For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகை இரண்டே நாள்ல நிரந்தரமாக ஒழிக்கணுமா? அப்ப இந்த எண்ணெய்ய யூஸ் பண்ணுங்க

இங்கே பொடுகை நிரந்தரமாக இயற்கை எண்ணெய் மூலம் எவ்வாறு தீர்க்கலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

By Lakshmi
|

தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது நமக்கு ஒரு தனிப்பட்ட அழகையையும் சிறப்பையும் வழங்குகிறது. தலையில் உண்டாகும் இந்த பொடுகு பிரச்சனையால் அரிப்பு, முடி உதிர்தல், புண் ஏற்படுதல் போன்றவை ஏற்படுவது மட்டுமில்லாமல், துணிகளின் மேல் விழுந்து தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. பொடுகு தலையில் இருந்தால், முகப்பருக்கள் அதிகமாக வரும். முகத்தில் சிறிய கொப்புளங்கள் வரும்.

பொடுகை ஒழிக்க நாம் கடைகளில் கிடைக்கும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அது தற்காலிகமாக பொடுகை நீக்குமே தவிர முழுமையான தீர்வை தராது. ஆனால் நாம் இந்த இயற்கையான பொடுகு எண்ணெய்யை பயன்படுத்தினால் பொடுகு தொல்லை முற்றிலும் அகன்று விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

  1. வேப்பிலை 1 கைப்பிடி
  2. துளசி அரைக்கைப்பிடி
  3. புதினா அரைக்கைப்பிடி
  4. தேங்காய் எண்ணெய் 150 மிலி
  5. பச்சை கற்பூரம்
  6. ஓம விதைகள்
தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

வேப்பிலை, துளசி, புதினா ஆகியவற்றை நன்றாக கழுவி கெட்டியான பேஸ்டாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 150 மிலி தேங்காய் எண்ணெய்யை 5 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்த பேஸ்டை எண்ணெயில் போட்டு கலக்கவும். மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் சூடாக்கவும். இறக்குவதற்கு 1 நிமிடத்திற்கு முன் ஒமம் மற்றும் பச்சை கற்பூரத்தை தூளாக்கி சேர்க்கவும்.

கெடாமல் இருக்க

கெடாமல் இருக்க

சூடு ஆறும் வரை மூடி போட்டு இந்த எண்ணெய்யை மூடக்கூடாது. அவ்வாறு மூடினால் ஆவியினால் உண்டாகும் நீர் எண்ணெய்யில் விழுந்து எண்ணெய் சீக்கிரம் கெட்டுப்போகும்.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

சூடு ஆறியதும் இந்த எண்ணெய்யை வடிகட்டி தனியாக ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெய் மிகவும் வாசனையாக இருக்கும். இது பார்க்க பச்சை நிறத்தில் இருக்கும்

கண்டிப்பாக வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்த வேண்டும். இரவில் தூங்கும் போது தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் காலையில் குளிக்கும் முன் சிறிதளவு எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை ஊற வைத்து குளிக்க வேண்டும். மிதமான ஷாம்பு உபயோகித்து தலையை நன்றாக அலச வேண்டும்.

வறட்சியை போக்க

வறட்சியை போக்க

வேப்பிலை ஷாம்பு உபயோகிக்கும் போது தலை வறட்சியாகும் இதை தடுக்க ஷாம்புடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உபயோகித்தால் தலை முடியும் மென்மையாகும். பொடுகும் நீங்கும்.

குறிப்பு

குறிப்பு

வேம்பு, துளசி, புதினா ஆகியவை தலைக்கு குளிச்சியை தரும் என்பதால் இது சளி, சைனஸ் தொல்லை உள்ளவர்கள் உபயோக்கிக்க முடியாது. எனவே தான் இதில் பச்சை கற்பூரம் மற்றும் ஓமம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

natural oil for dandruff treatment

here are the ways to prepare and uses of natural oil for dandruff treatment
Story first published: Saturday, May 27, 2017, 11:35 [IST]
Desktop Bottom Promotion