For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹேர் பேக்குகள்!

By Maha
|

கோடையில் சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தலைமுடியைப் பாதுகாக்க சிறந்த வழி ஹேர் பேக்குகள் போடுவது தான். தலைக்கு ஹேர் பேக்குகள் போடுவதனால், மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, தலைமுடி வலிமையுடனும், நன்கு வளர்ச்சியும் பெறும்.

குறிப்பாக கோடையில் என்ன தான் வியர்வை வெளியேறினாலும், தலைமுடி வறட்சியுடன் காணப்படும். மேலும் பலர் தலைமுடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுவார்கள். இதற்கெல்லாம் ஹேர் பேக்குகள் நல்ல பலனைத் தரும்.

இங்கு கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஸ்கால்ப்பை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் சில ஹேர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து, வாரத்திற்கு 2 முறை கோடையில் பின்பற்றி வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர்

தயிர்

உங்கள் தலைமுடி மென்மையாகவும், பட்டுப் போன்றும் காட்சியளிக்க வேண்டுமா? அப்படியெனில் கால்சியம், புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தயிரை வாரத்திற்கு 2 முறை தலைக்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலசுங்கள்.

மயோனைஸ்

மயோனைஸ்

மனோனைஸை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் முடியின் வேர்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சியும் மேம்படும்.

பால்

பால்

குளிர்ச்சியான பாலை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஒரு துணியால் தலையை சுற்றிக் கொண்டு, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையால் தலைமுடி நன்கு மென்மையுடன் இருக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸை பொடி செய்து பால் சேர்த்து நீர் போன்று கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, உங்கள் முடியில் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

வெள்ளை வெங்காயம்

வெள்ளை வெங்காயம்

வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, வாரத்திற்கு இரண்டு முறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து அலச, பொடுகுத் தொல்லை நீங்கி, தலைமுடியின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் மேம்படும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது முடியின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக கோடையில் முட்டையின் வெள்ளைக்கருவை ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

அரிசி தண்ணீர்

அரிசி தண்ணீர்

அரிசி கழுவிய தண்ணீரும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும், தரத்தையும் அதிகரிக்கும். மேலும் அரிசி தண்ணீர் ஸ்கால்ப்பில் உள்ள நோய்த்தொற்றுக்களை நீக்கி, பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை தரும். முக்கியமாக அரிசி நீரைக் கொண்டு தலைமுடியை அலசி 10 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவினால், முடி பட்டுப் போன்று இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Packs That Make Your Hair Soft In Summer

With the power in these white hair packs, your tresses will soon turn out to be soft and gorgeous. You must pamper your locks with these packs this summer.
Desktop Bottom Promotion