For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேக்-கப் போட்டாலும், எண்ணெய் பசை அதிகமா இருக்கா?

By Maha
|

நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள்.

ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் போட்டாலே எண்ணெய் வழியும். இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-கப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள். மேலும் இவ்வாறு மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது போன்ற தெரிந்தால், அது முதுமைத் தோற்றத்தை தரும். எனவே இத்தகைய தோற்றத்தை தவிர்க்க, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகத்தை கழுவுவது

முகத்தை கழுவுவது

மேக்-கப் போடும் முன் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-கப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும்.

ஸ்கரப்

ஸ்கரப்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-கப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-கப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.

ஐஸ் கட்டி

ஐஸ் கட்டி

மேக்-கப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-கப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

நீர்ம ஃபௌண்டேஷன்

நீர்ம ஃபௌண்டேஷன்

மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால், மேக்-கப்பின் போது நீர்ம ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக ஃபௌண்டேஷன் பவுடரைப் பயன்படுத்தலாம்.

கன்சீலர்

கன்சீலர்

ஒருவேளை ஃபௌண்டேஷன் பவுடராக இருந்தால், கன்சீலரை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுவாக கன்சீலர்கள் ஆயில் மாதிரி இருக்கும். எனவே அளவாக பயன்படுத்தினால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

பவுடர்

பவுடர்

மேக்-கப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.

டிஸ்யூ பேப்பர்

டிஸ்யூ பேப்பர்

எப்போதும் டிஸ்யூ பேப்பரை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை வைத்து அவ்வப்போது முகத்தை துடைத்தால், முகத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் மேக்-கப்பை கலைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Makeup Making Your Face Oily? Try These.. | மேக்-கப் போட்டாலும், எண்ணெய் பசை அதிகமா இருக்கா?

Oily makeup is also a sign of ageing skin. And it could also be that you are using the wrong kinds of cosmetics to cover up wrinkles. If you have oily skin or are 40 plus, you need be extra careful and avoid some crucial makeup mistakes. Here are some of the steps that can prevent your makeup from becoming oily.
Desktop Bottom Promotion