For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை குளியல் மேற்கொள்ள சில டிப்ஸ்...

By Super
|

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்த நீரில் நீந்திக் குளித்த பிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். இந்த அமிலம் கலந்த பழச்சாறு குளியல், தோலிலுள்ள மயிர்க்கால்களை மிருதுவாக்குவதோடு, தோலிலுள்ள வேதிப்பொருள்களையும் நீக்கி, தோலுக்குப் புத்துணர்வையும், மென்மையையும் அளிக்கிறது.

How to Shower With a Lemon

1. எலுமிச்சை பழத்தைத் தேர்ந்தெடுக்கவும்

முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதுவும் வெளிர் நிறத்தில் உள்ள எலுமிச்சை குளியலுக்கு ஏற்றதாகும். இதில் பச்சை நிறத் திட்டுக்கள் இருந்தாலும் நன்று. அதிக பருக்களோடு, அடர்ந்த நிறத்தில் இருக்கும் எலுமிச்சை, குளியலுக்கு உகந்தது அல்ல.

2. எலுமிச்சையின் தோலை உரிக்கவும்

எலுமிச்சையை பெரிய துண்டாக வரும்படி தோலுரிக்கவும். முழுமையாகத் தோலுரிக்க விரும்பாதவர்கள், மேலே உள்ள வெள்ளை நிற மெல்லிய தோலுடனேயே பயன்படுத்தலாம். தோலுரிக்கப்பட்ட பழத்தை இரண்டு பெரும் பாகங்களாக வெட்டிக் கொண்டு குளிக்கத் தொடங்க வேண்டும்.

3. முடியை அலசவும்

எலுமிச்சைப் பழத்தின் ஒரு பாதியை தலையில் நன்கு சாறு பிழிந்து, தோலுள்ள பகுதியைக் கொண்டு நன்கு தேய்த்து விடவும். ஏனெனில், வெட்டப்பட்ட பகுதியைக் கொண்டு தேய்த்தால், எலுமிச்சை பழத்தின் துணுக்குகள் தலையில் நன்கு ஒட்டிக் கொள்ளும்.

4. முடியைக் கண்டிஷன் செய்யவும்

எலுமிச்சைப் பழத் தோலின் வெள்ளைப் பகுதி தலையில் படும்படி இரண்டு கைகளாலும் முழு நீள முடியையும் தேய்த்து, பின் நன்கு அலசவும்.

5. முகத்தையும், உடலையும் கழுவவும்

முடியைக் கழுவியதைப் போலவே, எலுமிச்சைப் பழத் தோலைக் கொண்டு முகத்தையும் கழுவவும். முகத்தைக் கழுவிய பிறகு, பழத்தின் இரண்டு பாகங்களையும் கொண்டு உடலை நன்கு தேய்த்துக் கழுவவும்.

6. நன்கு அலசவும்

பழத்தின் துணுக்குகள் ஏதேனும் உடலில் ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். இப்பொழுது வழவழப்பான சருமத்தின் மென்மையைப்பெற்று ஆனந்தமடைவீர்கள்.

குறிப்பு:

ஒரு கத்தியை கொண்டு தோலை உரிக்க முற்படாமல், ஒரு சாவியை நுழைத்து எலுமிச்சைப் பழத் தோலை நெடுவாக்கில் உரித்தால், எளிதாக இரண்டு பாகங்களாக பிரிக்கலாம்.

எச்சரிக்கை:

எலுமிச்சைப் பழச்சாறு கண்களில் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும். சிலருக்கு சாறிலுள்ள அமிலத்தன்மை உடலுக்கு உகந்ததாக இருக்காது. உடலில் மென்மையான பாகங்களில் பட்டு சில நிமிடங்கள் வரை அதிக எரிச்சலை நீங்கள் உணர்வதாக இருந்தால், எதிர்காலத்தில் இக்குளியலைத் தவிர்க்கவும்.

English summary

How to Shower With a Lemon | எலுமிச்சை குளியல் மேற்கொள்ள சில டிப்ஸ்...

Washing with a lemon is refreshing and effective way to bathe without using soap. It is particularly effective at restoring skin after swimming in a chlorinated pool. The acidic juice smooths hair cuticles and acts as a mild chemical exfoliant to reveal fresh, smooth skin.
Desktop Bottom Promotion