ஆலிவ் எண்ணெயா அல்லது தேங்காய் எண்ணெயா? தலை முடிக்கு சிறந்த்து எது?

ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் இடையிலான கடும் போட்டியில் ஒரு நியாயமான விடையைக் கண்டுபிடிப்பதற்கு இவற்றின் குணமளிக்கும் தன்மைகளை தனித்தனியே அலசி ஒப்பிட்டுப் பார்ப்பதுதான்.

By: Srinivasan P M
Subscribe to Boldsky

தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது.

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது.

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியை சீர் செய்து, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

olive oil versus coconut oil for hair

சரி இப்போது ஆலிவ் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்க்கலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் ஸ்கால்பை சுத்தப்படுத்தி அதன் பிஎச் சமநிலையை மீட்டெடுக்கும்.

இது தலையில் இரத்த ஓட்டத்தினை அதிகரித்து அதன் மூலம் முடிக் கண்களின் மறு உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது.

எனவே மேற்கூறிய இந்த தகவ்ல்கள் இறுதியில் நம்மை "தேங்காய் எண்ணெய் சிறந்ததா அல்லது ஆலிவ் எண்ணெய் சிறந்ததா?" என்ற கேள்விக்கு இட்டுச் செல்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தலைமுடிக்கு சிறந்தது எது? தேங்காய் எண்ணெயா அல்லது ஆலிவ் எண்ணெயா?

இதற்கு விடை தேங்காய் எண்ணெய்தான். ஆமாம், இதில் நிலைக் கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) ஆலிவ் எண்ணெயை விட அதிகம் உள்ளது.
இதுபோக இதன் மூலக்கூறு எடை ஆலிவ் எண்ணெயைவிட குறைவு என்பதால் முடியினுள் எளிதாக உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.

தலைமுடிக்கு சிறந்தது எது? தேங்காய் எண்ணெயா அல்லது ஆலிவ் எண்ணெயா?

ஆலிவ் எண்ணெய் உங்கள் முடியை பிசுபிசுப்பாகவும் அடர்த்தியின்றியும் காட்டும். எனவே உங்களுக்கு உங்கள் ஸ்கால்பில் எண்ணெய் நீண்ட நேரம் தங்கவேண்டும் என்று விரும்பினால் நாங்கள் பரிந்துரைப்பது தேங்காய் எண்ணெயைத் தான்.

தேங்காய் எண்ணெயை எப்படி உபயோகிப்பது?

அரை கப் தேங்காய் எண்ணெயை எடுத்து அதை மெல்லிய தணலில் சூடாக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து தணலை அணைக்கவும். இந்த எண்ணை குளிரும் வரை காத்திருந்து வெதுவெதுப்பான பதத்தில் ஸ்கால்பில் தேய்க்கும்போது அது ஊட்டமளித்து, முடியை வலுவூட்டி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தேங்காய் எண்ணெயை எப்படி உபயோகிப்பது?

தேங்காய் எண்ணெயில் சில துளிகள் ரோஸ்மரி எண்ணெயை சேர்க்கவும் (5 துளிகளுக்கு மேல் வேண்டாம்). ரோஸ்மரி எண்ணையில் உள்ள ஊக்குவிக்கும் தன்மை தலைமுடியின் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இது உங்கள் தலை முடி பிசுபிசுப்பாவதைத் தடுக்கும்.

தேங்காய் எண்ணெயை எப்படி உபயோகிப்பது?

உங்கள் தலையில் ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர் தொற்றுக்கள் வளர்ச்சி மற்றும் பொடுகு இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சையை சேர்த்து பயன்படுத்தவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஈஸ்டை கொன்று பொடுகைப் போக்கி தலைமுடியை பளபளப்பாக்கும்.

தேங்காய் எண்ணெயை எப்படி உபயோகிப்பது?

தலையை சிக்கல் இல்லாமல் வாரவும். கூந்தலின் நடுப்பகுதியைப் பிடித்து சீப்பை முடியின் கடைசிவரை சீவி முடி உடையாமல் சிக்கலை நீக்கவும்.

தேங்காய் எண்ணெயை எப்படி உபயோகிப்பது?

ஒரு பஞ்சு உருண்டையை எண்ணெயில் முக்கி உங்கள் ஸ்கால்பில் நன்கு தாராளமாக தடவவும். ஸ்கால்ப் நன்கு எண்ணெயில் நனைந்தவுடன் எண்ணெயை உள்ளங்கையில் எடுத்து உங்கள் கூந்தலின் நுனி வரை தடவவும்.

தேங்காய் எண்ணெயை எப்படி உபயோகிப்பது?

தலையை சுழற்சியாக உங்களின் விரல் நுனிகளின் மென்மையான முனைகளைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து எண்ணெய் ஸ்கால்பின் உள்செல்லுமாறு தேய்க்கவும். உங்கள் கூந்தலை இறுக்கமில்லாமல் கட்டி ஒரு ஷவர் கேப் (தொப்பி) கொண்டு மூடவும். இந்த மாஸ்கை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.

தேங்காய் எண்ணெயை எப்படி உபயோகிப்பது?

பின்னர் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும். தலையில் உள்ள அதிக ஈரத்தை மென்மையாக ஒரு பழைய டவல் கொண்டு துடைக்கவும் அந்த டவல் கொண்டு முடியை கட்டவும். பின்னர் தானாக முடி காயுமாறு விடவும். நல்ல பலன்களுக்கு இந்த தேங்காய் எண்ணெய் மாஸ்கை வாரம் ஒரு முறை செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

olive oil versus coconut oil for hair

Is oilive oil better for your hair or coconut oil? An analysis between Olive oil and coconut oil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter