கண்களுக்கு மை தடவுவதற்கான 10 விதமான ஸ்டைல்கள்!!!

'கண்ணுக்கு மை அழகு' என்று கவிஞன் சும்மாவா எழுதியிருக்கிறான்? அவன் கூற்று பொய் கிடையாது. பெண்களின் கண்களுக்கு அழகை சேர்க்க முதன்மையான சாதனமாக விளங்குகிறது கண் மை. கண் மை தடவினால், அது கண்களை தனியாக பளிச்சிட்டு காட்டும். அதனல் தான் சினிமா ஹீரோக்கள் கூட கண் மை தடவிக் கொள்கின்றனர். பல வித்தியாசமான ஸ்டைல்களில் நாகரீகத்திற்கேற்ப கண்ணுக்கு மை தடவுவது என்பது ஒரு குதூகுலம் தானே.

கருப்பு கண் மை என்பது கண்களுக்கான ஒரு எளிய மேக் அப் ஆகும். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் இப்படி விதவிதமான ஸ்டைல்களில் கண்ணுக்கு மை தடவி கொண்டால், எளிய முறையிலேயே தினமும் உங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம். அலுவலகததிற்கு ஓட வேண்டியதன் காரணமாக மேக் அப் செய்து கொள்ள 5 நிமிடங்கள் தான் உள்ளதா? கவலை வேண்டாம்! இந்த கண் மையை தடவி கொண்டாலே போதுமானது.

பொதுவாக விதவிதமாக கண்ணனுக்கு மை தடவி கொண்டாலும் கூட, அது உங்களுக்கு பொருந்தி விடும். அதற்கு காரணம் கருமை நிறம் அனைத்து கண்களுக்கும் எடுப்பாக அமைவது தான். முக்கியமாக இந்திய பெண்களுக்கு கருப்பு கண் மையை தவிர, வேறு எதுவும் அவ்வளவு ஈர்ப்பாக அமையாது. அதனால் தான் எந்த ஸ்டைலில் கருப்பு மை தடவினாலும், அது இந்திய பெண்களுக்கு பொருந்துகிறது. இருப்பினும் தினமும் கண்களுக்கு வெறும் கண் மை மட்டும் தடவினால், நாளடைவில் உங்கள் தோற்றம் சலிப்படையச் செய்யும்.

ஆகவே உங்களை தினமும் புதிதான தோற்றத்தில் காட்டுவதற்கு, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விதவிதமான ஸ்டைல்களில் கண்ணுக்கு மை தடவி கொள்ள வேண்டும். அது என்ன ஸ்டைல்கள் ன்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அடிப்படை கண் மை

கண்களின் மேல் இமை ரோமங்களிலும் கீழ் இமை ரோமங்களிலும் சரிசமமாக பட்டையான கோடுகளை தீட்டினால், அது தான் அடிப்படை ஸ்டைல். இந்த ஸ்டைலுடன் தனியாக கூடுதல் கொசுறு எதுவும் செய்யத் தேவையில்லை. இதனை செய்ய வெறும் 2 நிமிடங்கள் போதும். முக்கியமாக அவசரமாக வெளியேறும் போது, இது தோதான வழிமுறையாகும்.

மேல் இமை ரோமங்களில் கோடு

ஒரு பார்மல் தோற்றம் தேவைப்பட்டால், கண் மையை கண்களின் மேல் இமை ரோமங்களின் மேல் மட்டும் தடவி, கீழ் இமை ரோமங்களை அப்படியே விட்டு விட வேண்டும். பார்மல் ஆடை அணியும் போது இந்த ஸ்டைல் நன்றாகவே பொருந்தும்.

கீழ் இமை ரோமங்களில் கோடு

மேல் கூறிய ஸ்டைலுக்கு அப்படியே நேர் எதிரான இந்த ஸ்டைலும் கூட அழகை அதிகரிக்கும். சில நேரம் உங்களுக்கு மேக் அப் செய்து கொள்ள விருப்பம் இருப்பதில்லை. ஆனால் வெளிறிய கண்களை மட்டும் சரிசெய்ய தோன்றலாம். அப்படிப்பட்ட நேரத்தில் கீழ் இமை ரோமங்களில் மட்டும் கண் மையை தடவி, மேல் இமை ரோமங்களை அப்படியே விட்டு விடுங்கள்.

