For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமுடி உதிர்தல், முடி வறட்சி, முடி வெடிப்பு அனைத்திற்கும் தீர்வு தரும் ஓர் எளிய வீட்டு சிகிச்சை!

இங்கு முடி உதிர்தல், முடி வறட்சி, முடி வெடிப்பு போன்றவற்றில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத வீட்டு சிகிச்சை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? முடி அதிகம் வறட்சியடைந்து மென்மையிழந்து உள்ளதா? முடியின் முனைகளில் வெடிப்புக்கள் அதிகமாக உள்ளதா? கவலையை விடுங்கள். உங்கள் தலைமுடியின் வலிமையை அதிகரிக்கவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஓர் அற்புத வழி உள்ளது.

Hair Loss, Dry Hair, Split Ends? Try This Homemade Treatment

அதுவும் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து, அடிக்கடி பயன்படுத்தி வந்தால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணலாம். சரி, இப்போது முடி உதிர்தல், முடி வறட்சி, முடி வெடிப்பு போன்றவற்றில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத வீட்டு சிகிச்சை குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1 மூடி

ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்

பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை #1

செய்முறை #1

முதலில் நற்பதமான தேங்காயை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்து, பின் லேசாக நீர் சேர்த்து வடிகட்டி பயன்படுத்தி வடிகட்டி தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் அத்துடன் ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3

செய்முறை #3

பிறகு தயாரித்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவ வேண்டும். இப்படி தலை முழுவதும் இதைத் தடவ வேண்டும். பின் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

செய்முறை #4

செய்முறை #4

அடுத்து 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு:

குறிப்பு:

முடி வெடிப்பு அதிகம் இருந்தால், கத்தரிக்கோலால் அவற்றை வெட்டி நீக்கிவிட்டு, பின் இந்த கலவையைப் பயன்படுத்துங்கள். இதனால் இனிமேல் வெடிப்பு வராமல் இருப்பதோடு, முடியும் நன்கு வளர்ச்சி பெறும். அதே நேரத்தில் தலைமுடி நன்கு மென்மையாக பட்டுப் போன்றும், பொலிவோடும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Loss, Dry Hair, Split Ends? Try This Homemade Treatment

Want to prevent hair loss, dry hair, split ends? Then try this simple and easy homemade treatment.
Story first published: Tuesday, May 23, 2017, 12:24 [IST]
Desktop Bottom Promotion