நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

நரை முடி இயற்கையானதுதான். அதனை கருப்பாக மாற்றி வயதை மறைக்க நினைப்போம். அது தவறில்லை. ஆனால் கெமிக்கல் டை பக்கம் போய்விடாதீர்கள். இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள். நிச்சயம் பலன் தருபவை.

உங்கள் கூந்தலின் மயிர்கால்கள் கெரட்டின் என்ற புரோட்டினால் ஆனது. கூந்தல் வளரும்போது மெலனோசைட் சுரப்பி மயிர்கால்களுக்கு மெலனின் என்ற ஹார்மோனை செலுத்துகிறது. இதனால் கூந்தல் கருமையாகும்.

எப்போது மெலனோசைட் சுரப்பது குறைகிறதோ அப்போது  கூந்தலில் கருப்பு நிறமில்லாமல் வெள்ளையாகிறது.

How to turn grey hair into black using natural ingredients

இதற்கு கெமிக்கல் நிறைந்த டைக்களை உபயோகிப்பது எத்தனை அபாயம்
தரும் என்பதை உணர்கிறீர்களா?

உங்களுக்கு வெள்ளை முடியை கருமையாக மாற்றச் செய்யும் மாயத்தை நமது இயற்கையான மூலிகைகள் பெற்றுள்ளன. இவை மல்னோசைட்டை தூண்டி கூந்தலின் நிறத்தை மாற்றும். எப்படி என பார்க்கலாம்.

 • கற்பூர வள்ளி இலை :

  கற்பூர வள்ளி இலை :

  கற்பூர வள்ளி இலை :

  கற்பூர வள்ளி இலைகளை நீரில் 20 நிமிடம் கொதிக்க வையுங்கள்.( உங்கள் தலைமுடிக்கேற்ற அளவு) . அதன் பின் ஆறியதும் வடிகட்டி தலைக்கு அந்த நீரை தடவுங்கள். 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். சில வாரங்கள் தொடர்ச்சியாக செய்தால் நரை முடி மறைவதை காணலாம்.

 • பீர்க்கங்காய் :

  பீர்க்கங்காய் :

  பீர்க்கங்காய் :

  பீர்க்கங்காயை நன்றாக வெயிலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போடவும். 3 நாட்களுக்கு அப்படியே வைத்திடுங்கள்.

  அதன் பின் எண்ணயை குறைந்த தீயில் கொதிக்கவிடுங்கள். கருமையான நிறத்தில் திட்டுகளாக எண்ணெயில் மிதக்கும் வரை கொதிக்க விடவும்.

  பின்னர் இறக்கி ஆற வைத்து அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து 2 மணீ நேரம் கழித்து தலை முடியை அலசுங்கள்.

   

 • கருப்பு தேயிலை டை :

  கருப்பு தேயிலை டை :

  கருப்பு தேயிலை டை :

  கருப்பு தேயிலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
  நீர் -

  புதிதான கருப்பு தே நீர் இலைகள் இதற்கு வேண்டும். அவற்றை நீரில் போட்டு கொதிக்க விடுங்கள்.20 நிமிடம் ஆனதும் அடுப்பை அணைத்து நீரை ஆறவிட்டபின் வடிக்கட்ட வேப்ண்டும்.

  இதனை தலையில் தேய்த்து 1 மணி நேரம் பிறகு தலைமுடியை வெறுமனே அலசுங்கள்.

   

 • தோட்டத்து மண் :

  தோட்டத்து மண் :

  தோட்டத்து மண் :

  தோட்டத்திலிருக்கும் ஆழமான மண்ணை தோண்டி எடுத்து நீரில் கரைத்திடுங்கள். பின்னர் அதனை வடிகட்டி அந்த வடிகட்டிய நீரை தலையில் தேய்க்கவும்.

  10 நிமிடம் கழித்து நன்றாக தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் முடியும் நன்றாக வளரும். கருமையும் காணாமல் போகும்.

   

 • எள்ளு :

  எள்ளு :

  எள்ளு :

  எள்ளுவை நீரில் ஊற வையுங்கள். அரை மணி நேரம் கழித்து அதனை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதனை தலையில் த்டவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிக்கவும்.

Read In English

Amazing natural recipes to turning grey hair into black.
Please Wait while comments are loading...