For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தலில் நுனி பிளவா? பப்பாளி பேக் ட்ரை பண்ணுங்க

|

கூந்தல் ஆரோக்கியத்தை கொண்டே உடலில் போதுமான சத்துக்கள் உள்ளதா என கண்டறியலாம். உடலில் சத்துக்கள் மிகக் குறைந்தால் முடி அடர்த்தி இல்லாமல், முடி உதிர்ந்து காணப்படும். கூந்தல் வளர்ச்சி மரபு ரீதியாகவும் சார்ந்து இருக்கும்.
நமது கூந்தல் முழுக்க புரோட்டினால் ஆனது. அதற்கு போஷாக்கினை விட்டமின்களும் தருகின்றன. இந்த இரு சத்துக்களும் குறைந்தால் முடி உதிரும்.

Natural remedies for split ends of hair

அதன் முதல் அறிகுறி, நுனி பிளவு. நுனி பிளவடையும்போது, சிறிது சிறிதாக அதிகமாகி, முடி உதிர்ந்து விடும். ஆகவே நுனி பிளவினை தடுக்க முயலுங்கள்.

அதிகப்படியான கூந்தல் வறட்சியினாலும், நுனி பிளவு ஏற்படும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். சரியான ஊட்டசத்து கொண்ட உணவினை சாப்பிட்டு, சிறிது பராமரிப்பிற்கு நேரம் ஒதுக்கினாலே கூந்தல் நுனிப் பிளவினை தடுக்கலாம்.

கூந்தல் மாஸ்க்:

பழுத்த பப்பாளி _ ஒரு கப்
தயிர் -அரை கப்

பப்பாளியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. அதோடு விட்டமின்களும் உள்ளது. இவை கூந்தலுக்கு போஷாக்கு அளித்து, பாதிப்பினை சரி செய்கிறது.

கூந்தலின் அமில காரத் தன்மையையும் சமன் செய்கிறது.
தயிர் இயற்கையிலேயே ஈரப்பதத்தை கூந்தலுக்கு அளிக்கிறது. அது ஸ்கால்ப்பில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்கிறது.

பப்பாளியை நன்றாக மசித்து அதனுடன் தயிர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் போடவும். கூந்தல் நுனி வரை போட வேண்டும்.

20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலசவும். அடர்த்தி குறைவான ஷாம்புவை உபயோகப்படுத்தவும்.

வாரம் இரு முறை செய்தால் இரு வாரங்களுக்குள் நுனி பிளவு நின்று கூந்தல் மிருதுவாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

English summary

Natural remedies for split ends of hair

Natural remedies for split ends of hair
Story first published: Sunday, May 29, 2016, 7:46 [IST]
Desktop Bottom Promotion