For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால் விரல் சொத்தையா? குணப்படுத்த அருமையான வழிகள் உங்களுக்காக!!

கால் நகங்களில் சொத்தை உண்டானால் அதனை குணப்படுத்தும் இயற்கை வீட்டு வைத்தியங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

By Divyalakshmi Soundarrajan
|

கால் நகத்தில் சொத்தை ஏற்படுவது இந்த காலத்தில் சாதாரணம் ஆகிவிட்டது. அதற்குக் காரணம் அதிக நேரம் ஷூ அணிந்திருப்பது. ஷூ அணிவது மட்டுமல்ல, வெறும் காலில் நடப்பது மற்றும் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் செருப்பை அணிவது போன்றவையும் தான் நக சொத்தை ஏற்படக் காரணங்கள்.

இப்படி நகச் சொத்தை ஏற்பட்டால் அதில் வலியை தவிர நகம் உடைவது, கெட்ட வாடை வருவது, மற்ற நகங்களுக்கு பரவுவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதனை ஆரம்ப காலத்திலேயே கவனித்து உரிய மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Natural home remedies to treat nail fungus

மருத்துவம் என்றால் மருத்துவரை தான் அணுக வேண்டும் என்பது இல்லை. நம் வீட்டிலேயே சமையல் அறையில் உள்ள பொருட்களை வைத்தே இதனை சரி செய்ய முடியும்.

அட ஆமாங்க. இங்கே அப்படிப்பட்ட வைத்தியத்திற்கு உதவக் கூடிய பொருட்களைப் பற்றியும் அவற்றை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

சிறிது நீரில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து அந்தக் கலவையில் அரை மணி நேரம் உங்கள் காலை ஊற வைய்யுங்கள். இவ்வாறு செய்வதால் நோய் தொற்று மற்ற விரல்களுக்குப் பரவாமல் தடுக்கலாம். இதற்குக் காரணம் ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள லேசான அமிலத் தன்மை தான். மேலும் ஆப்பிள் சிடர் வினிகரில் நுண்ணுயிரிகளை அழிக்கக் கூடிய தன்மை உள்ளது.

 பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து அதை கால் சொத்தை ஏற்பட்ட இடத்தில் போட்டு 20 நிமிடம் ஊற விட வேண்டும். இவ்வாறு நா ஒன்றக்கு ஒரு செய்தால் போதுமானது.

பேக்கிங் சோடா இயற்கையில் ஒரு காரத் தன்மை கொண்டது. இதனால் சொத்தை மேற்கொண்டு அதிகரிக்காமலும், மற்ற விரல்களுக்கு பரவாமலும் தடுத்துவிடும்.

 டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில்

இதன் கிருமிநாசினி தன்மை கால் விரல்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிடும். நக சொத்தை ஏற்பட்டுள்ள இடத்தை ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்து பின்னர் இந்த எண்ணெயை அந்த இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு என்று ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் நக சொத்தை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 கற்பூரவல்லி எண்ணெய்

கற்பூரவல்லி எண்ணெய்

இந்த எண்ணெயை பாதிப்படைந்த இடத்தில் 5 சொட்டு விட்டு தேய்த்து 5 முதல் 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். ஏனென்றால், இது ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது.

பூண்டு

பூண்டு

சிறிது பூண்டு பற்களை எடுத்து நசுக்கி மிதமான சூடுள்ள தண்ணீரில் சேர்த்துக் கலந்து இந்த தண்ணீரில் காலை ஊற வைக்க வேண்டும். கால் சரியாகும் வரை அதனை தொடர்ந்து செய்து வாருங்கள். இதில், பூஞ்சைத் தொற்று பண்புகள் அதிகமாக உள்ளது.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் பொதுவாக ஒரு கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இது கால் சொத்தையை எளிதில் சரி செய்துவிடும். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் சிறிது நீர் சேர்த்துக் கலந்து காலில் தடவி 3 முதல் 4 மணி நேரம் வைத்திருந்து பின்னர் கழுவி விட வேண்டும்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலைக்கு பல்வேறு நோய் தொற்றுகளை போக்கும் பண்பு உள்ளது. கை அளவு வேப்பிலையை அரைத்து பெஸ்ட் போல செய்து சிறிது மஞ்சள் தூள் கலந்து உபயோகிக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் கழுவினால் நக சொத்தை சரியாகி விடும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கால் நக சொத்தையை போக்கிவதில் சிறந்து செயல்படும். வெங்காயத்தை நறுக்கி நக சொத்தை உள்ள இடத்தில் 5 நிமிடம் தடவ வேண்டும். பின்னர், 20 நிமிடம் கழித்து அதை கழுவி விட வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலம் உள்ளது. இது பூஞ்சைகளை அழித்து நோய் தொற்றுகளை அகற்றிவிடும். சிறிது தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை செய்ய வேண்டும். இது ஒரு எளிய கை வைத்திய முறையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural home remedies to treat nail fungus

Natural Home Remedies To Treat Nail Fungus
Story first published: Wednesday, April 19, 2017, 17:02 [IST]
Desktop Bottom Promotion