For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாம்புவா? இல்லை கண்டிஷனரா? எதை முதலில் பயன்படுத்த வேண்டும்?

கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டு பராமரிக்கும்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாமல் விளம்பரங்களில் வருவதைப் பார்த்து கண்ணை மூடி வாங்குகிறோம். ஆனால் அது தவறு. எப்படி என பார்க்கலாம்.

|

தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும் கண்டிஷனர் போட வேண்டும் என நீங்கள் அறிந்திருப்பீர்கல். ஆனால் அதை ஏன் போடவேண்டும் எப்படி போட வேண்டும் என தெரிவதில்லை.

8 Mistakes you are making with Conditioner

கண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து பலம் அளித்தாலும் அதனை தவ்றாக உபயோகபப்டுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது. அதனை உபயோகப்படுத்தும்போது நீங்கள் செய்யும் தவறுகள் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்கால்ப்பில் போடுவது :

ஸ்கால்ப்பில் போடுவது :

நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஸ்கால்ப்பில் உயிரோட்டம் இருப்பதால் அங்கே கண்டிஷனர் தேவையில்லை. இயற்கை எண்ணெய் சுரப்பதால் வேர்கால்களை நமது சருமம் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் அங்கே கண்டிஷனர் போடும்போது கூந்தல் பலமிழந்து , உதிர்தல் உண்டாகிறது.

 அதிகம் பயன்படுத்துதல் :

அதிகம் பயன்படுத்துதல் :

மிகக் குறைந்த அளவே கண்டிஷனர் போதுமானது. ஆனால் அதிகமாக உபயோகபடுத்தும்போது உங்கல் முடியை ஈங்கள் இழக்க வேண்டியது வரும்.

தொடர்ந்து பயனபடுத்தவில்லையென்றால் :

தொடர்ந்து பயனபடுத்தவில்லையென்றால் :

உங்களுக்கு கூந்தல் நல்ல நிலையில் இருந்தாலும், ஷாம்பு உபயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால் ஷாம்பு உங்கள் கூந்தலில் அதிக வறட்சியை கொடுத்து பலமிழக்கச் செய்யும். ஆகவே ஷாம்பு உபயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் உபயோகித்தால் முடி உதிர்வை தவிர்க்கலாம்.

ஆழ்ந்த கண்டிஷனர் :

ஆழ்ந்த கண்டிஷனர் :

உங்கள் கூந்தலுக்கு கட்டாயம் ஆழ்ந்த கண்டிஷனர் தரப்பட வேண்டும். இதனால் கூந்தல் வறட்சி, முடி உடைதல் ஆகிய்வற்றை தவிர்க்கலாம். ஆலிவ் எண்ணெய் மற்றும் ஜொஜொபா என்ணெய் , முட்டை ஆகியவை கலந்து செய்த கண்டிஷனர் உங்கள் கூந்தலுக்கு வலுவூட்டும்.

டூ- இன் -ஒன் :

டூ- இன் -ஒன் :

விளம்பரங்களில் வரும் டூ இன் ஒன் ஷாம்புக்கள் உங்கள் கூந்தலுக்கு பலம் தராது. ஏனென்றால் கூந்தலின் நுனிக்கு கண்டிஷனர் அதிகம் தேவை. ஷாம்புக்களில் இருக்கும் கண்டிஷனர் பயன் தராது.

அதிக நேரம் இருக்கக் கூடாது :

அதிக நேரம் இருக்கக் கூடாது :

கண்டிஷனர் பயன்படுத்தி அதிக நேரம் அப்படியே விடக் கூடாது. அதிகபட்சம் 2 நிமிடங்கள் இருந்தால் போதுமானது என்று கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எதை முதலில் பயன்படுத்துவது?

எதை முதலில் பயன்படுத்துவது?

நாம் அனைவரும் ஷாம்பு பயன்படுத்தி பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் கண்டிஷனர் பயன்படுத்தி சில நிமிடங்களில் தலையை அலசி அதன்பின் ஷாம்புவை போடவேண்டும்.. அதாவது கண்டிஷனரை கழுவத்தான் ஷாம்புவை பயன்படுத்த வெண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Mistakes you are making with Conditioner

8 Mistakes you are making with Conditioner
Story first published: Monday, December 19, 2016, 16:50 [IST]
Desktop Bottom Promotion