For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் விரும்பும் 5 விதமான பிங்க் ஷேடட் லிப்ஸ்டிக்குகள்!!!

By SATEESH KUMAR S
|

பிங்க் என்று கூறப்படும் இளஞ்சிவப்பு பெரும்பாலும் சின்னஞ்சிறு பெண்களுடன் தொடர்பு கொண்டது என்றே பலரும் நினைக்கின்றோம். ஆனால் மேக்கப் என்று வரும் போது டீன்-ஏஜ் பெண்களும், பல பெண்களும் பிங்க் நிறத்தையே பெரிதும் விரும்புகின்றனர். பிங்க் நிற உதட்டுச்சாயத்தை தேர்வு செய்வதில் எந்த வித வெட்கத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பதில் இளம்பெண்களுக்கு பல காரணங்கள் உண்டு. எம்மா ஸ்டோன் மற்றும் ஜேமி சுங் போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் தங்கள் பிங்க் நிற உதடுகளை பெருமையுடன் பறைசாற்றுகின்றனர்.

கீழே எந்தவிதமான பிங்க் நிற ஷேட்கள் கொண்ட லிப்ஸ்டிக்குகள், எந்த காலக்கட்டத்திற்கு அணிய ஏற்றது என்றும், பிரபலங்கள் பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்திய பிங்க் ஷேட் லிப்ஸ்டிக்குகள் குறித்த தகவல்களையும் தொகுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெஜந்தா

மெஜந்தா

"பேர்ட்மேன்" பட நடிகை எம்மா ஸ்டோன் செய்து கொண்ட ஒரு புதிய பாப் ஹேர்கட் அந்த படத்தின் காட்சிகளில் அவரது வட்ட முகத்திற்கு மிக பொருத்தமாக அமைந்தது. அவர் கத்தரிகாய் நிற ஐ ஷேடோ அணிந்திருந்தார். மேலும் அவர் கருமை நிற மஸ்காராவினையும், தனது உதட்டிற்கு, மெஜந்தா வண்ண லிப்-பாமை பயன்படுத்தி தனது தோற்றத்திற்கு மெருகூட்டினார். பிங்க் நிறத்தில் உச்சகட்ட மதிப்பு மெஜந்தா வண்ணம் பெற்றுள்ளது. நமது உதட்டினை பிரதானப்படுத்தி, முகத்தை பொலிவுற செய்ய மெஜந்தா சிறந்த தேர்வாகும்.

பேபி பிங்க்

பேபி பிங்க்

பேபி பிங்க் என்று அழைக்கப்படும் இந்த நிறம் மிகவும் அடிப்படையான மற்றும் இயற்கையான நிறத்தை உடனடியாக கொடுக்க வல்லது. உங்களது உதட்டிற்கு பிங்க் நிற ஷேட்-ஐ நீங்கள் விரும்பினால், இது மிகவும் பாதுகாப்பான சிறந்த தேர்வு ஆகும். இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது, நீங்கள் உங்கள் உதட்டிற்கு பளபளப்பு தர விரும்பினால், இந்த வண்ணத்தில் லிப்-க்ளாஸ் அல்லது லிப்-டின்ட் பயன்படுத்தலாம். ஜேமி சங், மெல்லிய குதிரை வால் மற்றும் ஒளிவீசக்கூடிய கண் மேக்-அப் மற்றும் மற்றும் சிறகுகள் போன்ற மெல்லிய ஐ-லைனர் மற்றும் க்ரீமி பேபி பிங்க் வண்ணத்தை பயன்படுத்தி தனது தோற்றத்திற்கு மெருகூட்டினார்.

பவளம் போன்ற இளஞ்சிவப்பு

பவளம் போன்ற இளஞ்சிவப்பு

மிகவும் பளிச் என்ற பிங்க் நிறத்திற்கும், மெல்லிய நிறத்திற்கும் இடைப்பட்ட நடுநிலையான வண்ணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால், உங்களுக்கு பவள வண்ண இளஞ்சிவப்பு நிறம் சிறந்த தேர்வாக அமையும். இந்த வண்ணம் மாலை நேர நிகழ்ச்சிகளுக்கும், நண்பர்களுடன் இணைந்து செலவிடும் பொழுதுகளுக்கும், இந்த புதிய பிரகாசமான வண்ணம் மற்ற அனைத்தையும் உயிரோட்டத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

மோவ்

மோவ்

மோவ் நிறம் ஒரு கம்பீரமான, அதிநவீன தோற்றத்தை உங்களுக்கு தருகிறது. அதே நேரத்தில் நீங்கள் மென்மையான மற்றும் துணிச்சல் மிக்கவராக தோற்றம் பெற முடியும். நீங்கள் அலுவலக விஷேசங்களுக்கும், இரவு மற்றும் வணிக ரீதியான சந்திப்பு அல்லது பெண்களுடன் வெளியே செல்லும் போது இந்த நிறத்தினை தேர்வு செய்யலாம். சமீபத்தில், லியா மைக்கேல் வெண்கல நிற மஸ்காராவினையும் மோவ் வண்ண லிப்-க்ளாசினையும் பயன்படுத்தி, தனது ஒளிரும் சருமத்திற்கு அழகினை தந்தார்.

ரோஸ் பிங்க்

ரோஸ் பிங்க்

குளுமையான குழந்தைத்தனமான தோற்றத்திற்கு இந்த ஷேட் இனிமையான ஒன்றாகும். இது இளம் பெண்களின் சிறந்த தேர்வாக உள்ளது. மோரன் அடியோஸ் தனது தளர்வான சுருள் கேசத்திலும், வெண்கல வண்ண ஐ-ஷேடோவிலும், ரோஸ் வண்ண உதட்டிலும் தனது தோற்றத்தை கவர்ச்சியானதாக ஆக்கினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Shades Of Pink Lipsticks That Every Girl Should Try

Pink is a shade, that is most associated with little girls, but its also a shade that remains a favourite with teenage girls and most women as well, when it comes to to make-up.
Story first published: Saturday, September 13, 2014, 18:20 [IST]
Desktop Bottom Promotion