For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையான மேக்கப் சாதனங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

By Hemalatha
|

குழந்தையாய் இருந்த சமயங்களில் சருமம் எவ்வளவு மிருதுவாகவும், சுத்தமாகவும் இருக்கிறது. வருடங்கள் கரைய கரைய சருமம் பொலிவிழந்து, முகப்பரு, வறட்சி, சுருக்கம் என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எங்கே தவறு நடக்கிறது என்றால், நாம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் கலந்து அழகு சாதனங்கள், சுற்றுப் புறம், மன அழுத்தம் என எல்லாமுமே காரணமாக அமைகிறது.

How to make beauty products naturally

விசேஷம், அலுவலகம், கல்லூரி, என மேக்கப் இல்லாமல் போக நிறைய பெண்களுக்கு மனம் வருவதில்லை. அல்லது சிலருக்கு, மேக்கப் சாதனங்கள் கெமிக்கல் உள்ளது என்று பயப்பட்டே முகத்திற்கு ஒன்றும் போடாமல் எண்ணெய் வழியும் சருமத்துடன் செல்வார்கள்.

இதற்கெல்லாம் இயற்கை தீர்வினை கொடுத்திருக்கிறது. நாம்தான் சரியாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஆமாம். ..ஆர்கானிக் முறையில் நாமே வீட்டில் மேக்கப் சாதனங்களை தயாரிக்கலாம்.

அதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அழகாய் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் அதற்காக நீங்கள் எப்போதும் முறையாக உங்கள் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்க வேண்டும். ஒரே நாளில் எந்த வித மேஜிக்கும் நடப்பதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்கர்ப் :

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது போலவே இயற்கையான ஸ்கரப், கோதுமை தவிடு, கடலை மாவு, சர்க்கரை ஆகியவ்ற்றை உபயோகிக்கலாம். ஆனால் அதிகமாய் தேய்க்கக் கூடது. இதனால் சருமம் பாதிக்கப்படும். வாரம் 2 முறை செய்தால் போதுமானது என ராகுல் நாகர் என்ற சரும மருத்துவர் கூறுகிறார்.

நீர் :

உங்கள் அழகிறகு நிச்சயம் நீரும் ஒருவகையில் காரணம். நீர் எவ்வளவு அருந்துகிறீர்களோ, அவ்வளவு உங்கள் சருமம் அழகாகவும் இளமையாகவும் இருக்கும்.

தினமும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறினை கலந்து குடித்தால், கழிவுகள், நச்சுக்கள் வெளியேறி உங்கள் சருமம் பளபளக்கும்.

தூக்கம் :

தூக்கம் என்பதும் அழகு சம்பந்தமானதே. நன்றாக குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இதனால் கண்களில் கருவளையம், பை போல தொங்குதல் ஆகியவை ஏற்படாமல் தடுக்க முடியும்.

தலைக் குளியல் :

வாரம் இரு முறை தலைக்கு குளிப்பதை கட்டாயம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் ஒரு முறையாவது தலை மற்றும் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து குளித்தால், நாளுக்கு நாள் நீங்கள் மெருகாகி வருவதை நீங்களே உணர்வீர்கள்.

இப்போது இயற்கை முறையில் மேக்கப் சாதனகளை தயாரிப்பதை பார்க்கலாம்:

ஆர்கானிக் மேக்கப் க்ரீம் :

1 டேபிள் ஸ்பூன் பொடி செய்த பட்டை+1 டீஸ்பூன் கோகோ பவுடர்+1 டீ ஸ்பூன் ஜாதிகாய் +சில துளி லாவெண்டர் எண்ணெய்

இவற்றை எல்லாம் நன்றாக கலந்து க்ரீம் போல செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவிக் கொண்டால் இயற்கையான முறையில் ஃபவுண்டேஷன் உங்களுக்கு கிடைக்கும். பக்கவிளைவுகளற்ற மேக்கப்புடன் விசேஷத்திற்கு இனி நீங்கள் ரெடி.

லிப்ஸ்டிக் :

பீட்ரூட் சாறு எடுத்து, அதில் சில சொட்டு தேங்காய் எண்ணெய், அரை ஸ்பூன் தேன் மெழுகு கலந்து, உதட்டில் உபயோகப்படுத்துங்கள். காய்ந்ததும் மின்னும் சிவந்த உதடு கிடைக்கும். அடர் நிறம் வேண்டாம், லேசான நிறம் வேண்டுமென்றால், பீட்ரூட்டிற்கு பதிலாக, மாதுளை சாறினை உபயோகப்படுத்தலாம். உபயோகப்படுத்திய பின் அந்த கலவையை மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். நீண்ட நாட்களுக்கு வரும்

பீட்ரூட் ப்ளஷ் :

இரு கன்னப்பகுதிகளிலும், சிவப்பாய் அல்லது ரோஸ் நிறத்தில் இருந்தால் அழகாய் இருக்கும். திருமணம், அல்லது வேறு விசேஷங்களுக்கு அழகாய் கன்னங்களில் நிறங்களை மெருகூட்டிக் கொண்டு போனால் எல்லார் கண்களும் நம்மீதுதான் இருக்கும். அதற்கு ஏன் கெமிக்கல் கலந்த ப்ளஷை உபயோகிக்க வேண்டும் இதே உங்களுக்கான ஆர்கானிக் ப்ளஷ்

செய்முறை :

சில பீட்ரூட்டை எடுத்து தோல் சீவி வேகவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை சின்ன சின்ன துண்டுக்களாக்கி, அவற்றை முழுவதும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இதற்கு ஒரு நாள் தேவைப்படும்.

அதிலுள்ள நீர் சத்து எல்லாம் வற்றிபோய் வற்றல் போல் ஆனபிறகு, அதனை பொடி செய்து வைத்துக் கொள்ள்ளுங்கள். அதனை தனியாகவும் பயன்படுத்தலாம். அல்லது வேறு பொருட்களுடனும் பயன்படுத்தலாம்.

ரோஸ் நிறத்திற்கு - வெறும் பீட்ரூட்பொடியினை கன்னங்களில் போட்டால், பிங்க் நிறத்தில் கன்னம் கிடைக்கும். அடர் சிவப்பு நிறத்திற்கு- பீட்ரூட் பொடியுடன் சிறிது கோகோ பவுடரை கலந்தால், சிறிது அடர் நிறம் கிடைக்கும்.

மஸ்காரா:

கண்களுக்கு இயற்கை முறையில் சுருளாக இமைகள் வேண்டுமா. இதை முயற்சி செய்யுங்க. இரவு தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெயையும், தேங்காய் எண்ணெயையும் கலந்து இமைகளில் தடவி படுத்துக் கொள்ளுங்கள்.

காலையில் கிளம்புவதற்கு முன், வாசலினை இமைகளில் லேசாக தடவினால்,விரிந்த அழகான இமைகள் கிடைக்கும். நாளடைவில் இமைகளிலும் வளர்ச்சி அதிகமாய் கிடைக்கும்.

English summary

How to make beauty products naturally

How to make beauty products naturally
Desktop Bottom Promotion