For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீகைக்காயை எப்படி உபயோகித்தால் நீளமான கூந்தல் கிடைக்கும் என தெரியுமா?

By Hemalatha
|

சீகைக்காயை தெரியாதவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இருக்கவே முடியாது. ஆனால் அதனை உபயோகப்படுத்துவது இந்த தலைமுறையில் குறைந்துவிட்டது.

யார் அதை எல்லாம் போடுவது என்று சலித்துக் கொண்டு, மனதை மயக்கும் ஷாம்புகள் மீது மோகம் கொண்டு, அதனை உபயோகபடுத்துகிறீர்கள். அவைகளால், நாளுக்கு நாள் உங்கள் கூந்தல் வளர்ச்சி குறைந்து வருவதை நீங்கள் பார்த்துக் கொண்டேதானே இருக்கிறீர்கள்.

Amazing benefits of shekakai for long hair

சீகைக்காயில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால், உங்களுக்கு சீகைக்காயை பிடித்துப் போய்விடும்.
சீகைக்காயில் விட்டமின் ஏ, சி, டி, கே ஆகியவை உள்ளது.

போதாதற்கு ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் அதிகம் உள்ளது. இவை வேர்க்கால்களுக்கு ஊக்கம் அளித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

பொடுகினை அண்ட விடாது. பேன் தொல்லைகள் இருக்காது. முக்கியமாய் கூந்தலுக்கும், ஸ்கால்பிற்கும் பாதகம் தராது. இதற்கு மேலும் கூந்தல் வளர வேறென்ன வேண்டும். இனி சீகைக்காயை எப்படி உபயோகபப்டுத்துவது என பார்க்கலாம்.

தலைக் குளியல் :

சீகைக்காயை தலைக்கு எண்ணெய் வைக்காமல் நேரடியாக பயன்படுத்தக் கூடது. இது முடியில் வறட்சியை ஏற்படுத்தி விடும். முந்தைய நாள் இரவு எண்ணெய் வைத்து மறு நாள் சீகைக்காயை பயன்படுத்தினால், சில வாரங்களிலேயே முடி உதிர்தல் குறைந்து விடும். அடர்த்தியாய் முடி வளரத் தொடங்கும்.

முடி வளர்ச்சிக்கு :

சீகைக்காய் பொடி- 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 கப்
துளசி எண்ணெய் - அரை கப்

ஒரு கப் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடாக்கி, அதில் துளசி எண்ணெய் மற்றும் சீகைக்காயை போட்டு நன்றாக கலந்து, ஒரு பாட்டிலில் மூடி வையுங்கள்.

இதனை வெளிச்சம் படாத ஒரு அறையில் சில வாரங்களுக்கு வைத்து விடுங்கள். தினமும் பாட்டிலை நன்றாக குலுக்குங்கள்.

2 வாரங்கள் கழித்து இந்த எண்ணெயை தலையில் நன்றாக தேய்த்து, மசாஜ் செய்யுங்கள். முடி வளர்ச்சி துரிதமாய் நடக்கும்.

சீகைக்காய் ஹேர் பேக் :

சீகைக்காயை யோகார்ட்டுடன் கலந்து தலையில் மாஸ்க் போல போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து, நன்றாக அலசவும். இது கூந்தலின் வேர்கால்களை நன்றாக தூண்டும். முடி வளர்ச்சியும் அபரிதமாக இருக்கும். முயன்று பாருங்கள்.

சீகைக்காயின் பலன்கள் :

சீகைக்காய், முடிக்கு ஊட்டமளித்து, சிறந்த போஷாக்கினையும், கூந்தலுக்கு மினிமினுப்பையும் தரும்.
முடி உதிர்வதற்கு அதிகப்படியான எண்ணெய் சுரத்தலும் காரணமாக இருக்கும்.

அவ்வகையில் சீகைக்காய், அதிக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும்.
இது நரைமுடி வளர்வதை தடுக்கும். பொடுகை கட்டுப் படுத்தும்.

நீங்கள் இதற்கு முன் சீகைக்காயை உபயோகப்படுத்தியது இல்லையென்றால், முயற்சி செய்து பாருங்கள். என்றைக்காவது ஒரு நாள் உபயோகிப்பது எதுவுமே பயன் தராது. தொடர்ந்து உபயோகியுங்கள். முடி வளர்ச்சி எந்த அளவிற்கு உள்ளது என பிறகு பாருங்கள்.

English summary

Amazing benefits of shekakai for long hair

Amazing benefits of shekakai for long hair
Story first published: Monday, June 6, 2016, 18:17 [IST]
Desktop Bottom Promotion