தீவிரமான பொடுகு தொல்லையா? வெங்காயச் சாறை உபயோகப்படுத்தும் வழிகள்!!

பொடுகை கட்டுப்படுத்தே வெங்காயச் சாறு மிகவும் உபயோகப்படுகிறது. வெங்காயச் சாறுடன் இன்னும் வேறு பொருட்கள் உபயோகப்படுத்தி எவ்வாறு பொடுகை கட்டுப்படுத்தலாம் என்பதுதான் இந்த கட்டுரை.

Subscribe to Boldsky

பொடுகு பலருக்கும் பிரச்சனை. அதுவும் சிலருகு குளிர்காலத்தில் தீவிரமாக இருக்கும். செதில் செதிலாக தலைச் சருமம் உதிரும்.

இதனை போக்க பொடுகு ஷாம்புவை போடுவது தவறு. ஏனென்றால் அவை கூந்தலை இன்னும் வறட்சியடையச் செய்து மோசமான விளைவை தந்துவிடும்.

How to use onion juice for sever dandruff

பொடுகிறது வெளிப்புற மற்றும் உட்புற மோசமான ஆரோக்கியமற்ற சூழ் நிலையே காரணமாகும். ஹார்மோன் பிரச்சனை, சுகாதாரமில்லாமலிருப்பது, இவையெல்லாம் உட்புற காரணங்கள்.

உபயோகப்படுத்தும் ஷாம்பு, நீர், கலரிங்க் ஆகிய்வை வெளிப்புற காரணங்கள். இதனை எப்படி வெங்காயச் சாறு குணமாக்கும் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பாசிப்பயிறுடன் :

பச்சைப் பயிறு பொடி செய்து அதில் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள். விரைவில் பலன் தெரியும்.

பீட்ரூட்டுடன் :

பீட்ரூட் பொடுகு சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டை சாறெடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து தலையில் த்டவுங்கள்.

புடலங்காயுடன் :

புடலங்காயை சாறெடுத்து அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் த்டவி 20 நிமிடம் கழித்து அலசுங்கள். பொடுகை கட்டுப்படுத்தும்.

வெந்தயத்துடன் :

2 ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு காணாமல் போய்விடும்.

கற்றாழை சாறுடன் :

கற்றாழை ஜெல்லுடன் வெங்காயச் சாறு கலந்து தலைக்கு த்டவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இது நல்ல பலனைத் தரும். வாரம் 3 நாட்கள் செய்யலாம்.

எலுமிச்சை சாறுடன் :

தீவிரமாக பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாறையும் வெங்காயச் சாறையும் சம அளவு எடுத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். பலன் கிடைக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use onion juice for sever dandruff

6 ways of using Onion juice for sever dandruff,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter