For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிருதுவாக நீளமான கூந்தல் கிடைக்க வேண்டுமா? இதைப் படிங்க!

|

நீளமான கூந்தல் எந்த வித பாதிப்பும் இல்லாம, பட்டுபோல் மின்னியபடி இருந்தா, அதை எல்லாரும் திரும்பி பார்க்க வைக்கும். நமக்கு இது மாதிரி கூந்தல் கிடைக்காதா என ஒரு நொடியாவது யோசிப்போம். அப்படிப்பட்ட கூந்தல் கிடைக்கனுமா?

உங்களுக்கு அப்படிப்பட்ட கூந்தல் கிடைக்க இங்கே குறிப்பிட்டிருக்கிற குறிப்புகள் உபயோகமாக இருக்கலாம்.
ஏனெனில் இங்கே சொல்லப்பட்டிருக்கிற ஒவ்வொன்றுமே கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும். பொடுகினை விரட்டும் . கூந்தலுக்கு ஊட்டம் அளித்து, அடர்த்தியாக வளரச் செய்யும்.

அப்படி எந்த மாதிரியான குறிப்புகள் அவை என்று தெரிந்து கொள்ள விருப்பமா? வாருங்கள் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு+ தேங்காய் எண்ணெய்

எலுமிச்சை சாறு+ தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் எலுமிச்சை சாறோடு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து, இந்த கலவையை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் கழிந்த பின் முடியை நல்ல தரமான ஷாம்பு கொண்டு அலசவும்.

வெள்ளைக் கரு + ஆலிவ் எண்ணெய்

வெள்ளைக் கரு + ஆலிவ் எண்ணெய்

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன், தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து, இந்த கலவையை தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து , தலையை அலசவும்.

ஹென்னா + தயிர்

ஹென்னா + தயிர்

4 டேபிள் ஸ்பூன் ஹென்னாவுடன், 2 ஸ்பூன் தயிர் மற்றும் 2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலசவும்.

நெல்லிக்காய் சாறு + எலுமிச்சை

நெல்லிக்காய் சாறு + எலுமிச்சை

நெல்லிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் சம அளவு எடுத்து தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து தலை முடியை அலசவும்.

ஓட்ஸ் + எண்ணெய்

ஓட்ஸ் + எண்ணெய்

ஓட்ஸ் கால் கப் எடுத்து நன்றாக கைகளினால் தேய்த்து பொடித்துக் கொள்ளுங்கள். அதில் பாதாம் எண்ணெய் கலந்து, இந்த கலவையை ஸ்கால்ப்பில் தேய்த்து மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும்.

தேங்காய் எண்ணெய் + தேன்

தேங்காய் எண்ணெய் + தேன்

தேங்காய் எண்ணெய் தேவையான அளவு எடுத்து, அதில் 2 ஸ்பூன் தேனை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊற விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade hair mask to grow long hair

Homemade hair mask to grow long hair
Story first published: Tuesday, June 28, 2016, 17:45 [IST]
Desktop Bottom Promotion