For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே முகத்திற்கு வேக்சிங் செய்ய சில டிப்ஸ்...

By Staff
|

மென்மையான மற்றும் வழவழப்பான சருமம் முகத்தை அழகாய் காட்டும். மேலும் அத்தகைய சருமம் தான் அனைவரையும் ஈர்க்கும். அந்த மாதிரியான முகத்தைப் பெற மெனக்கெட்டு அழகு நிலையங்களுக்குச் செல்பவர் இங்கே ஏராளம். ஆனால் அப்படி அழகு நிலையங்களில் பணத்தை கொட்டித் தள்ளுவதை விட, வீட்டிலேயே வேக்சிங் செய்து கொண்டால், குறைந்த செலவில் அழகான மென்மையான முகத்தை பெறலாம்.

அழகாய் இல்லை என்று குறையாக நினைப்பவராயின், முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்கி விட்டால், அழகாய் இருப்பதாய் பெருமிதம் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை பின்பற்றி அழகான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறுங்கள்.

How to wax your face at home

மெழுகை வாங்கவும்:

முதலில் அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று, சரும நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சருமத்திற்கு ஏற்ற மெழுகு வாங்க வேண்டும்.

சுத்தப்படுத்தவும்:

நன்கு கழுவிய முகமே வேக்சிங் செய்வதற்கு ஏதுவானது. ஆகவே முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். கைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் கைகள் தானே மெழுகை முதலில் தொடப்போகின்றன.

பொருத்தமான வெப்பநிலைக்கு சூடுபடுத்தவும்:

மெழுகு இருக்கும் பேக்கில் குறிப்பிடப்பட்டிருப்பது போல மெழுகை தகுந்த வெப்பநிலைக்கு சூடுபடுத்த வேண்டும். பொன்னான முக சருமத்திற்கு அதிக சூடு ஆகாது. ஆகவே மெழுகு அதிக வெப்ப நிலையில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

யுக்தி:

மெல்லிய அடுக்காக முகத்தில் தடவ வேண்டும். பின் ஒரு கீற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவு நேரம் வரையில் தடவிய மெழுகிலே விடவும். பின்பு முடி வளரும் திசையின் எதிர் திசையில் சட்டென்று கீற்றை இழுத்து அகற்றவும். முக்கியமாக மேற்புறம் நோக்கி இழுத்து விடக் கூடாது. அவ்வாறு செய்தால் அது முடிகளை உடைய வைத்து பின்பு மீண்டும் விரைவாக வளர வைத்து விடும்.

சருமத்தை மேன்மைப்படுத்தவும்:

வேக்சிங் செய்யப்பட்டப் பகுதியில் சற்று அழுத்தம் கொடுக்கவும். ஒரு முறைக்கு மேல், ஒரே பகுதியில் வேக்சிங் செய்ய வேண்டாம். ஏனெனில் அது தேவையற்ற சேதத்தை ஏற்படுத்திவிடும். வழக்கமாக உபயோகிக்கும் லோஷன் பயன்படுத்தி சருமத்தை ஆசுவாசப்படுதலாம்.

தேவையற்ற செல்களை உதிர்த்தல் (Exfoliate)

வேக்சிங் செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் சருமத்தில் உள்ள தேவையற்ற செல்களை உதிர்ப்பதன் மூலம் வேக்சிங்கில் நல்ல பலன் கிட்டும். வழக்கமாக வேக்சிங் செய்வது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரையிலும் தாக்கு பிடிக்கும்.

எச்சரிக்கை:

வேக்சிங் செய்வது சருமத்திற்கு அலர்ஜி அல்ல என்று தெரிந்த பின்னரே வேக்சிங் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கீற்று அளவு கை, கால்களில் மெழுகை தடவி பார்த்து, அது அலர்ஜியா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

English summary

How to wax your face at home

A smooth and clear face can make you look and feel good. Get rid of those extra hair on your face that make you feel less than sexy. Instead of visiting a salon, try waxing your face at home to make the treatment cost-effective and convenient.
Desktop Bottom Promotion