For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையில் ஒரு சில இடங்களில் மட்டும் சொட்டையா? அதற்கான சிறப்பு தீர்வுகள்!

முடி உதிர்வு பிரச்சனையான அலோபியா ஐரேட்டாவின் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன

|

நம்மில் பலருக்கு நமது தலை முடிகளே சிறந்த அடையாளமாக இருக்கிறது. இது நமது ஆளுமை, அழகு, ஸ்டைல் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. அதிஷ்டவசமாக வழுக்கை வயதான காலத்தில் தான் விழும் சரிதானே...? யோசிச்சுக்கங்க..

இந்த நிலை அலோபியா ஐரேட்டா என்ற நிலை அரிதானது. ஆனால் இது யாருக்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இது முடக்கு வாதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மற்றும் டைப் 1 நீரழிவு நோய் ஆகியவற்றால் ஏற்படலாம். ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு நமது உடலை தாக்கினால், முடி உதிர்வு ஏற்படுகிறது.

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது அலோபியா ஐரேட்டா நோய் இருந்தாலும், அது உங்களை தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இது பொதுவாக குழந்தை பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடும். பின்னர் நீங்கள் வளர வளர இது அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி உதிர்தல்

முடி உதிர்தல்

முடி இழப்பு உண்டாகும். இது ஏற்படுவதால் நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்று பொருள் அல்ல. மேலும் இது எந்தவிதமான வலிகளையும் ஏற்படுத்தாது.

இதனால் எந்தவித மனரீதியான மாற்றங்களும் உண்டாகாது. தலைமுடி நமது உடலின் முக்கிய அங்கம் என்பதால் நாம் பாதுக்காப்பு இன்மையாக உணர்கிறோம்.

அலோபியா ஐரேட்டாவிற்கு வயது ஒரு தடையல்ல. இது வயதான பின்பு மட்டும் தான் வரும் என சொல்லிவிட முடியாது. இது ஆண்கள், பெண்கள், வயதானவர், இளமையானவர் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

ஒட்டுமொத்தமாக 2 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே அலோபியா ஐரேட்டாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட்ட வடிவம்

வட்ட வடிவம்

அலோபியா ஐரேட்டா வட்ட வடிவத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முடி உதிர்வு ஏற்படும். மேலும் உடலின் ஒரு சில இடங்களிலும் இந்த முடி உதிர்வு ஏற்பட கூடும். உதாரணமாக தாடி, புருவம், தோல்பட்டை அல்லது கால்கள் போன்ற இடங்களில் முடி உதிர்வு உண்டாகலாம்.

அனைத்து வகையான முடி உதிர்வும் அலோபியா ஐரேட்டாவாக இருக்காது. முதலில் உங்களது முடியின் வேர்பகுதியை கவனியுங்கள் அங்கு வட்ட வடிவத்தில் முடி உதிர்வு ஏற்பட்டுள்ளதா என கவனியுங்கள்.

இந்த வட்ட வடிவ முடி உதிர்வு சிறிது சிறிதாக அதிகரிக்கும். அது பொதுவான ஒன்று தான்.

மென்மையான தோல்

மென்மையான தோல்

தலை முடிகள் உதிர்ந்ததும், சொட்டையாக உள்ள இடம் மிகவும் மிருதுவாக மாறிவிடும். இதை பார்க்கும் போது மீண்டும் அந்த இடத்தில் முடி வராது என்பது போல் இருக்கும்.

அடர்த்தியற்ற முடி

அடர்த்தியற்ற முடி

முடி மிகவும் குறைவாக இருக்கும். அலோபியா ஐரேட்டாவாவின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது மெதுவாக அதிகரிக்கும். ஒரு சிறிய பகுதியில் மிகவும் குறைவான முடிகளே காணப்படும். நீங்கள் தலைவாரும் போதும், தலை குளிக்கும் போது இதை உணரக்கூடும்.

எரிச்சல் மற்றும் அரிப்பு

எரிச்சல் மற்றும் அரிப்பு

சில அலோபியா ஐரேட்டாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடியின் வேர்பகுதிகளில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகும். இது எதனால் உண்டாகிறது என்பதே தெரியாது. இதற்கு பூசணியின் விதை எண்ணெய், மற்றும் பெப்பர் மிண்ட் எசன்சியல் எண்ணெய் உதவியாக இருக்கும்.

முடி உதிர்வு என்பது ஒரு கண்ணாடி மாதிரி, இது சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சில மாதங்களில் வளர்ந்து விடும். மீண்டும் முடி வளரவில்லை என்றால் சொட்டை விழுக வாய்ப்புகள் உள்ளது. சொட்டை விழ ஆறு மாத காலம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms Of Alopecia Areata

here are the symtoms of alopecia areata
Desktop Bottom Promotion