For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையான முறையில் மஞ்சள் நகங்களுக்கு சிகிச்சை அளிக்க சில டிப்ஸ்...

By Super
|

நம் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற இடங்களுக்கும் கொடுக்க தவறுவதில்லை. அதில் கைகளும், கால்களும் அடங்கும். அவைகளையும் பேணி பராமரித்தால் தான், அது நம் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும்; அதிலும் முக்கியமாக பெண்களுக்கு. பொதுவாக நகங்களில் பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அவற்றை ஒழுங்காக பராமரிக்காமல் விட்டால் அழகு கேடு அடைவதுடன், உடல்நல கோளாறும் ஏற்படும்.

கை மற்றும் நகங்களுக்கு மெனிக்யூர் (பராமரிக்கும் கலை) செய்யப்பட்டிருந்தால், அது ஒருவருடைய அழகை இன்னும் சற்று அதிகமாக மெருகேற்றும். இருப்பினும் பல பெண்களுக்கு சுத்தமான, நீளமான வெள்ளை நிற நகங்களை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி மெனிக்யூர் செய்வதும் அனைவராலும் இயலாது. முக்கியமாக சற்று வசதி குறைவாக இருக்கும் பெண்கள் அதை நாட முடியாது. சலூன் மற்றும் அழகு நிலையங்கள் நக பராமரிப்புகளுக்கு பெரிய தொகையை வாங்கி விடுவதால், அனைவராலும் இங்கு போக முடியாது. பெண்களுக்கு இருக்கும் பொதுவான நக பிரச்சனை என்பது மஞ்சள் நிற நகங்கள்.

நக சிகிச்சைகள் என்பது விலை உயர்ந்தது மட்டுமல்லாது, காலப்போக்கில் அது நம் உடல் நலத்தை பாதித்துவிடும். அதனால் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனம். மஞ்சள் நிற நகங்களை குணப்படுத்த சில எளிய வழிமுறைகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதைப் பின்பற்றி பாருங்களேன்.

மஞ்சள் நகங்களை குணப்படுத்துவதற்கான இயற்கை சிகிச்சைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

சுத்தமான வெண்ணிற நகங்களைப் பெறுவதற்கு ஒரு எளிய வழி தான் டூத் பேஸ்ட். டூத் பேஸ்டை வைத்து நகங்களை நன்றாக துடைக்க வேண்டும். இது நகத்திலுள்ள கரையை அகற்ற மட்டுமல்லாது அதனை வெண்மையாகவும் பளபளவென்றும் வைக்க உதவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

மற்றொரு இயற்கை பொருளான எலுமிச்சையில் எண்ணிலடங்கா நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் துவர்ப்பியாக செயல்படுவது. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் விரல்களை எலுமிச்சை நீரில் ஊற வைக்க வேண்டும். இது நகத்தில் உள்ள மஞ்சள் கறையை அகற்றும். இது மிகவும் பாதுகாப்பான சிகிச்சையாகும். இதனால் எந்த ஒரு பின் விளைவுகளும் இருக்காது.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு

நல்ல தரமுள்ள பேக்கிங் சோடாவையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து, ஒரு பேஸ்டை தயாரியுங்கள். அதனை நகங்களின் நுனிகளிலும், மையப் பகுதிகளிலும் தடவுங்கள். இது மஞ்சள் நிற நகங்களை எந்த ஒரு சிரமமுமின்றி சரிப்படுத்த உதவும்.

ஜிங்க் உணவுகள்

ஜிங்க் உணவுகள்

மஞ்சள் நிற நகங்கள் வர மிக முக்கிய காரணங்களில் ஒன்று, நம் உடம்பில் ஜிங்க் சத்தின் பற்றாக்குறை. அதனால் ஜிங்க் சத்துள்ள உணவு பொருட்களான முட்டை, கடல் சிப்பி போன்றவற்றை, தினசரி உணவோடு சேர்த்து கொள்ளுங்கள். இது இந்த மஞ்சள் நக பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை சேர்க்கப்பட்ட எண்ணெயை நகத்தில் பயன்படுத்தினால் நகத்தை அது வெண்மையாக்கும். இருப்பினும் இதனை தொடர்ந்து செய்தால் தான் நல்ல பலன் அளிக்கும். அதற்கு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நகங்களை அதில் ஒருசில நிமிடங்கள் ஊற விட வேண்டும். இதுவும் கூட நல்ல பலனை அளிக்கும்.

வைட்டமின் ஈ உணவுகள்

வைட்டமின் ஈ உணவுகள்

வைட்டமின் ஈ என்ற மந்திரத்தால் மஞ்சள் நக பிரச்சனையை குணப்படுத்தலாம். வரும் முன் காப்பது தான் புத்திசாலித்தனம். எனவே இந்த நக பிரச்சனைகள் இல்லையென்றாலும், இந்த சத்துள்ள உணவு பொருட்களான நட்ஸ், முட்டை போன்றவற்றை உண்ணுங்கள்.

பொலிவூட்டுதல் மற்றும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துதல்

பொலிவூட்டுதல் மற்றும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துதல்

கைகளையும் நகங்களையும் நேரம் கிடைக்கும் போது பொலிவூட்டும் கருவியை வைத்து பாலிஷ் செய்தும், மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி, ஈரப்பதத்துடனும் வைக்க வேண்டும். அதுவும் பொலிவூட்டும் கருவியை வைத்து நகங்களை பாலிஷ் செய்து, பின் தண்ணீரில் கழுவுங்கள். காய்ந்த பின் நல்ல தரமான மாய்ஸ்சுரைசர் மற்றும் நெயில் பாலிஷ்களை பயன்படுத்தலாம். இது நகங்களை நல்ல நிலையில் வைத்து மஞ்சள் நிறம் வராமல் பாதுகாக்கும்.

மேற்கூறியவைகள் சிறந்த இயற்கை வைத்தியங்களில் சில உதாரணங்கள். இவைகளை வீட்டிலேயே எந்த ஒரு சிரமமுமின்றி பின்பற்றலாம். அதிலும் இவைகளை ஒழுங்கான முறையில் தொடர்ந்து பின்பற்றினால் தான் நல்ல பலன் அளிக்கும். இருப்பினும் இந்த பிரச்சனை பல நாட்களாக நீடித்து இருந்தால், ஒரு மருத்துவரை அல்லது நிபுணரை அணுகுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to treat yellow nails naturally | இயற்கையான முறையில் மஞ்சள் நகங்களுக்கு சிகிச்சை அளிக்க சில டிப்ஸ்...

One of the most common nail problems that we come across in women are yellow nails. Nail treatments are not only expensive but also harmful in the long run, one should always make sure to opt for natural remedies at home. For this here is a simple guide that you can follow to treat yellow nails.
Desktop Bottom Promotion