For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குட்டையாக இருக்கும் ஆண்களுக்கான சில டிரஸ்ஸிங் டிப்ஸ்...

By Maha
|

குட்டையாக இருக்கும் ஆண்களுக்கு போதிய தன்னம்பிக்கையும் மனப்பான்மையும் இருப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் குட்டையாக இருப்பதால் உலகமே முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தமில்லை என்பதை முக்கியமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குட்டையாக இருப்பவர்களுக்கும் பல விதமான ஆடை அணியும் விதங்கள் இருக்கிறது. அவைகளை பின்பற்றினால் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அழகாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் இழந்த தன்னம்பிக்கையையும் மீண்டும் பெறுவார்கள்.

நீங்கள் அணியும் ஆடையுடன், பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதற்கு உங்கள் வங்கி இருப்பை கரைக்க வேண்டும் என்று எண்ணி விடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உணர்வுடைய முயற்சி இருக்க வேண்டும். அப்படி நீங்கள் தேர்ந்தேடுக்கும் ஆடைகள் உங்கள் தோற்றத்தை மந்தமாக காட்டாமல் உங்களை முழுமையாக காட்சிப்படுத்த வேண்டும்.

dress

கொடகொடவென இருக்கும் பேண்ட்டிற்கு பதிலாக சரியான அளவிலான பேண்ட்டை தேர்ந்தெடுத்து அணிந்தால் உங்களை சற்று உயரமாக காட்டும். மாறாக கொடகொடவென இருக்கும் பேண்ட்டை அணிந்தால் குட்டையாக தெரிவீர்கள். அதே போல் சற்று உயரமான ஹீல்சை கொண்ட ஷூக்களை பயன்படுத்துங்கள். ஆனால் அவை பெண்கள் பயன்படுத்துவதை போல் மிகவும் உயரத்துடன் இருக்க கூடாது. அப்படி அணியும் போது அவர்களின் உயரம் சற்று அதிகரிப்பதோடு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் என்று வரும் போது முடிந்த வரை நேர்கோடுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட சட்டைகள் மற்றும் பேண்ட்களை பயன்படுத்துங்கள். அப்படி செய்யும் போது நீங்கள் குட்டையாக இருப்பது மறைக்கப்பட்டு, பார்ப்பதற்கு சற்று உயரமாக தெரிவீர்கள். மேலும், குட்டையாக இருக்கும் ஆண்கள் இதர அலங்கார பொருட்களின் மீதும் கவனம் செலுத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த தோற்றமும் மேம்படும். பார்ப்பவர்களின் கவனத்தையும் உங்கள் மீது ஈர்த்து உங்களை உச்சி முதல் மாதம் வரை கவனிக்க செய்யலாம்.

நீட்டு வடிவில் இருக்கு வடிவமைப்புகள்

நீட்டு வடிவத்தில் இருக்கும் வடிவமைப்புகள் உங்களை உயரமாக காட்டும். அதற்கு காரணம் நம் கண்கள் அந்த கோடுகளை உங்கள் உயரத்தோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கும். பாதியிலேயே துண்டித்து போகாமல் கடைசி வரை உள்ள நீட்டு வடிவு கோடுகளை கொண்ட ஆடைகளை கொண்டு உங்களை உயரமாக காட்டுவது ஒரு சிறந்த வழியாகும். நல்ல டிசைனோடு உள்ள ஆடையில் மேலயும் கீழேயும் விழுகின்ற நேர் கோடுகளை கொண்ட ஆடைகளை அணிவித்தால் பார்ப்பதற்கு உயரமாக மட்டுமல்லாமல் ஸ்டைலாகவும் இருப்பீர்கள்.

சரியான அளவிலான ஆடைகள்

முடிந்த வரைக்கும், உங்கள் உடலமைப்புக்கு பொருந்துகின்ற சரியான அளவிலான ஆடைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் அணியும் ஆடைகள் தொளதொளவென இருக்க கூடாது. ஒவ்வொரு ப்ராண்ட் ஆடைக்கும் தனித்துவமான அளவு இருக்கும். அதனால் ஸ்லிம் ஃபிட் வகை ஆடைகளை விற்கின்ற பிராண்டை தேர்ந்தேடுத்து, அது உங்கள் உடல் அமைப்புக்கு பொருந்துகிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். ஒரு வேளை, ரெடிமேட் ப்ராண்ட் எதுவுமே உங்களுக்கு பொருத்துமாக இல்லையென்றால் நல்லொதொரு டெய்லர் மூலமாக உங்கள் உடல் கட்டமைக்கு பொருந்துகின்ற வகையில் ஆடைகளை தைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

ஒற்றை நிற ஆடைகள்

பல விதமான நிறங்களை கொண்ட ஆடைகளை தவிர்த்தால் உங்கள் தோற்றம் நெறிப்படும். ஒரே குடும்பத்தை சேர்ந்த நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தால் பார்ப்பவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். முடிந்த வரை நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் ஒரே வகை நிறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கருமையான நிறத்தை தழுவி இருப்பது நல்லது. இது உங்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்டும்.

சிறிய விகிதங்கள்

உங்கள் ஆடைகளின் சில பகுதிகள் ஒன்றின் மீது ஒன்று மடிந்து இருக்கும் போது உங்கள் தோற்றத்தை எடுத்து காட்டுவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் மேல் பகுதியில் சொல்ல வேண்டுமானால், உங்கள் சட்டை காலர் மற்றும் ஜாக்கெட் முன்படிப்பு (நீங்கள் ஜாக்கெட் அணிந்திருந்தால்). இவை இரண்டையுமே குறுகலான பக்கம் வைத்திடுங்கள்.

சரியான ஆடைகள்

ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் அல்லது சூட் வகை ஜாக்கெட் அணிந்தால் உங்கள் தோள்பட்டை கனமாக தெரியும். இப்படி இருக்கும் போது அது உங்கள் உயரத்தை அதிகரித்து காட்டும். பேண்ட் அணியும் போது இயற்கையான இடுப்பு கோடுகளில் நிருகுமாறு அணியுங்கள். மாறாக இடுப்புக்கு கீழே அணிவித்தால் உங்கள் கால்கள் குட்டையாக தெரியும். பொதுவாக குட்டையான ஆண்களுக்கு அவர்களின் மற்ற உயரமான பாகங்களை விட அவர்களின் கைகளும் கால்களும் சின்னதாக இருக்கும். அதனால் தான் அவர்கள் குட்டையாக இருக்கிறார்கள். அதனால் உங்கே உடம்பின் மேல் பகுதியில் அணியும் ஆடையின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கொஞ்சம் உயரத்தை அதிகரித்திடுங்கள்

அதிகமாக இல்லாமல், குறைந்த அளவில் கொஞ்சம் உயரத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். அப்படி உங்கள் உயரத்தை அதிகரிக்க சற்று உயரமாக இருக்கும் காலணிகளை அணியலாம். அல்லது லிஃப்ட், தடிமனான காலனி சோல், உயரமான ஷூ போன்ற உபகரணங்களை பயன்படுத்தலாம். இவை அனைத்தினாலும் உங்கள் உயரத்தை சிறு அளவிற்கு உயர்த்திடலாம்.

English summary

Dressing Tips For Short Men

Dressing tips for short men will help them to look taller. We can give you lots of style tips which shorter men can follow easily.
Story first published: Wednesday, January 15, 2014, 18:51 [IST]
Desktop Bottom Promotion