For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷேவிங் மூலம் 'மிஸ்டர் பெர்பெக்ட்' என்ற பெயர் வாங்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்களுக்கு விருப்பம் உள்ளதோ, இல்லையோ வாழ்நாள் முழுவதும் ஷேவிங் செய்ய வேண்டியிருக்கும். பெரும்பாலான ஆண்கள் ஷேவிங் செய்வதை வலியுள்ளதாகவும் மற்றும் வசதியற்றதாகவும் உணருகிறார்கள். ஆனால், இதற்குக் காரணம் தவறான நுட்பங்களை பயன்படுத்துவது தான்!

ஷேவிங் செய்த பின் ஏற்படும் சரும வறட்சி மற்றும் அரிப்பைத் தடுக்க சில டிப்ஸ்...

சரியான முறையில் ஷேவிங் செய்ய விரும்பினால், நல்ல பிளேடு மற்றும் ஷேவிங் ஜெல் க்ரீம்களை பயன்படுத்துங்கள். இதன் மூலம் மென்மையான மற்றும் ஆழமான ஷேவிங்கை ஒவ்வொரு முறையும் பெற முடியும்.

ஷேவிங் செய்த பிறகு சருமம் மென்மையா இல்லையா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

முறையான ஷேவிங் வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் பிளேடு மூலம் ஏற்படும் காயங்களையும், அரை குறை ஷேவிங்கையும் தவிர்க்க முடியும். இங்கே படிப்படியாக தரப்பட்டிருக்கும் வழிமுறைகள் உங்களுக்கு சரியான முறையில் ஷேவிங் செய்து 'மிஸ்டர் பெர்பெக்ட்' என்று பெயரெடுக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகத்தை கழுவுங்கள்

முகத்தை கழுவுங்கள்

ஷேவிங் செய்வதற்கு முன்னர் உங்கள் முகத்தை நன்றாக கழுவுங்கள். இதன் மூலம் வடுக்களால் ஏற்படும் தொற்றுகளை தவிர்க்க முடியும். நீங்கள் முடிகளை நீக்கும் கிரீம்களை பயன்படுத்தவும் விரும்பலாம். இதன் மூலம் ஷேவிங் செய்வதற்கு ஏற்ற வகையில் உங்களுடைய தோல் மற்றும் தாடியை தயார் செய்ய முடியும்.

தாடியை மென்மையாக்குதல்

தாடியை மென்மையாக்குதல்

வெந்நீரில் முகத்தை துடைக்கும் துணியை நனைய விடுங்கள், அந்த துணியை தாடியில் 30 நொடிகளுக்கு அப்படியே பிடித்து வைத்திருங்கள். இதன் மூலம் உங்களுடைய முடி மற்றும் தோல் ஆகியவை இளகி ஷேவிங் செய்ய தயாராகி விடுகின்றன.

ஷேவிங் கிரீம் தடவுதல்

ஷேவிங் கிரீம் தடவுதல்

உள்ளங்கையில் தேவையான அளவு ஷேவிங் கிரீமை விட்டு, அதனை உங்களுடைய கழுத்து மற்றும் தாடியில் வட்ட வடிவில் சுழற்றும் வகையில் சமமாக தடவுங்கள். இதை செய்யும் போது ஷேவிங் கிரீம் சமமான அளவில் முடி மற்றும் தோலில் படும் வகையில் செய்தால் ஷேவிங்-ம் சரிசமமாக இருக்கும். புதிய மற்றும் பயன்படுத்தாத பிளேடு அல்லது நல்ல நிலையில் இருக்கும் புதிய ரேஸரை பயன்படுத்தினால் ஆழமாகவும் மற்றும் வசதியாகவும் ஷேவிங் செய்ய முடியும்.

தாடியின் மேல் பகுதியை ஷேவ் செய்தல்

தாடியின் மேல் பகுதியை ஷேவ் செய்தல்

தாடியின் மேல் பகுதியை ஷேவ் செய்யும் போது, தாடியின் மேல் பகுதியில் தொடங்கி தாடையின் முனை வரை நீளமாக மற்றும் சமமாக ஷேவ் செய்யவும்.

கழுத்து மற்றும் கன்னங்களில் ஷேவிங் செய்தல்

கழுத்து மற்றும் கன்னங்களில் ஷேவிங் செய்தல்

கன்னம் மற்றும் கழுத்தில் ஷேவிங் செய்யும் போது, கழுத்தின் கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கியவாறு பிளேடை அல்லது ரேஸரை இழுத்தால், காயங்களை தவிர்க்கவும், சரியாக அரைகுறையாக முடிகளை விடுவதையும் தவிர்க்க முடியும்.

நெருக்கமாக ஷேவிங் செய்தல்

நெருக்கமாக ஷேவிங் செய்தல்

உங்களுடைய கைகளால் தோலை விரைப்பாக இழுத்து பிடித்துக் கொண்டு நெருக்கமாகவும், ஆழமாகவும் ஷேவிங் செய்ய முடியும்.

மேல் உதட்டை ஷேவிங் செய்தல்

மேல் உதட்டை ஷேவிங் செய்தல்

உங்களுடைய மேல் உதட்டை ஷேவிங் செய்யும் போது, அந்த பகுதியை முன் பற்களை நோக்கி இழுத்து விரைப்பாக்கி விட்டு, கீழ் நோக்கியவாறு ஷேவ் செய்யத் துவங்குங்கள்.

ரேசரை அலசுதல்

ரேசரை அலசுதல்

ஒவ்வொரு முறை ஷேவ் செய்ய இழுத்த பின்னரும், ரேசரை தண்ணீரில் நன்றாக அலசி, அதில் தொற்றிக் கொண்டிருக்கும் முடிகளை நிக்குங்கள்.

டச் அப்

டச் அப்

அதிகபட்சமாக உள்ள ஷேவிங் கிரீமை வெந்நீரில் கழுவி விட்டு, விட்டுப் போன முடிகள் ஏதாவது உள்ளனவா என்று பார்க்கவும். இந்த விட்டுப் போன பகுதிகளை சுத்தம் செய்யும் முன்னர் ரேசரை தண்ணீரில் கழுவி விடவும்.

ஈரப்பதமூட்டுதல்

ஈரப்பதமூட்டுதல்

ஷேவிங்கிற்குப் பின்னர் வைட்டமின்கள், கற்றாழை சாறு போன்றவை உள்ள டோனர்களை பயன்படுத்துங்கள். ஆல்கஹால் கொண்ட டோனர்களை தவிர்க்கவும். ஏனெனில், ஆல்கஹால் தோலை வறண்டு போகச் செய்து, சேதப்படுத்தவும் செய்து விடும். டோனிங் செய்த பின்னர், மாய்ஸ்சுரைசரை தடவி உங்களுடைய ஷேவிங்கை முடித்து வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Steps To A Perfect Shave

If you're a man, you are going to shave for the rest of your life, whether you like it or not. Many men find shaving painful and uncomfortable, but this is mainly the result of a poor technique.
Desktop Bottom Promotion