ஸ்மோக்கி கண்கள்

இவ்வகை தோற்றம் அளிக்க, கண்களுக்கு பட்டையாக மேக் அப் போட வேண்டும். உங்கள் மேல் இமை ரோமங்களில் கண் மையை தடவி, ஏதாவது பெட்ரோலிய ஜெல்லியை கொண்டு இமையில் நன்றாக தேய்க்கவும். இவ்வகை மேக்-அப் உங்கள் கண்களுக்கு நீங்கள் விரும்பிய ஸ்மோக்கி தோற்றத்தை அளிக்கும்.

தாக்கம் ஏற்படுத்துகின்ற கண்கள்

கண்களை மட்டும் தனிப்படுத்தி காட்ட வேண்டுமா? அப்படியானால் இந்த ஸ்டைலை முயற்சி செய்யுங்கள். வெண்ணிற ஐ ஷாடோவை கொண்டு கண் இமைகளில் தடவி, அதனை வெண்மையாக மாற்றுங்கள். பின் கண் மையை கொண்டு, கோண வடிவத்தில் பட்டையான கோடுகளை மேல் மற்றும் கீழ் இமை ரோமங்களில் தடவுங்கள்.

கோதிக் மேக்-அப்

இவ்வகை மேக்-அப்பில் கருமை நிற கண் மை அதிகமாக பயன்படுத்தப்படும். கோதிக் மேக்-அப்பை முயற்சி செய்ய கண் மைகளை கொண்டு தடித்த கோடுகள் தீட்ட வேண்டும். மேலும் இருள் நிறைந்த வண்ணத்தில் ஐ ஷாடோவைப் பயன்படுத்த வேண்டும்.

சிறகை கொண்ட கண்கள்

இவ்வகை பேஷன் மீண்டும் உயிர் பெறுகிறது. இந்த ஸ்டைலை பின்பற்ற வேண்டுமானால், கண் மையை மேல் இமை ரோமங்களுக்கு சற்று மேலே தீட்ட வேண்டும். இதனால் உங்கள் கண்களை பார்ப்பதற்கு, மேல் நோக்கி சாய்ந்திருப்பதை போன்ற தோற்றமளிக்கும்.

பெண் மானை போன்ற கண்கள்

பெண் மானை போன்ற கண்கள் மேக்-அப் என்பது 1960 மற்றும் 1970-களில் புகழ் பெற்று விளங்கியது. ஆனால் இன்றும் கூட இதனை நம் பாலிவுட் கனவு கன்னிகள் செய்து வருகின்றனர். கண் மையை மேல் மற்றும் கீழ் இமை ரோமங்களில் பட்டையாக தடவி, கண்களின் மூலையில் 'u' போன்று வளைத்து விடுங்கள். இவ்வகையில் கண் மை தீட்டினால் ஒரு மென்மையான தோற்றத்தை தரும்.

அடர்த்தியான கருமை நிற கண் மை

சில பெண்களுக்கு அடர்த்தியாக கண் மையை தடவி, கண்களை கருமையாக காட்ட விருப்பம் இருக்கும். அதை நாம் கவனிக்கவும் செய்திருப்போம். அப்படிப்பட்ட ஸ்டைல் வேண்டுமானால், கண் மை பென்சிலை இரண்டு அல்லது மூன்று முறை கண் இமை ரோமங்களில் தீட்டினால், இந்த விளைவு கிடைத்துவிடும்.

See next photo feature article

இரண்டு ரெக்கை கண்கள்

முக்கியமான பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கு செல்ல வேண்டுமானால், இந்த ஸ்டைலை பயன்படுத்தலாம். உங்கள் மேல் இமை ரோமங்களில் அழகிய பறக்கும் சிறகை போல் கோடை தீட்டிக் கொள்ளுங்கள். மேலும் கீழ் இமை ரோமங்களில் தீட்டும் கோடு, கீழ் நோக்கி வளைய வேண்டும்.

Read more about: beauty tips, make up, அழகு குறிப்புகள், மேக் அப் டிப்ஸ்
English summary

Applying Kajal In 10 Different Styles

Applying kajal in styles that are different is a versatile idea. This is because, black is a colour that usually suits every eyes. Especially for the Indian complexion, there is nothing more attractive than black kohl. If you need different eye makeup ideas to keep having a fresh look every day, All these different ideas can be implemented by applying kajal in styles that have been described below.
Story first published: Saturday, September 21, 2013, 14:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter