For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலத்தில் மேக்-கப் போட சில டிப்ஸ்...

By Lekhaka
|

மழைக்காலம் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி, குறிப்பாக விவசாயிகளுக்கு. ஆனால் இந்த மழைக்காலத்தில் பெண்களுக்கு ஒரு சங்கடமான நிலைமை என்னவென்று பார்த்தால் மேக்-கப். பொதுவாகவே பெண்கள் அழகாக காணப்பட வேண்டுமென்று அதிகமாக மேக்-கப் போடுவார்கள். ஆனால் அவ்வாறு அதிகமாக மேக்-கப் போட்டால், தண்ணீர் பட்டு சருமமானது திட்டுத்திட்டாக காணப்படும் அல்லது முழுவதும் கரைந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகவே அத்தகையவர்கள் மழைக்காலத்தின் போது எளிமையான அல்லது அளவான மேக்-கப் போட்டுக் கொள்ளுதலே நல்லது.

அதுவும் தண்ணீரில் கரைந்துவிடாத மேக்-கப் பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இதற்கெனவே, தண்ணீரில் கரைந்துவிடாதவாறு மஸ்காரா, லிப்ஸ்டிக், ஐ-லைனர்கள் மற்றும் வாட்டர் புரூஃப் ஃபௌவுண்டேஷன்கள் ஆகியவை கடைகளில் கிடைக்கின்றன. எனவே அவற்றை வாங்கிப் பயன்படுத்தினால், மேக்-கப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக மழைக்காலத்தில் கண்களில் மை தடவுவதைத் தவிர்த்துவிடதல் மிகவும் நல்லது.

இப்போது மழைக்காலத்தில் வெளியில் செல்பவர்களுக்கு பயனுள்ள சில மேக்-கப் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. அதைப் படித்துப் பின்பற்றி, அழகாகத் திகழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் கட்டி

ஐஸ் கட்டி

முகத்தை நன்கு கழுவியப் பின், ஐஸ் கட்டியினைக் கொண்டு முகத்தில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு நன்றாகத் தேய்க்கவும். இப்படிச் செய்வதனால், முகத்தில் வியர்வை குறைவதுடன், முகத்தில் மேக் கப் கலையாமல் நீண்ட நேரம் பொழிவுடன் காணலாம்.

லோசன்/டோனர்

லோசன்/டோனர்

முகத்தில் ஐஸ்கட்டி கொண்டு தேய்த்த பிறகு, எண்ணெய்ப் பசையான சருமம் உள்ள பெண்கள் அஸ்ட்ரின்ஜென்ட் லோசனையும் (Astringent), வறண்ட சருமம் உள்ள பெண்கள் டோனரையும் (Toner) பயன்படுத்தினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும்.

ஃபௌவுண்டஷன் வேண்டாம்

ஃபௌவுண்டஷன் வேண்டாம்

முகத்திற்கு ஃபௌவுண்டஷன் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, லேசான பவுடரை பயன்படுத்த வேண்டும்.

மஸ்காராவிற்கு முன்...

மஸ்காராவிற்கு முன்...

அடர்த்தியான ஐ-லைனருடன் (thick line of eyeliner), மரக்கலர், பழுப்பு, பேஸ்டல்கள் (pastel) அல்லது பிங்க் நிற ஐ ஷேடோ க்ரீமைப் (pink cream eye shadow) பயன்படுத்தி, அதன் மேல் தண்ணீரில் கரையாத மஸ்காராவை பூச வேண்டும்.

லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்

மழைக்காலத்தில் பெண்களுக்கு மென்மையான லிப்ஸ்டிக்குகள் தான் ஏற்றவை. ஆயினும் மென்மையான பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ண லிப்ஸ்க்குகளை, ஷீர் க்ளாஸ் (sheer gloss) உடன் பயன்படுத்தலாம்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

மழைக்காலத்தில் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அதிகமான வியர்வையின் காரணமாக, எண்ணெய்ப் பசையுள்ள சருமம், பருக்கள், சரும வறட்சி ஆகியவற்றை தடுக்க முடியும்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

எளிமையான மற்றும் எளிதான ஹேர் ஸ்டைலை மேற்கொள்ள வேண்டும். சிக்கலான மற்றும் ஆடம்பரமான ஹேர் ஸ்டைல்களை பேணுவது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் கலைந்துவிட்டால், அவற்றை சரிசெய்வது கொடுமையான விஷயம். அதிலும் மென்மையான தலைமுடிக்கு, இந்த மாதிரியான அலங்காரங்கள் அழகாகவும் இருக்காது. அதற்குப் பதிலாக பின்னலிட்ட மற்றும் அடுக்கடுக்கான ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கலாம்.

நகைகள்

நகைகள்

மழைக்காலத்தில் பளபளப்பான பிரகாசமான நகைகள் அணிவதையே அனைவரும் விரும்புவர். ஆனால் தற்போது ஆபரணங்கள் அதிகமாக அணிந்துக் கொள்வதை யாரும் விரும்புவதில்லை. எனவே, எளிமையான கற்கள் பதிக்கப்பட்ட சிறிய அளவிலான நகைகளை அணிந்து கொண்டு வெளியில் செல்லலாம்.

ப்ளஷ் (blush)

ப்ளஷ் (blush)

ப்ளஷ் (blush) செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதனை மிகவும் லேசாக செய்யவும். இளஞ்சிவப்பு, பீச் மற்றும் பழுப்பு ஆகிய ஷேடுகளில் உள்ள க்ரீம் ப்ளஷ்களைப் பயன்படுத்த வேண்டும்.

த்ரெட்டிங் (threading)

த்ரெட்டிங் (threading)

மழைக்காலங்களில் கண் புருவங்களை ட்ரிம் செய்து கொள்ளவும். ஏனெனில் மழைப் பெய்யும் பொழுது ஐ-ப்ரோ பென்சில்களைப் பயன்படுத்த முடியாது என்பதனால், த்ரெட்டிங் (threading) செய்து பிறகு ஹேர்ஜெல்லை (hair gel) பயன்படுத்தலாம்.

தலை மசாஜ்

தலை மசாஜ்

தலைமுடியைத் தவறாமல் ஷாம்பு கொண்டு அலசி, ஸ்கால்ப்பையும் தவறாமல் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் பொடுகு மற்றும் இதர தலை முடிப்பிரச்சனைகள் தடைபடும்.

ஆடைகள்

ஆடைகள்

டெனிம் வகை ஆடைகள் மழைக்காலத்திற்கு உகந்தவை அல்ல. எனவே பருத்தி ஆடைகளையும், கேப்ரி கால்சட்டைகள் எனப்படும் முக்கால் நீள கால்சட்டைகளையும் அணியவும்.

குடைகள்

குடைகள்

குடைகள் இப்போது பலவண்ணங்களில் வந்து ஃபேஷனாகி விட்டன. ஆகவே மனதிற்கு பிடித்த சில வண்ணங்களில் குடைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

செருப்புகள்

செருப்புகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Monsoon Makeup Tips

In monsoons, dense makeup has a risk of being smudged and washed out severely and so light and sheer makeup is more advisable. Use waterproof mascara, transfer-resistant lipsticks and waterproof liners and may even use waterproof foundation, if it is a must for you. Indian girls can put their 'kajal' (kohl) away until winters.
Desktop Bottom Promotion