For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரை முடிக்கு இயற்கையான டை எப்படி செய்வது என தெரியுமா?

|

நரை முடியோ, இள நரையோ, பார்க்க அழகை தருவதில்லை. கெமிக்கல் கலந்த டை உபயோகிப்பதால் நிறைய கெடுதல்கள் வர வாய்ப்புண்டு. இயற்கையாக டை நீங்களே தயாரிக்க முடியும். வீட்டிலேயே முயன்று பாருங்கள். நிச்சயம் பலன் அளிக்கும். கெடுதல் தராது. பக்க விளைவுகளும் இல்லை.

Home remedy for grey hair

திரிபலாதி சூரணம் :

ஆயுர் வேத கடைகளில் திரிபலாதி சூரணம் கிடைக்கும். அதனை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும்.

அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ, முடி கருப்பாகத் தெரியும். இது ஒரு புதிய முயற்சியே. முடிக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாது. கண்களுக்கும்,தோலுக்கும் நல்லது.

இள நரைக்கு :

வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.

மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை முன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி நன்றாக கருப்பாக வளரும்.

மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கருப்பாகும். ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்

English summary

Home remedy for grey hair

Home remedy for grey hair
Story first published: Saturday, July 23, 2016, 17:36 [IST]
Desktop Bottom Promotion