய்ய வேண்டும்.

பொடுகு

பொடுகு

கோடையில் வியர்வை அதிகமாக இருப்பதால், ஸ்கால்ப்பிலும் வியர்வையானது ஏற்பட்டு, வெளியே செல்லும் போது அழுக்குகளானது ஸ்கால்ப்பில் தங்கி, அதில் உள்ள கிருமிகள் தலையில் பொடுகை உண்டாக்கிவிடும். எனவே கோடையில் கூந்தலுக்கு சரியான பராமரிப்பானது தேவைப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளித்து, தலையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Summer Skin Problems To Beware Of | கோடையில் ஏற்படக்கூடிய 10 சரும பிரச்சனைகள்!!!

Summer gives you the opportunity to spend more time outdoors doing the things you love. But at the same time, summer brings a lot of skin problems along with it. Take good care of your skin before any skin problem troubles you. This is possible only if you are aware of the most common skin problems that may occur in summer.
Desktop Bottom Promotion