For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பருக்களை போக்கும் 10 கிச்சன் பொருட்கள்!!!

By Maha
|

தற்போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் முகப்பரு தான் முதன்மையானது. இந்த பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதற்கு இளம் தலைமுறையினர் தான் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவற்றிற்கு சரியான தீர்வு கிடைப்பதில்லை.

பொதுவாக இந்த பருக்கள் வருவதற்கு காரணம் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால், அங்கு தூசிகள் மற்றும் அழுக்குகள் அதிகம் படிந்து, முகப்பருக்களை உண்டாக்குகின்றன. எனவே இத்தகைய அதிகப்படியான எண்ணெயை நீக்குவதற்கு, சருமத்திற்கு சரியான பராமரிப்புகள் தேவைப்படுகின்றன. அதற்காக கெமிக்கல் கலந்து பொருட்களை அதிகம் பயன்படுத்தி பராமரிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டின் சமையலறையில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்தே, அத்தகைய பருக்களுக்கு தீர்வு காணலாம். சரி அத்தகைய பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

இந்த சிட்ரஸ் பழம் பருக்களைப் போக்குவதில் மிகவும் சிறந்தது. இதற்கு எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் விரைவில் பருக்களை நீக்கிவிடலாம். வேண்டுமெனில் எலுமிச்சை சாற்றை ஃபேஸ் பேக்கில் சேர்த்து பயன்படுத்தலாம்.

தேன்

தேன்

தேனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி, நன்கு இளமையான தோற்றத்தை தரும். அதுமட்டுமின்றி தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தை கிளின்ஸ் செய்து, பருக்களை மறைய வைக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

சமையலறையில் கிடைக்கும் இந்த பொருளும் பருக்கள் மற்றும் பிம்பிளை சரிசெய்யக்கூடியவை. ஏனெனில் பொதுவாக ஓட்ஸானது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தன்மையுடையது. எனவே காலையில் எழுந்ததும் ஓட்ஸை பாலில் கலந்து, முகத்திற்கு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பருக்களை குறைத்துவிடலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா வீட்டை மட்டும் சுத்தப்படுத்த பயன்படுவதில்லை, முகத்தில் பருக்கள் இருந்தால் அவற்றை போக்கவும் தான் பெரிதும் உதவுகிறது. அதற்கு பேக்கிங் சோடாவை நீருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, கழுவிட வேண்டும். இதனால் பருக்கள் நீங்கும். ஆனால் அதை நீண்ட நேரம் ஊற வைத்தால், பின் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சிட்ரஸ் ஆசிட் உள்ளதால், அது சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கும். எனவே தினமும இதனை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்வது நல்லது.

கற்றாழை

கற்றாழை

இது சமையலறைப் பொருளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் வீட்டில் வளர்க்கும் ஒரு செடி. எனவே இந்த செடி வீட்டில் இருந்தால், கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

தயிர்

தயிர்

சமையலறையில் இருக்கும் பால் பொருட்களில் தயிர் மிகச் சிறந்த ஒரு அழகுப் பொருள். எனவே அந்த தயிரை வைத்து அவ்வப்போது முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமம் அழகாகவதோடு, பருக்களும் குறைந்துவிடும். அதற்கு தயிருடன், தேன், எலுமிச்சை சாறு மற்றும் சந்தனப் பவுடர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து கழுவி வந்தால், விரைவில் பருக்கள் மறைந்துவிடும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, முகத்திற்கு பொலிவைத் தருவதோடு, பட்டுப் போன்று பருக்களின்றி வைக்க உதவும். அதற்கு ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, முகத்திற்கு தினமும் தடவி, ஊற வைத்து கழுவினால் முகப்பருக்கள் மறையும்.

உப்பு

உப்பு

ஸ்கரப் செய்வதற்கு உப்பு தான் சிறந்த பொருள். அதுவே பருக்களை போக்குவதற்கு, எலுமிச்சை பழத்தை உப்பில் தொட்டு, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும்.

பெருங்காயத் தூள்

பெருங்காயத் தூள்

பருக்களைப் போக்க அக்காலத்தில் செய்யும் ஒரு இயற்கை வழி என்றால், அது பெருங்காயத் தூளை நீரில் கலந்து, பிம்பிள் உள்ள இடத்தில் வைத்தால், அது பிம்பிளை விரைவில் மறையச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Kitchen Ingredients To Cure Acne | முகப்பருக்களை போக்கும் 10 கிச்சன் பொருட்கள்!!!

There are many treatments that are available to cure acne. However, acne takes its own time to cure. Most of the treatments are filled with chemicals that increases the outburst. So, try some home remedies to treat acne. There are many things that you can easily get in your kitchen and cure the skin problem.
Desktop Bottom Promotion