For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க தலைமுடி ஆரோக்கியமா இல்லையா அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க...

இங்கு தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஹேர் மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

தலைமுடி ஆரோக்கியமாக இருந்தால் தான், நரை முடி, முடி உதிர்தல், முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏதும் வராது. மேலும் தலைமுடி ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால், முடியின் பொலிவு, மென்மைத்தன்மை போன்றவையும் பாதிக்கப்படும். ஆனால் அப்படி ஆரோக்கியமான தலைமுடியைக் கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவு. சரி, தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறந்த வழி எது என்று நீங்கள் கேட்கலாம்.

DIY Hair Mask For Healthy And Shiny Hair

தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஓர் அற்புதமான நேச்சுரல் ஹேர் மாஸ்க் ஒன்று உள்ளது. அந்த மாஸ்க்கை ஒருவர் அடிக்கடி தலைக்கு பயன்படுத்தி வந்தால், தலைமுடி ஆரோக்கியமாவதோடு, அதன் பொலிவும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும். சரி, இப்போது அந்த ஹேர் மாஸ்க்கை எப்படி போடுவதென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 2 பெரியது

தேன் - 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை #1

செய்முறை #1

முதலில் நன்கு கனிந்த 2 வாழைப்பழங்களை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் அத்துடன் 2 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டால், ஹேர் மாஸ்க் தயார்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

தயாரித்து வைத்துள்ள ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தும் முன், முந்தைய நாள் இரவே தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளுங்கள். பின் இந்த ஹேர் மாஸ்க்கை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை நன்கு தடவிக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?

எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?

இந்த மாஸ்க்கை தலைக்கு தடவி 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் வரை நன்கு ஊற வைத்து, பின் ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு தலைமுடியை அலசுங்கள்.

குறிப்பு:

குறிப்பு:

இந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தினால், தலைக்கு ஷாம்பு போட்ட பின் கண்டிஷனரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதுவே தலைமுடிக்கு ஒரு நல்ல கண்டிஷனர் போன்று இருக்கும். இந்த ஹேர் மாஸ்க்கை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Hair Mask For Healthy And Shiny Hair

Do you want healthy and shiny hair during summer? Then try this hair mask.
Story first published: Thursday, May 25, 2017, 12:21 [IST]
Desktop Bottom Promotion