For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்திலுள்ள வெடிப்புகளை சரி செய்வது எப்படி?

By Maha
|

ஆறு அடி உடலுக்கு தலையே மூலம். அந்த தலைக்கு முகம் தான் அடையாளம். ஆனால், உடலிலுள்ள தோல் பகுதிகளில், பருவநிலை மாற்றங்கள், சருமத்தை வறட்சி அடையச் செய்யும் பொருட்கள் மற்றும் குறைவான ஈரப்பதம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது முகம் மட்டுமே. அப்போது தோலானது இறுகியும் மற்றும் சிவப்பு நிற புள்ளிகளுடனும் காணப்படும்.

இந்த நேரங்களில், சரும வெடிப்பு, வலி மற்றும் நோய் தொற்றுகள் போன்றவற்றில் இருந்து விடுபட நிறைய முயற்சிகளை மேற்கொள்வோம். இதற்கு பிரச்சனைகளுக்கு தீர்வாக ஒருசில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பயனடையுங்கள்.

Cracked Skin
1. சாதாரணமாக முகத்தை கழுவும் போது வேகமாகவும் மற்றும் தண்ணீர் நீண்ட நேரம் சருமத்தில் இல்லாதவாறும் கழுவ வேண்டும். ஏனெனில் அவ்வாறு இருப்பது தான் சருமத்திற்கு நல்லது. மிதமான சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் போன்றவற்றை முகத்திற்கு பயன்படுத்தும் போது, முகத்தை சுரண்டுவதை தவிர்க்க வேண்டும்.

2. மிகவும் சூடான நீரில் குளிப்பதையும் மற்றும் சூடான நீரில் ஷவர் பாத் எடுப்பதையும் தவிர்ப்பது நலம். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தலாம்.

3. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் பொருட்களை முகத்தில் நேரடியாக உபயோகப்படுத்தலாம். க்ரீம் வகையானப் பொருட்கள் சரும நோய்களுக்கு மிகவும் ஏற்றவை. மருத்துவ குணமிக்க திரவங்களான லோஷன்கள் மென்மையாக இருந்தாலும், அவற்றை அனைத்து இடங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவற்றில் ஆல்ஹகால் கலந்திருக்கும். முகப்பரு அதிகம் இருந்தால், எண்ணைய் இல்லாத அழகுப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

4. வறண்ட மற்றும் அரிப்பு உடைய தோல் பகுதிகளின் மேல்புறங்களில் கார்டிசோன் கிரீமை பயன்படுத்தி 1 அல்லது 2 வாரங்களில் சரி செய்யலாம். இந்த கிரீமை பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் போடவும் மற்றும் ஒரு நாளுக்கு இருமுறை மட்டும் பயன்படுத்தவும். முதலில் பாதிக்கப்பட்ட இடத்தில் கார்டிசான் கிரீமை போட்டு விட்டு, அதன் மீது ஏதேனும் மாய்ச்சுரைசரை தடவி விடவும். ஒருவேளை அவை முகத்தில் எரிச்சலையோ அல்லது முகத்தை சிவப்பாகவோ மாறினாலோ, உடனடியாக அவற்றை நிறுத்தி விடவும்.

5. ஈரப்பதத்தை உருவாக்கும் கருவிகளை வீடுகளில் உபயோகப்படுத்துவதன் மூலம் முகங்களில் வறட்சி மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வறண்ட காற்றினை வெளியேற்ற முடியும்.

6. ஈரப்பதத்தை உருவாக்கும் பொருட்களை (Moisturizers) ஒரு நாளுக்கு மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட முறைகள் பயன்படுத்தவும். வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தவுடனோ அல்லது ஷவர் பாத் எடுத்தவுடனோ இவற்றைப் பயன்படுத்துவது ஆச்சரியப்படத்தக்க விளைவுகளை உருவாக்கும். அரிப்பை ஏற்படுத்தக்கூடிய தோல் பகுதிகளில், எவ்வளவு அதிகமான ஈரப்பதத்தை வைத்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

7. தோல் மிகவும் மோசமாக வெடிப்புகளை கொண்டிருந்தாலோ அல்லது நோய் தொற்று ஏற்பட்டிருந்தாலோ மருத்துவரையோ அல்லது தோல் மருத்துத்துவரையோ உடனடியாக அணுகி ஆலோசனை பெறவும்.

English summary

How to Heal Cracked Skin on the Face | முகத்திலுள்ள வெடிப்புகளை சரி செய்வது எப்படி?

Of all the skin on your body, your face is especially vulnerable to harsh weather, drying facial cleansing products, and low humidity.
Story first published: Tuesday, February 19, 2013, 18:25 [IST]
Desktop Bottom Promotion